/indian-express-tamil/media/media_files/2025/04/07/g6iAa87x0KpMAiHM6JEY.jpg)
-
Apr 07, 2025 17:46 IST
கோவையில் கிறிஸ்தவ மதபோதகர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு; கைது செய்ய தனிப்படை அமைத்த போலீஸ்
சிறுமிகளை பாலியல் தாக்குதல் செய்த புகாரில் மத போதகர் ஜான் ஜெயபராஜ் (37) மீது கோவை மாநகரப் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள ஜான் ஜெயபராஜைத் தேட போலீச் தனிப்படை அமைத்துள்ளது. கடந்த ஆண்டு மே 21-ம் தேதி அவரின் வீட்டில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தற்போது இதனை வீடிட்ல் கூறியதை அடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
Apr 07, 2025 17:38 IST
தர்மபுரியில் யானையை வேட்டை சந்தேகம்; விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம்
தர்மபுரியில் யானையை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் அடைந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பலியானவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மாலை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய கோரி பலியானவர் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
யானை வேட்டை குறித்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் உடல் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கை வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என செந்திலின் மனைவி சித்ரா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
-
Apr 07, 2025 17:18 IST
நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
நாமக்கல் மாவட்டம், ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி; விவசாய நிலத்தில் இருந்த வேலியைத் தொட்டபோது 5 வயது சிறுவன், 3 வயது சிறுமி உயிரிழந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற பாட்டி இளஞ்சியமும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Apr 07, 2025 16:27 IST
திருச்சி நீதிமன்றத்தில் நாளை காலை சீமான் ஆஜராக உத்தரவு
டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில், நாளை காலை சீமான் ஆஜராக வேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நாளை காலை சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 07, 2025 13:51 IST
"2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
Apr 07, 2025 13:08 IST
சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம் எச்சரிக்கை
திருச்சி டிஐஜி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சீமான் இன்று(ஏப்.7) மாலை 5 மணிக்குள் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ஆஜராகாவிட்டால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் - திருச்சி குற்றவியல் நீதிமன்றம்; தன்னை பற்றி நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக டிஐஜி வருண் குமார் வழக்கு; டிஐஜி வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் சீமான் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை
-
Apr 07, 2025 12:26 IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
-
Apr 07, 2025 11:24 IST
புதுக்கோட்டை: பெற்ற குழந்தையை கொன்ற தாய்
புதுக்கோட்டை அருகே தாயே குழந்தையை தண்ணீர் பேரலில் அமுக்கி கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த தாய் லாவண்யா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
-
Apr 07, 2025 11:13 IST
கள்ளக்குறிச்சி: தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தர்பூசணிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், இதுவரை இல்லாத வகையில் தர்பூசணியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் பழங்கள் நிலத்திலேயே அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
Apr 07, 2025 11:05 IST
வாணியம்பாடி: பள்ளிக் காவலாளி குத்திக்கொலை
வாணியம்பாடியில் தனியார் பள்ளிக் காவலாளியைப் பட்டப்பகலில் மர்மநபர்கள் குத்திக்கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக ஷாகிராபாத் பகுதியைச்சேர்ந்த இஃர்பான் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று(ஏப். 7) காலை காலை வழக்கம்போல் பள்ளிக்கு மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துவந்த மர்மநபர்கள் திடீரென இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த இர்ஃபான் சம்பவ இடத்திலே பலியானார்.
-
Apr 07, 2025 10:53 IST
கோவையில் அமலாக்கத்துறையினர் சோதனை
மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 3 கார்களில் வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Apr 07, 2025 10:45 IST
30 நிமிடங்களாக மூடப்பட்ட ரயில்வே கேட்
திருவண்ணாமலை - அவலூர்பேட்டை ரயில்வே கேட் அருகே ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. ரயில்வே கேட் 30 நிமிடங்களுக்கும் மேலாக மூடி இருந்ததால் தண்டவாளங்களில் இறங்கி மக்கள் நடந்து சென்றன.
-
Apr 07, 2025 10:14 IST
காசி விஸ்வநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம் செய்தனர். அதிகாலை 6ம் கால யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று, ராஜகோபுரங்கள் விமான கோபுரங்கள் மூலஸ்தான பிரதான மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
Apr 07, 2025 09:51 IST
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் கோவையில் அமைச்சரின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Apr 07, 2025 09:04 IST
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Apr 07, 2025 09:03 IST
தந்தையை செங்கல்லால் தாக்கிய மகன் கைது.
கடலூர் பண்ருட்டி அருகே மது அருந்த பணம் கேட்டு தந்தையை செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகன் மகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 07, 2025 09:02 IST
ஒகேனக்கல் நீர்வரத்து
ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
Apr 07, 2025 09:02 IST
ஆழித்தேரோட்டம் தொடக்கம்
திருவாரூர் தியாகராஜர் ஆலய பங்குனி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரோட்டம் திருவாரூரில் இன்று நடைபெறவுள்ளது. தேரை வடம்பிடித்து இழுக்க குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்ட தேர் 4 வீதிகள் வழியாக வலம் வரும். 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Apr 07, 2025 09:01 IST
தெருநாய் கடித்து ஆடுகள் பலி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பாம்பம்பாளையம் கிராமத்தில், தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு, 7 ஆடுகள் காயமடைந்தார். பழனிசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் நள்ளிரவில் தெருநாய்கள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியுள்ளன. சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 07, 2025 08:59 IST
மழைநீரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
மதுரை வைகை ஆற்று மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்தபோது தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட ராஜேஷ் உயிரிழந்தார்.
-
Apr 07, 2025 08:58 IST
தனியார் பள்ளி காவலாளி குத்திக்கொலை
வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி இர்பான் என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இர்பான் என்பவரை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள்ப்பியோடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.