தமிழக காவல்துறையில் சட்டம் குழுங்கு பிரிவு டிஜிபி-யாக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி வைகுந்த். தனது ஓய்வுக்கு பிறகு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பிஷப் கார்டனில் வசித்து வந்த இவருக்கு விஜய் (42) என்ற மகன் உள்ளார். மருத்துவரான இவர் கடந்த மாதம் 12-ந் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஹொட்டலில் சாப்பிடுவதற்காக பில்லா என்பரின் ஆட்டோவில் சென்றுள்ளார்.
தொடர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டிற்கு அருகில், பிரகதி தெரு வந்தவுடன் ஆட்டோ டிரைவர் பில்லாவுக்கும், விஜய்-க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஆட்டோ டிரைவர் பில்லா தனது நண்பர் ஒருவரை அழைத்து, விஜய்யை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விஜய் சற்று சோர்டைந்த நிலையில், தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் பில்லாவும் அவரது நண்பரும் தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் அப்போது வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தத்தினால், காவல்துறையில் புகார் அளிக்காத விஜய், தற்போது திரும்பிவந்துள்ள நிலையில், நேற்று மாலை சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவர் பில்லா மற்றும், அவருடைய நண்பர் மீது 341 (தவறான கட்டுப்பாட்டுக்கான தண்டனை) 294 பி (பொது இடத்தில் மோசமான வார்த்தைகளை உச்சரித்தல்), 323 (323) ஐபிசியின் 506 (குற்றவியல் மிரட்டல்). ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"