ஆன்லைனில் பட்டப்படிப்பு; அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவங்களுக்கு அனுமதி

11 TN universities to offer online degrees from next academic year Tamil News: ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புகளை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவங்களுக்கு அனுமதி பல்கலைக்கழக ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Tamilnadu news in tamil: 11 TN universities to offer online degrees from next academic year

Tamilnadu news in tamil: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவங்களுக்கு முழு அளவிலான ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்க பல்கலைக்கழக ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மாணவர்கள் எம்.சி.ஏ, எம்பிஏ, பிபிஏ, பி.காம், பிசிஏ, எம்ஏ மற்றும் எம்எஸ்சி உள்ளிட்ட கிட்டத்தட்ட 80 ஆன்லைன் படிப்புகளில் சேர இந்த ஆண்டு ஜூலை முதல் வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய முயற்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவம் உள்ள 38 கல்வி நிறுவனங்கள் முன் அனுமதி பெற தேவையில்லை.

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள தமிழகத்தை சேர்ந்த கல்வி 6 பல்கலைக்கழகங்கள் இந்த புதிய திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் துவக்க உள்ள நிலையில், அவற்றுக்கான ஸ்டுடியோக்கள் மற்றும் வகுப்பறைகள் தயாராகி வருகின்றன. மேலும் இந்த ஆன்லைன் திட்டங்களுக்கான உள்ளடக்கத்தைத் தயாரிக்க நிபுணர்களை நியமித்தும் வருகின்றன.

பிரபல கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) டிஜிட்டல் மார்க்கெட்டில் பிபிஏ, வணிக பகுப்பாய்வில் எம்பிஏ, மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகத்தில் எம்பிஏ உள்ளிட்ட எட்டு ஆன்லைன் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து உள்ளது. பிப்ரவரியில் எம்பிஏ ஆன்லைன் திட்டத்தை இந்த நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில், மீதமுள்ள திட்டங்களை ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.

“2020 முதல் ஹைடெக் ஆய்வகம் மற்றும் கல்வித் தயாரிப்பு போன்ற தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினோம். இந்த நிறுவனம் மாணவர்களுக்கு முழுமையான கற்றலை வழங்கக்கூடிய எஸ்ஆர்எம் ஆன்லைன் கற்றல் தளத்தையும் தயாரித்து உள்ளது” என்று எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) ஆன்லைன் கல்வி இயக்குனர் மனோரஞ்சன் பொன் ராம் தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (HITS) 2021-22 முதல் ஆன்லைன் பட்டப்படிப்புகளைத் தொடங்க திறந்த மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தைத் தொடங்கியுள்ளது. “நாங்கள் கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறோம் மற்றும் ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டங்களை வழங்க நிபுணர்களை நியமிக்கிறோம். பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் வீட்டுத் தயாரிப்பாளர்களை மையமாகக் கொண்டு முடிந்தவரை பல திட்டங்களை நாங்கள் சேர்ப்போம், ”என்று இந்த நிறுவனத்தின் சார்பு துணைவேந்தர் ஆர்.டபிள்யூ அலெக்சாண்டர் ஜேசுதாசன் கூறியுள்ளார்.

சாஸ்த்ரா கல்வி நிறுவனம் 8 ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்க அனுமதி பெற்றுள்ளது. பி.காம் மற்றும் பி.சி.ஏ போன்ற ஆன்லைன் படிப்புகளை துவங்கியுள்ளது. “எங்கள் ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டங்கள் AAA இயக்கப்படும் (எந்த இடமும், எந்த சாதனமும் எந்த நேரத்திலும்) பல்வேறு பணிபுரியும் நிபுணர்களின் கோரிக்கைகளை மையமாகக் கொண்டவை” என்று சாஸ்திராவின் துணைவேந்தர் எஸ்.எஸ் வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news in tamil 11 tn universities to offer online degrees from next academic year

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com