/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-12T142631.523.jpg)
Tamilnadu news in tamil: திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, நேற்று முன்தினம் வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், 10க்கு மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து வினோத்தை மிரட்டியதாகவும், பிரபாகரன் வீடியோ குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வைத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்த போலீசார் ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ப்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/tamil-indian-express-2021-06-12T142213.486-1.jpg)
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், சாட்டை துரைமுருகன் மீது மேலும் சில புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததற்காகவும், மைனர் குழந்தைகளின் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐபிசி பிரிவு 153ஏ, 504, 505(1)(பி)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.