scorecardresearch

நடிகை ரோஜாவுக்கு சென்னையில் ஆபரேஷன்

Actress Roja hospitalised in Chennai Tamil News: நடிகை ரோஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் அறுவை சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் கணவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Tamilnadu news in tamil actress Roja hospitalised at Chennai’s private hospital

Tamilnadu news in tamil: நடிகை ரோஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் அறுவை சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் கணவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள்கிழமை, நடிகையும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த செய்தி அறிந்த ரோஜாவின் ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்களில் பலர் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

இந்த நிலையில், ரோஜாவின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி, வாட்சாப் க்ரூப் வழியாக ஒரு ஆடியோவை பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அதில், ‘ரோஜா இரண்டு பெரிய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் அவரது உடல்நிலை சீராகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றும் மருத்துவமனைக்கு குடும்ப உறுப்பினர்களை தவிர யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த அறுவைச் சிகிச்சை அவருக்கு கடந்த ஆண்டே செய்யப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தள்ளிவைத்தோம். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu news in tamil actress roja hospitalised at chennais private hospital