Tamilnadu news in tamil: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆகவும் இருந்த நிலையில் அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டு வந்தது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 59 வயது வரை பணி நியமனம் மேற்கொள்ளலாம் என பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதற்கு மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பு 40 என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததால் ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், பள்ளி ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் பள்ளிக் கல்விச் செயலாளர் ககர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் வாரியம் எந்த ஆட்சேர்ப்புத் தேர்வுகளையும் நடத்தாததால், பள்ளி வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். வயது வரம்பு காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.