/tamil-ie/media/media_files/uploads/2021/05/COVID-19-Testing-2.jpg)
Chennai city Tamil News: நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினந்தோறும் 6,000 மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர்களின் விகிதம் 23.6% ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒவ்வொரு நூறாவது நபர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்று பாதிப்பு கணிசமா அதிகரித்து வருவது தொடர்பாக, படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க அரசு தயாராகி வரும் நிலையில், நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று புதன்கிழமை மட்டும் 6,291 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 58 பேர் பலியாகியுள்ளனர். எனவே ஆரம்பகால சிகிச்சைக்கு கோவிட் பராமரிப்பு மையங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக;
பெருங்குடி: 14
சோழிங்கநல்லூர்: 11
அடையார்: 11
ஆலந்தூர்: 11
வளசரவாக்கம்: 11
அம்பத்தூர்: 11
தண்டையார்பேட்டை: 7
ராயபுரம்: 6
திருவொற்றியூர்: 6
மணலி: 5
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.