Chennai city Tamil News: சென்னை புழலை சேர்ந்தவர் ஜனதுல்லா ஃபிர்தோஸ். 22 வயதான இவருக்கு அவரின் மாமாவுடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார். ஆனால் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத ஜனதுல்லா தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என அவரது பெற்றோரிடம் பல முறை கூறியுள்ளார். இதற்கிடையில், ஜனதுல்லா ஃபிர்தோஸ்க்கும் அவரது மாமாவுக்கும் நேற்று திருமணம் நடைபெறும் என தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோலாகலமாக ஆரம்பமாகிய திருமண விழா மணப்பெண்க்கு தாலிக்காட்டுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போலீசாரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. போலீசார் ஏன் திருமணத்தை நிறுத்துகிறார்கள் என புரிமால் உறவினர்கள் அனைவரும் திகைத்தனர். ஆனால் இதற்கு காரணம் மணப்பெண் தான் என்று பின்னர் தான் தெரிய வந்துள்ளது.
திருமணம் நாளன்று மணப்பெண் ஜனதுல்லா ஒரு வாட்ஸ்அப் வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் மணமகன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் இந்த திருமணத்தில் தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், திருமணம் நடந்தால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என்றும் கூறியுள்ளார். "திட்டமிட்டபடி திருமணம் நடந்தால், எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் (தற்கொலை செய்து கொள்ளவதாக)" என்றும் அந்த வீடியோவில் ஜனதுல்லா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதாக புழல் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் ஆகியோரின் மீது ஏற்கனவே புகார் அளித்தும் உள்ளார். இந்த வீடியோவை ஆதரமாகக் கொண்டு திருமணத்தை நிறுத்திய போலீசார், மணப்பெண்ணின் பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதோடு மணப்பெண்ணை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர், மணப்பெண்ணை சந்த்தித்த போலீசார் இனி இது போன்ற தொந்தரவு நேர்ந்தால் திரும்ப அழைக்கலாம் என்றும், இது போன்ற பிரச்சனைகளுக்கு எந்தவொரு விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“