Tamilnadu news in tamil: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93% - ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் வீடுகள், மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,109 - ஆக இருந்த நிலையில், தற்போது அது 7,903 - ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,289 ஆக இருந்து. இதில் பரிசோதனையில் நெகடிவ் என அறியப்பட்ட 668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டடோர்களில் பெரும்பாலோனர் புதியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறப்பு விகிதம் 1.5% க்கும் கீழ் குறையாமல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒன்பது நோயாளிகள் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 12,599 ஆக அதிகரித்துள்ளது. இது மகாராஷ்டிராவுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக (53,300) உள்ளது. உயிரிழந்த ஒன்பது பேரில், இருவருக்கும் கொமொர்பிடிட்டிகள் இல்லை, மேலும் 55 வயதுக்குக் கீழே இருந்தவர்கள்.
தலைநகர் சென்னையில் அதிக இறப்பு விகிதமும் (4 இறப்புகள்) , புதியதாக தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும் (466) அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு (132), திருவள்ளூர் (72), மற்றும் காஞ்சிபுரம் (32) போன்ற மாவட்டத்தில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படுகிறது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை இரன்டு இலக்கங்களில் பதிவாகியுள்ளது. ஆனால் கோயம்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று இலக்கங்களில் (109) பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தெற்கு தமிழகத்தில், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை விகிதம் 97% ஆக குறைந்து காணப்படுகிறது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 22 பேர் தொற்றால் புதியதாக பதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அது 73 ஆக உள்ளது. மேலும் அந்த மாவட்டத்தின் ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றும் ஆறு மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர், 1,200 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 25 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக உள்ளாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில், பரிசோதனைகளும் அதிகரித்துள்ளன. கடந்த மாதம், ஆய்வகங்கள் ஒரு நாளைக்கு 50,000 மாதிரிகளை சோதித்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும், 75,258 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்டதாக இரண்டு பள்ளிகளுக்கு ரூ.5000 அபராதமும், ஒரு பள்ளிக்கு ரூ.12,000 அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.