Tamilnadu news in tamil: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தயாநிதி மாறன், தொகுதி பிரச்சைனைகள் மற்றும் தமிழகத்திற்கு எதிரான பிரச்சனைகளுக்கு அவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் மக்கள் எதிர்க்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்களோடு மக்களாக போராட்டத்தில் ஈடுபட்டும், கேள்விகளை எழுப்பியும் வருகிறார்.
சமீபத்தில் நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டதிற்கு கலந்து கொள்ள டெல்லி சென்ற தயாநிதி மாறன் எம்.பி, சென்னை பயணப்படுவதற்கு டெல்லி விமான தளத்தில் உள்ள இன்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்த போது, அவருடைய மக்களவை சகாவும் மூத்த உறுப்பினருமான ராஜீவ் பிரதாப் ரூடியுடன் நடந்த சுவாரஷ்ய கலந்துரையாடல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
மக்களவை உறுப்பினாரான ராஜீவ் பிரதாப் ரூடி நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்த 2 மணி நேரத்தில் விமானியாக மாறி தன்னை பிரம்மிப்படைய செய்தார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா என்று கூறியும் நெகிழ்ந்துள்ளார் தயாநிதி மாறன்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் ட்விட்டர் பதிவு பின்வருமாறு:
நினைவில் நின்ற விமானப் பயணம்!
இன்று நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின்
உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது "நீங்களும்
இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?" என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முக கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாக தெரிந்தது. நானும் தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முக கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது.
"ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை" என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணியாற்றிய போது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான திரு. ராஜீவ் பிரதாப் ரூடி என!
இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் "நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி "ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி" என்றார்.
எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன்.
உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா!
நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக புது டில்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததமைக்கு நன்றிகள் கோடி விமானி திரு ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி. அவர்களே!!!
A Flight to remember.
July 13, 2021
I boarded the Indigo flight 6E864 from Delhi to Chennai after attending a meeting of the parliamentary Estimates Committee. I happened to sit in the first row, as the crew declared that the boarding had completed.
1/7 pic.twitter.com/pwfsW39fDC— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) July 13, 2021
முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ரூடி, பீகாரைச் சேர்ந்த மக்களவை எம்.பி., மற்றும் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆவார். தயாநிதி மாறன் தந்தை முரசோலி மாறன் மத்திய வர்த்தக அமைச்சராக இருந்தபோது ரூடி மாநில அமைச்சராக பணியாற்றினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.