அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் கைது

Former AIADMK minister's nephew arrested for allegedly duping job seekers Tamil News: அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் மருமகன் எம்.ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Former AIADMK minister's nephew arrested for allegedly duping job seekers Tamil News: அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் மருமகன் எம்.ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamilnadu news in tamil: former AIADMK minister's nephew arrested for allegedly duping job seekers

Tamilnadu crime news in tamil: விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன். சென்னையில் வேலை தேடி வந்த இவர், ஒரு பொதுவான நபரின் அறிமுகம் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சரோஜாவின் மருமகன் எம்.ரமேஷ் பாபுவை சந்தித்து உள்ளார். தனது வேலை குறித்து பேசிய குணசேகரனுக்கு 35 லட்சம் கொடுத்தால் அங்கன்வாடியில் மதிய உணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக ரமேஷ் பாபு கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், ரமேஷ் பாபு கேட்ட 35 லட்சத்தை வழங்கிய குணசேகரனுக்கு டாடா காட்டிவிட்டு சென்றுள்ளார் ரமேஷ். இதனால் மனமுடைந்த குணசேகரன் விழுப்புர மாவட்ட போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், குணசேகரன் உட்பட 16 பேருக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ரமேஷ் கூறினார் என்றும், இதற்காக அவர்கள் அளித்த பணத்தை விழுப்புரத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் அவரது மாமாவின் வங்கிக் கணக்குகளுக்கு பல தவணைகளில் மாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்த ரமேஷிடம் பணத்தை திருப்பித் தருமாறு குணசேகரன் உட்பட பணம் செலுத்திய மற்றவர்கள் கேட்டதற்கு, 'இது போன்று பணம் கேட்டு தொந்தரவு செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்' ரமேஷ் என்றும் குணசேகரன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதான் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். அவருடைய உத்தரவின் பேரில் சென்னை விரைந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.செந்தில்குமார் தலைமையிலான சிறப்பு போலீஸ், ரமேஷ் பாபுவை அவரது அசோக் நகர் இல்லத்தில் வைத்து கைது செய்தது. மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் பாபு தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Chennai Tamilnadu Admk Tamilnadu News Update Tamilnadu News Latest Tamilnadu Latest News Crime Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: