கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அங்கு நேற்று புதிதாக தொற்று பதிப்பட்டோரின் எண்ணிக்கை 2,316 - ஆகவும், தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,150 ஆகவும் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வழியாக தமிழகம் வருவோர்க்கு இ- பாஸ் அவசியம் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாலக்காடு மற்றும் திரிச்சூர் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஏற்கனேவே தெரியப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேரளா - தமிழகதிற்கு இடையே மொத்தம்13 சோதனை சாவடிகள் உள்ளன. அதில் 6 முக்கிய சோதனை சாவடிகள் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. அதில் வலயார், வேலந்தவலம், அனைகட்டி, அண்ணாமலை, வாழ்ப்பாறை மற்றும் பொள்ளாச்சி போன்றவை ஆகும்.
இந்த சாலைகள் வழியாக வரும் இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரும், கேரள மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழியாக வருவோரும் கண்டிப்பாக இ- பாஸுடன் வர வேண்டும் எனவும், இ- பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வலயார் வழியாக கேரள அரசு பேருந்துகளின் மூலமாகவும், தமிழ்நாடு அரசு பேருந்து மூலமாகவும் கோயம்பத்தூர் மாவட்டத்திற்குள் வருவோருக்கும் இ- பாஸ் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரம், வருவாய் மற்றும் காவல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் இருந்து கேரளா செல்பபவர்களுக்கும் இ - பாஸ் அவசியம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://eregister.tnega.org என்ற இணைய பக்கம் வழியாக இ-பாஸ் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil