Tamil Nadu news today updates: போரூர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் வைகோ

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Today Live Updates
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளிநாடு பயணம் செய்ய புறப்பட்டார். முதலமைச்சர் இந்த பயணத்தில் 3 வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 8, 9 தேதிகளில் துபாயில் நடைபெறும் தொழில் முனைவோர் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி சாதாரண விவசாயியான நான் மக்கள் நலனுக்காகவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக கூறினார்.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமித்துக்கொள்ள பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.86, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.69.04 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.   அதே போல, இன்று சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட ரூ.28 குறைந்து ரூ.3,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.29.520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்

Live Blog

 Tamil Nadu and Chennai news today updates of weather, train services and airlines, ambedkar statue, tamil nadu politics,
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.


20:44 (IST)28 Aug 2019

5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் – ஜான்சன் என்பவர் கைது.

19:55 (IST)28 Aug 2019

ஊட்டியில் பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கமளிக்க உத்தரவு

ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க, டீசல் படகுகளுக்கு பதிலாக பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஊட்டி மாசடைவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீலகிரி ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஊட்டியில் 283 இடங்களை கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

19:53 (IST)28 Aug 2019

வீடு திரும்பினார் வைகோ

சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார்.

19:52 (IST)28 Aug 2019

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், போரூர், ஐயப்பன் தாங்கல், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர், கொரட்டூர், திருவள்ளூர், மாதவரம், புழல், செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,அடையார், எம்.ஆர்.சி.நகர், பூவிருந்தவல்லி, ஆவடி, திருநின்றவூர்,அம்பத்தூர், அசோக்நகர், வளசரவாக்கம், வில்லிவாக்கம், மதுரவாயல், மடிப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, கீழ்பாக்கம்,புரசவைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

19:22 (IST)28 Aug 2019

புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்

நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பு உருவாக்குவதற்கும், சர்க்கரை ஏற்றுமதி மானியத்துக்காக ரூ. 6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

18:57 (IST)28 Aug 2019

எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக எம்எல்ஏ., எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

18:55 (IST)28 Aug 2019

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற ரூ.1.76 லட்சம் கோடியை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.

18:19 (IST)28 Aug 2019

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தஞ்சை பிரச்னை அல்ல

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தஞ்சை பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை

இயற்கையின் சதியால் மட்டுமல்ல; அரசின் சதியாலும் காய்ந்து கொண்டிருக்கிறது நமது பூமி

தண்ணீர் கேட்பது நமது உரிமை; கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை; கர்நாடக அரசு கடமை தவறி வருகிறது

– மு.க.ஸ்டாலின்

18:19 (IST)28 Aug 2019

தேசிய விருது கிடைத்திருக்கணும் – தனுஷ்

பரியேறும் பெருமாள் உட்பட பல படங்களின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

18:17 (IST)28 Aug 2019

பியூஷ் மானுஷ் மீது தாக்குதல்

சேலம் பாஜக அலுவலகத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல். பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது பற்றி விளக்கம் கேட்கச் சென்றபோது தாக்குதல் எனத் தகவல்

18:16 (IST)28 Aug 2019

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை

வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை

– மின்வாரியம் விளக்கம்

18:15 (IST)28 Aug 2019

பிள்ளையார்பட்டி சுற்றுலா அறிமுகம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பிள்ளையார்பட்டி சுற்றுலா அறிமுகம்

செப்.1 சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும்

பெரியவர்களுக்கு சுற்றுலா கட்டணம் ரூ.2,600; 6-12 வயதுடையோருக்கு ரூ.1,300

18:14 (IST)28 Aug 2019

9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மு.க.ஸ்டாலின் தலைமையிலான கருத்தரங்கில் தீர்மானம்

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

17:49 (IST)28 Aug 2019

உதவி பேராசிரியர் பணி

தமிழ்நாடு அரசு கலை/அறிவியல் கல்லூரிகள் மற்றும் உயரக் கல்வி  கல்லூரிகளில்  2340  உதவி பேராசிரியர் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பதை இன்று அறிவித்தது  ஆசிரியர் தேர்வு வாரியம் . 

16:43 (IST)28 Aug 2019

நடிகர் சங்கம் – மனு தள்ளுபடி

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம்  கட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது  

16:26 (IST)28 Aug 2019

ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்குத் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரிக்கும் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால பாதுகாப்பு நாளை வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. 

16:20 (IST)28 Aug 2019

தங்கத்தின் விலை மாலையில் மீண்டும் உயர்வு

காலையில் ஆபரண தங்கம் சவரனுக்கு (8  கிராமிற்கு)  88 ரூபாய் உயர்ந்த நிலையில்,  மாலையில்  மேலும் 176 ரூபாய்  உயர்ந்து ரூ. 29,704-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஒரு கிராமின் தங்கத்தின் விலை ரூ.33 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

14:56 (IST)28 Aug 2019

ஐ.ஜி. முருகன் வழக்கு – தெலுங்கானாவுக்கு மாற்றம்.

பெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம்  தெலங்கானாவுக்கு மாற்றி அமைத்திருக்கிறது .  மேலும், தெலங்கானா போலீஸ் இந்த விசாரனையை  6 மாதத்தில் முடித்து  அறிக்கை தரவும் உத்தரவு. 

14:35 (IST)28 Aug 2019

உச்ச நீதிமன்றத்தில் வாதம் ஆரம்பம்

தற்போது சிபிஐ காவலில் உள்ள முன்னாள் நிதியமைச்சர், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (இடி) கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளது.  

அமலாக்கத்துறையின் (ED)  சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  வாதாடி வருகிறார். 

14:28 (IST)28 Aug 2019

பன்னா இஸ்மாயில்- எஸ். பி மோதலுக்கான காரணம்

பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயற்சித்த  வழக்கில் 2013ல் ஆந்திராவில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் பன்னா இஸ்மாயில். 

நேற்று, சிறையில் நடந்த கைதிகளின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் பங்கேற்காததை கேள்வி கேட்கச் சென்றார் எஸ்.பி .   பின்,  இருவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி  தள்ளுமுள்ளு வரையில் சென்று இருப்பதாக அங்கிருந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  

13:54 (IST)28 Aug 2019

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது – நடிகை திரிஷா

சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராகப் பங்கேற்ற நடிகை திரிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று கூறினார்.

13:50 (IST)28 Aug 2019

பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல உடனடி தண்டனைகள் கொடுக்க வேண்டும் – நடிகை திரிஷா

சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராகப் பங்கேற்ற நடிகை திரிஷா, பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற உடனடி தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

13:43 (IST)28 Aug 2019

ராமர் சேது பாலம் நம்முடைய பொறியாளர்களால் கட்டப்பட்டது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேச்சு

மேற்குவங்கத்தில் உள்ள காரக்பூர் ஐஐடியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்: “நாம் ராமர் சேது பாலம் பற்றி பேசும்போது, அது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மணி பொறியாளர்களால் கட்டப்பட்டதா? இல்லை. அது நமது பொறியாளார்களால் கட்டப்பட்டது. அது இன்றும்கூட உலகத்தின் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.

13:29 (IST)28 Aug 2019

திரைப்படங்கள் கற்பனையே அதை பின்பற்றக்கூடாது – நடிகை திரிஷா

சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராகப் பங்கேற்ற நடிகை திரிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது; சினிமா ஒரு கற்பனையே; அதை யாரும் பின்பற்றக்கூடாது என்று கூறினார்.

13:17 (IST)28 Aug 2019

மதுரை ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட் – காவல்துறை இயக்குனர் உத்தரவு

மதுரை ஆயுதப்படை காவல் உதவி ஆணையராக இருந்த தண்டீஸ்வரன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற இருந்த நிலையில் காவல்துறை இயக்குனர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தண்டீஸ்வரன் ராமநாதபுரத்தில் பணியாற்றியபோது காவலர் உடற்தகுதி தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:13 (IST)28 Aug 2019

இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்போம் – நடிகை திரிஷா

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக பங்கேற்ற நடிகை திரிஷா மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும், அவர் பாலின பாகுபாட்டை முற்றிலும் தவிர்க்க முயற்சிப்போம். இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்போம். பெண்கள் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்று கூறினார்.

13:09 (IST)28 Aug 2019

சிசிடிவி கேமராக்கள் மூலம் 50% குற்றங்கள் குறைந்துள்ளன – சென்னை மாநகர காவல் அணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை அக்கரை பகுதியில் 217 சிசிடிவி கேமரா செயல்பாட்டினை தொடங்கிவைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், செயின் பறிப்பு வழக்குகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் 50% குற்றங்கள் குறைந்துள்ளன, குற்றங்களை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.

12:52 (IST)28 Aug 2019

சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை – நடிகை திரிஷா

நடிகை திரிஷா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்று தெரிவித்துள்ளார்.

12:48 (IST)28 Aug 2019

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் – சி.பி.எம் செயலாளர்  பாலகிருஷ்ணன்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

12:27 (IST)28 Aug 2019

முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

12:16 (IST)28 Aug 2019

திமுக இளைஞரணி நிர்வாக மாவட்டங்களை ஏழு மண்டலங்களாகப் பிரித்து உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

திமுக இளைஞரணி பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் இளைஞரணி நிர்வாக மாவட்டங்களை ஏழு மண்டலங்களாகப் பிரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:11 (IST)28 Aug 2019

கும்பல் கொலைகளைத் தடுக்க வலிமையான சட்டங்கள் தேவை – மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தில் கும்பல் வன்முரை ஒரு புதிய வடிவத்தை எடுத்துள்ளது. இப்போது ஒரு அப்பாவி பெண் கும்பல் தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். அந்த பெண் குழந்தை திருடுபவர் என்று சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற தவறான சம்பவங்களில் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கும்பல் கொலைகளைத் தடுக்க வலிமையான சட்டங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

11:42 (IST)28 Aug 2019

ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தனது வயநாடு தொகுதிக்கு சென்று அங்குள்ள பாவளி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.

11:17 (IST)28 Aug 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அக்டோபர் முதல் வாரத்தில் அரசியல் சாசன அமர்வு தலைமையில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:01 (IST)28 Aug 2019

காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ யூசுப் தாரிகாமியை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சீதாராம் யெச்சூரியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “நீங்கள் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் நாங்கள் உங்களை காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கிறோம். நீங்கள் அங்கே மற்ற வேறு எந்த விஷயத்திற்காகவும் செல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.

10:48 (IST)28 Aug 2019

வருமான வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை வடபழனியில் உள்ள விஷால் தயாரிப்பு நிறுவனம் வருமான வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

10:45 (IST)28 Aug 2019

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதலவர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கலில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

10:32 (IST)28 Aug 2019

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அம்மாநிலத்தின் நிதித்துறை பொறுப்பு வகிக்கிறார். அந்த வகையில், முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

10:29 (IST)28 Aug 2019

சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லைமீறி செல்கிறது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லைமீறி செல்கிறது. எந்தச் சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

10:25 (IST)28 Aug 2019

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் உள்ளதா என்பது கேள்விக்குறி – திமுக எம்.பி. கனிமொழி

முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு புறப்பட்ட நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

10:20 (IST)28 Aug 2019

சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேற்றம் – இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் – 2 வின்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது என்றும் 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

10:18 (IST)28 Aug 2019

நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்? – முதல்வர் பழனிசாமி

வெளிநாடு செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலவர் பழனிசாமி: திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்று கூறினார்.

10:11 (IST)28 Aug 2019

முதல்வரின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா மேம்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா மேம்படும். தமிழக சுகாதாரத்துறை அடுத்த இலக்கை நோக்கி அடைய உள்ளது என்று கூறினார்.

10:05 (IST)28 Aug 2019

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இதில் பாகிஸ்தானோ வேறு வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை – ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “பல விஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளை பாக்., தூண்டி விடுவதுடன், வன்முறை செய்வோரை ஆதரிக்கிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக இருக்கும் பாக்., காஷ்மீரிலும் வன்முறையை ஊக்குவிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

10:00 (IST)28 Aug 2019

நான் தொழிலதிபர் இல்லை; விவசாயி – முதலமைச்சர் பழனிசாமி

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வே தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழில் அதிபர் இல்லை. சாதாரண விவசாயி. நான் நேரில் சென்று அழைத்தால்தான் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருவார்கள்.

09:56 (IST)28 Aug 2019

2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு

2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் http://trb.tn.nic.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும் நேற்று அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அம்பேத்கரின் சிலைகளை வேண்டுமானால் உடைக்க முடியுமே தவிர, சமூகநீதி எனும் கோட்பாட்டு கோட்டையை யாராலும் தகர்க்க முடியாது என்று கூறினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news in tamil latest tamilnadu news live updates

Next Story
வெளிநாடு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி… மூன்று நாடுகளில் முதலீட்டார்களை சந்தித்து பேச திட்டம்Tamil Nadu chief minister Edappadi Palanisamy foreign visits full schedule
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com