மூதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அறிக்கை விட்டிருந்தார். ஸ்டாலினின் கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் பதிலளித்து பேசுகையில், வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களை அம்மாநில அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடைய மகன் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றையை விலையில்மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.56-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.84க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது போல தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
கடல் கடந்து தமிழரான ஈபிஎஸ் சாதனை படைத்துள்ளார். சென்று வென்று வாருங்கள் என்பதற்கே வரலாற்றுச் சாதனையை முதல்வர் செய்துள்ளார். யதார்த்தம், சத்தியம், உண்மையை கூறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளார் முதல்வர் பழனிசாமி - அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார்
திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? மு.க.ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் - முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமிதமிழகத்தில் புதிதாக 29
தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன; பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்.
நெல்லை கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் மீட்பு.
ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு சிலையை கொண்டு வருவதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கவில்லை; விமானச் செலவை 330 நாட்கள் அரசு மறுத்து வந்தது
உயர்நீதிமன்ற சிறப்பு புலனாய்வுக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மியூசியத்தின் பதிவாளர் செலவை ஏற்றுக்கொண்டார் - பொன்.மாணிக்கவேல்
ஜம்மு-காஷ்மீரில் அனைத்து லேண்ட்லைன் தொலைபேசி சேவைகளும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் இயங்கத்தொடங்கின; ஆசிரியர்களின் வருகை 75% ஆக இருந்தாலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளது - ஜம்மு-காஷ்மீர் அரசு
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதாக கருதப்படும் பத்மா விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு குடியரசு தினம் அன்று கொடுக்கப்படும். இந்த விருதுக்கு தகுதியுடைய தனி நபர்களின் பெயர்களை பொதுமக்கள் பரிந்துரைக்கு பணி தற்போது துவங்கியுள்ளது. padmaawards.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பரிந்துரையை செய்யலாம். இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும்.
புதுச்சேரி முதலைச்ச்சர் வி. நாராயணசாமி மகா கவி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் 98வது நினைவு தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாராயணசாமி தெரிவிக்கையில் பாரதி ஒரு தேசபக்தி தமிழ் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இந்திய சுதந்திர ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி , எல்லா காலத்திலும் மிகச்சிறந்த தமிழ் இலக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் என்று ம் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை தொடங்கி தீண்டாமை ஒழிப்பிற்காக போராடிய இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினேன்.
நாட்டையும், சமூக விடுதலையையும் இரண்டு கண்களாக மதித்த இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம். சமூக நல்லிணக்கத்தை காப்போம்! pic.twitter.com/2dmXElgq96
— M.K.Stalin (@mkstalin) September 11, 2019
திமுக வின் தலைவரான மு.க ஸ்டாலின் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். தீண்டாமை ஒழிப்பிற்காக போராடிய இம்மானுவேல் சேகரன் இந்நாளில் நினைவு கூறுவோம், சமூக நல்லிணக்கத்தை காப்போம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் குழு பரிந்துரைத்திருந்தது. இந்த முடிவை எதிர்க்கும் வகையில் குடியரசு தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார் தஹில் ரமானி. இன்னும் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காத சூழ் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தஹில் ரமானியின் அமர்வுக்கு எந்த வழக்கும் விசாரனைக்கி வரவில்லை. இந்நிலையில், அனைத்திந்திய பார்கவுன்சில் தஹில் ரமானி கொலிஜியம் பரிந்துரையை ஏற்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது . நீதிமன்றங்களில் அனைத்தும் ஒன்று தான். இதில் உயர்வு, தாழ்வு ஏது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். மேலும், அவரை செப்டம்பர் 19 வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கம் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்ய விண்ணப்பித்திருக்கிறார். 73 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 21 அன்று சிபிஐ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் சாலை விதிகள் மீறுவோருக்கு முன்பை விட அதிகாமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர் மிகவும் ஸ்ட்ரிக்டாக வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில் " விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்பதற்காகவே அபராதம் உயர்த்தப்பட்டது. மேலும், மாநில அரசு நினைத்தால் வாகன அபராதத் தொகையை குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
The Appointments Committee of the #Cabinet (ACC) has approved the appointment of Dr. P.K. Mishra, currently functioning as Additional Principal Secretary to Prime Minister, as Principal Secretary to Prime Minister with effect from 11th September, 2019.https://t.co/GzOvGTeUcl pic.twitter.com/tkrGdLifsn
— PIB India (@PIB_India) September 11, 2019
அமைச்சரவையின் (ஏ.சி.சி) நியமனங்கள் குழு தற்போது பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளராக இருக்கும் பி.கே மிஸ்ரா வை பிரதமரின் முதன்மை செயலாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் செப்டம்பர் 11 -ல் இருந்தே நடைமுறை படுத்தப்படுகிறது. முதன்மை செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா சில நாட்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தகது .
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி: அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சி.பி.ஐ-யின் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்தும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகள் பற்றி 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிஅய் அமைச்சர் ஜெயக்குமார்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன். ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா? தன் மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குற்றம்சாட்டுவதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு பாராட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்தது. என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங்: ஜம்முவின் 10 மாவட்டங்களும் முழுவதும் இயல்புநிலைக்கு மாறியது. அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. லே மற்றும் கார்கில் பகுதியும் இயல்பாக உள்ளது. அங்கே எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. 90 சதவீதத்துக்கும் மேலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 100% தொலைபேசின் இணைப்புகள் வேலை செய்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
J&K DGP, Dilbag Singh: All 10 districts of Jammu have become entirely normal, all school, colleges, & offices are open. Leh & Kargil are also normal, there is no restriction of any kind there. More than 90% areas are free of restrictions, 100% telephone exchanges are working now. pic.twitter.com/7jI0ps2Nd7
— ANI (@ANI) September 11, 2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியபடி அவருடைய குடும்பத்தினர் அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “நாட்டின் பொருளாதாரம் தான் எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பொருளாதார மந்த நிலையால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வருமானம் குறைவு, குறைந்த வேலைவாய்ப்பு, வர்த்தக சரிவு மற்றும் குறைந்த முதலீடுகள் சாமானிய ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்த சரிவு மற்றும் சோர்வில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எப்போது திட்டமிடப்படும்?” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயளாளரும் ராஜ்ய சபா எம்.பி-யுமான வைகோ ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துலாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீண்டாமையை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர் இமானுவேல் சேகரன் என்று கூறினார். மேலும், இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை என்று மத்திய அரசை விமர்சனம் செய்தார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார் தமிழக முதல்வர் பழனிசாமி. அவர் இஸ்ரேலில் நீர்மேலாண்மையை ஆய்வு செய்ய இஸ்ரேல் செல்வதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க விட்டுவிட்டு நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய முதல்வர் இஸ்ரேல் செல்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையைவிட இன்று சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.3,634-க்கும், ஒரு சவரன் ரூ 29,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.20-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.51,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை - கோவா பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் சதீஷ் தால்கர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை நீதிபதி ரமணி தஹில் இல்லத்தில் அவரை சந்தித்துp பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் தால்கர்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். நீதித்துறையின் மாண்பை காக்கும் வகையில் உத்தரவை கொலீஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வெண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளைமனதுடன் பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் “எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன. அதனால், வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளர்.
ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி அரசை எதிர்த்து பேரணி நடத்த இருந்த நிலையில், அம்மாநில அரசால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தில் உள்ள நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜகவின் 100 நாள் ஆட்சி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றி ஆலோசித்ததாகவும் அதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும், வங்கிகள் இணைப்பால் இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights