/tamil-ie/media/media_files/uploads/2019/08/jk-1-1.jpg)
Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டதில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு பதிலாக அந்த விடத்தில் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. தான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.87, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.69.05 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, train services and airlines, ambedkar statue, tamil nadu politics,
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
முதல்வர் வெளிநாட்டிற்கு சென்றாலும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பார்; முதல்வர் வெளிநாடு செல்வதால் கேர்டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணைய விதிப்படி கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் மீண்டும் பங்கேற்பார்கள் என தமிழிசை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒருங்கிணைப்பின் கீழ் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், அரசகுமார், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், அனுசந்திரமெளலி, எஸ்.ஆர். சேகர் உட்பட மொத்தம் 27 பேர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்து மட்டுமே கட்சியின் கருத்து எனவும் கூறப்பட்டுள்ளது.
திமுகவில், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே, கட்சி பதவிகள் கொடுக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சனம் செய்துள்ளார். திமுக இளைஞர் அணியின் தீர்மானம் குறித்து, தனது டுவிட்டர் வலைப்பதிவில் கருத்து வெளியிட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கழகம் ஒரு குடும்பம் என சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு குடும்பத்திற்கு மட்டுமே முன்னுரிமையும் முதல் உரிமையும் கொடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள 210 ஏரிகள் மேம்படுத்தப்படும், கூடுதலாக 1 டிஎம்சி நீரை சேமிக்க திட்டம் தீட்டப்ப்டடுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி கூறியதாவது, மழைநீர் சேமிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை, தமிழகம் தான் அதிகம் பெற்றுள்ளது. கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சந்திராயன் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை, இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது சந்திராயன் 2 அனுப்பும் இரண்டாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிலநாட்களுக்கு முன்புதான், நிலவின் புகைப்படங்களை, சந்திராயன் 2 விண்கலம் இஸ்ரோவிற்கு அனுப்பியிருந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில், “வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்தான். ஒடுக்கப்பட்ட சமூகமும் முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக்கொள்வது அரசியலை தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியே தவிர, தமிழிஅன் முன்னேற்றத்துக்கு வழியல்ல. சமூக விரோதிகள் மீது அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். நல்லவர்கள் சமூக அமைதி ஏற்பட முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்ப்பிட்டுள்ளார்.
வரும் 28 ஆம் தேதி தனது வெளிநாடு சுற்றுபயணத்தை துவங்கும் முதல்வர் பழனிசாமி அமெரிக்காவின் கலிபோர்னியா கால்நடை பண்ணை பார்வையிடுகிறார் . அமெரிக்காவில் இருந்து திரும்பும்வழியில் 8,9 தேதிகளில் துபாய் செல்கிறார். பின்பு 10 ஆம் தேதி மீண்டும் தமிழகம திரும்புகிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பை வருகிற 30ஆம் தேதிக்கு நீதிபதி கருணாநிதி தள்ளிவைத்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன் உள்ள பெரியார் சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலை உடைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே மர்மபொருள் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வெடித்த பொருள் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் பாம் செல்லினுடைய முகப்பு பகுதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்யூஸ் எனப்படும் இந்த பகுதிதான் ராக்கெட்டை வெடிக்கச் செய்யும் தன்மை கொண்டது எனவும் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை சார்பில் ஜல்ஜீவன் மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் தண்ணீர் பிரச்சினை, அனைவருக்கும் குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டுள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கே பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, தமிழக அரசு சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது. இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசிகவின் கோரிக்கைக்கு ஏற்ப, வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை காவல்துறை தடுத்து நிறுத்த முடியாதது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சரவெடி என்ற தலைப்பிலான தனது கதையை பயன்படுத்தி காப்பான் படம் எடுத்துள்ளதாக குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையை செப்டம்பார் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பி.எட் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2 ஆயிரத்து நாற்பது இடங்களை நிரப்ப கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதற்கட்ட கலந்தாய்வில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியது. இதில், காலியாக உள்ள 220 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, சென்னையில் முதல்முறையாக மின்சார பஸ்களின் சேவையை சோதனை முறையில் தொடங்கி வைத்தார். பின்னர், பெண்களின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவலர் சீருடையில் கண்காணிப்பு கேமரா வசதி என்ற திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.
வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தனி மயானம் அமைப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பதாக
உள்ளது குறிப்பிட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாசிச சக்திகளின் விஷ விதைகளால் தலைவர்கள் சிலைகளை சிதைத்து ஆனந்தப்படும் ஆபத்து
நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில், கல்வி தொலைக்காட்சியை தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி: வீட்டில் டிவி பார்க்கும் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை என்ற நிலை இனி மாறும். தமிழகத்தில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது.
கல்வி தொலைக்காட்சியை தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும்” என்று கூறினார்.
வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி, சிலைகள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மேலும், சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு, தனி சட்டம் இயற்றும் படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்: ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத பேர் தோல்வி அடைந்துள்ளனர். தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏன் காலதாமதம் என தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட விசிகவினரை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.3,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.3,718-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் கல்வி தொலைக்காட்சி தொடகக்விழாவில் பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெறும் கல்வி தொலைக்காட்சி தொடக்கவிழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசில் முதலமைச்சராக இருந்த குமாரசாமி அண்மையில், தான் முதலமைச்சராக இருப்பது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ காரணம் குமாரசாமி தன்னை எதிரியாக பார்த்ததே காரணம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது. இந்தியாவிலேயே அமைதி நிலம்வும் மாநிலம் தமிழகம்தான் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights