‘தாயின் கருவறையும், கல்லறையும் மட்டுமே பாதுகாப்பு’ பள்ளி மாணவி மரண வாக்குமூலம்

In a suicide note found from her room, the teen has mentioned that “a girl is safe only in the mother’s womb or grave.” Tamil News: மாணவி எழுதியுள்ள கடிதத்தில் “பெண்களுக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பானது தாயின் கருவறையும், கல்லறையும் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu news in tamil: Mangadu school student commits suicide; Case filed against college student in 3 sections

Tamilnadu news in tamil: பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்து, 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாங்காட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி சனிக்கிழமை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்தனர்.

மாணவி தனது தற்கொலைக்கு காரணம் முன்னாள் ஆசிரியர் மகன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த மாணவன் யார் என்பது குறித்தும், மாணவி இதற்கு முன்னர் படித்த தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் விசாரணை நடந்தது. மேலும், இது தொடர்பாக 3 இளைஞர்களிடம் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவர் விக்னேஷ் (21) என்பவர்தான் அந்த மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது என தெரிய வந்துள்ளது.

கல்லூரி மாணவர் விக்னேஷ் என்கிற விக்கி கரையாஞ்சாவடியைச் சேர்ந்தவர். மாணவி மற்றும் இந்த கல்லூரி மாணவர் விக்கி இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக பழகி வந்ததாகவும், இதில் விக்கி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்ததாகவும், அது மாணவியின் கவனத்தை ஈர்த்ததாகவும், இறுதியில் அது காதலாக வளர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் படித்து வரும் விக்கி, தான் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஒரு போலீஸ் அதிகாரி அளித்துள்ள பேட்டியில், “மாணவியுடன் உடல் உறவில் ஈடுபட்டதை அந்த கல்லூரி மாணவர் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளார். அருவருப்பான செய்திகள் மற்றும் ஆபாசமான புகைப்படங்கள் பரிமாறியதை விசாரணையில் கண்டறிந்தோம். இருவரும் எட்டு மாதங்களுக்கு முன்பு நல்ல நட்புறவுடன் இருந்துள்ளனர். பிறகு தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள் கிழமை விக்கியை கைது செய்த போலீஸார், அவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் அறையில் 3 கடிதங்கள் சிக்கின. அதில் ஒரு கடிதம் கிழித்த நிலையில் இருந்தது. அந்த கடித்ததில் ‘பெண்களுக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பானது தாயின் கருவறையும், கல்லறையும் தான். இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை, பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத்தர வேண்டும்’ என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news in tamil mangadu school student commits suicide case filed against college student in 3 sections

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express