புதிய பஸ் டெர்மினல் ஆகிறது கிளாம்பாக்கம்: இந்த மாத இறுதியில் தொடக்க விழா

Kilampakkam new bus terminal news in tamil: கிளம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் தொடக்க விழா இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

By: February 13, 2021, 1:49:47 PM

Tamilnadu news in tamil: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணாப்படுகிறது. எனவே அதைக் குறைக்கும் வகையில், சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து அமைக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படாத வண்ணம் இருக்கும் என்று கூறப்பட்டது. 

அதன் படி சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 309 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 11 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதோடு 1100 கார்கள், 2798 டூவிலர்கள் நிறுத்தும் வசதியும் அமையக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டரை சென்னை வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி..,) எடுத்துள்ளது. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளதால், அதற்கான தொடக்க விழா இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி..,) அமைத்துள்ள மாதிரி பேருந்து நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu news in tamil new bus terminus on the southern suburbs at kilambakkam likely to be inaugurated by february end

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X