Tamilnadu news in tamil: இந்தியாவில் உருவெடுத்து வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2ம் அலையால் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என்று மத்திய அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் பேட்டியில், "கொரோனா 2ம் அலையால் நாடு முழுவதும் ஏற்பட்ட நிலைமை குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது 100% உண்மை. மே 7 அன்று நான் பொறுப்பேற்றபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. அப்போது தினசரி 230 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,465 ஆக இருந்தது. அடுத்த நான்கு-ஐந்து நாட்களில், தொற்று அதிகரித்து, மே 21 அன்று, 36,184 என்று பதிவாகின. இதனால் எங்களுக்கு தினசரி டன் ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் ஆக உயர்ந்தது.
அந்த சூழ்நிலைகளில் கூட, முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன்விநியோகத்தை கொண்டு வர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார், இதன் காரணமாக எங்களால் நெருக்கடியை திறம்பட நிர்வகிக்க முடிந்தது, எனவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இங்கு எந்த மரணமும் ஏற்படவில்லை.
தடுப்பூசி விநியோகம்
தமிழகத்தில் 1,96,43,859 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 1,83,56,631 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12,87, 223 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திவதில் புதிய உச்சத்தை தமிழகம் இன்னும் சில எட்டும்.
தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை
மத்திய அரசால் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 25% தனியார் மருத்துவமனைகள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. ஜூலை மாதத்தில், 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஆனால் தனியார் மருத்துவமனைகள் நான்கு லட்சம் அளவை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள 13 லட்சம் மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் பிரச்சினை என்னவென்றால், அரசாங்கம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகின்றது. அதே நேரத்தில் 25% தடுப்பூசிகளை விலை கொடுத்து வாங்கியுள்ள தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசிகளை வழங்குவதற்காக பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நிலையில் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசிக்கு ரூ .1,410-ம் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ரூ .780-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இலவச தடுப்பூசி திட்டம்
இதனால் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தனியார் நிறுவனங்கள் வழங்கும் சி.எஸ்.ஆர் நிதியைப் பயன்படுத்தி பொதுமக்களின் நலனுக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்திற்கு மொத்தம் 117 மருத்துவமனைகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த திட்டம் விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அதோடு, அடுத்த மூன்று நாட்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது" என்றார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.