kattupalli Adani ports Tamil News: குஜராத் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அதானி குழுமம். இந்த குழுமம் இந்தியாவில் இதுவரை 7 துறை முகங்களை (முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட் டினம்) நிர்வகித்து வருகிறது. மேலும், எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கி நிர்வகித்து வந்த தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து 97 சதவித பங்குகளை வாங்கியுள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இது ஆழ்கடல் துறைமுகங்களுள் ஒன்றாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2 பெர்த்கள் உள்ளன. இவற்றின் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்ற 6 கிரேன்கள் உள்ளன.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை ரூ. 4,000 கோடி முதலீட்டில் 30 பெர்த் கொண்ட துறைமுகமாக விரிவுபடுத்தவும், 30 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் வரை நிர்வகிக்க சலுகை பெறவும் வேண்டி தமிழக அரசிடம் அந்நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக அதானி குழுமம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் “முதலீட்டாளர்கள் அல்லது வங்கிகளிடம் இருந்து 30 வருட உரிமக் காலத்துடன் தேவையான நிதியைப் பெற முடியாது. இவ்வாறு, மாநிலத்திற்கான ஒரு முக்கியமான வளர்ச்சித் திட்டத்தின் நிதி நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, துறைமுகத்திற்கான உரிமக் காலத்தை 99 வருடங்களாக உயர்த்துவது அல்லது டிட்கோ நிலத்திற்கான குத்தகைக்கு இணையாக இயங்குவது மிக முக்கியம்” என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்க கூடாது என்று கூறி 10 பேர் கொண்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ திட்டத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், சலுகைக் காலத்தை நீட்டிக்க கேரள அரசுக்கு எதிரான சிஏஜி -யின் (இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல்) வலுவான கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
எஸ்பி அம்புரோஸ் (கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர்), எம்ஜி தேவசகாயம் (முன்னாள் செயலாளர், ஹரியானா அரசு), கேபி ஃபேபியன் (இத்தாலியின் முன்னாள் தூதர்) மற்றும் இஏஎஸ் சர்மா (முன்னாள் தொழிற்சங்க செயலாளர்) ஆகியோர் உட்பட 10 பேர் கொண்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் குழு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,”99 வருட சலுகைக் காலத்தால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியமானது என்று அதானியின் வணிகத் திட்டம் கூறினால், மாநிலம் இந்த திட்டத்தின் மூலம் அதிக ஆபத்தை சந்திக்க நேரிடும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “துறைமுக முன்மொழிவுவில் முன்மொழியப்பட்ட வளர்ச்சி கடல் அரிப்பு, வாழ்வாதார இழப்பு மற்றும் மாசுபாட்டிற்கு அஞ்சும் உள்ளூர் மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அதோடு வெள்ள அபாயங்கள் மற்றும் நகரத்திற்கு வழங்குகின்ற நீர்நிலைகளில் உப்புத்தன்மை ஊடுருவலை மோசமாக்கும்.
கணிசமான நிதி அபாயங்களை மட்டுமே முன்மொழிவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் அதன் உரிமைகளுக்குள் உள்ளது, ”என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil