‘Rivers of India’ music video by IIT Madras: விலைமதிப்பற்ற இந்திய நதிகளின் நீர்வளங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர் ‘கண்ணிக்ஸ் கண்ணிகேஸ்வரன்’ எனபவரின் புதிய முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள மியூசிக் வீடியோ யூடியூபில் வெளியிப்பட்டுள்ளது.
51 ஆறுகளின் பெயர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பாடலுக்கு பின்னணி பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ, மற்றும் பாடகர்கள் கவுசிக் சக்ரவர்த்தி, ரிஷித் தேசிகன், அமிர்த ராம்நாத் போன்றார் பாடியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)