சென்னையில் ரிலாக்ஸாக சுற்றும் மக்கள்; 3வது அலைக்கு வழிவகுக்குமா?

Shoppers throng Chennai’s T Nagar as lockdown is lifted Tamil News: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக காட்சியளித்தனர்.

Chennai city news in tamil: இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தினசரி தொற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்று கிழமை தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக காட்சியளித்தனர். மேலும் நகரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களான மெரினா கடற்கரை, டி.நகர் ரங்கநாதன் தெரு போன்ற இடங்களில் மக்கள் அதிக அளவில் தென்பட்டனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற நிலையில், பலர் தாங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதைப் பற்றி கவலைப்படமால் குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிக்காகவும், பொழுதை கழிப்பதற்காவும் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. அதோடு கொரோனாவுக்கு முந்தைய டி நகர் போலவே அந்த பகுதி காட்சியளித்தது.

கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் அலைமோதிய மக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை பொருட்படுத்தவில்லை. தவிர, சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் நடைபாதைகள் அடைக்கப்பட்டன. மேலும் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலில் ஸ்தமிப்பித்த வண்ணம் இருந்தன. நேற்று டி நகரில் பகுதியில் மட்டும் குறைந்தது ஏழு லட்சம் பேர் குவிந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் மக்களை முகமூடி அணியச் சொன்னால், அவர்கள் பல காரணங்களை கூறுகின்றனர். ஒரு சிலர் தங்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்கள்” என்று ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மெரினாவில், காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் சிறப்பு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை அமைத்துள்ளனர். மேலும் கண்ணகி சிலையிலிருந்து தொழிலாளர் சிலை வரை அடைத்தும், கோவிட் விதிமுறைகளை மீறுவதற்கு எதிராக மக்களை எச்சரித்தும் வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ நேப்பியர் பாலம் வழியாக கடற்கரைக்குள் நுழைந்துள்ளனர்.

கூட்டத்தைத் தடுக்க ரங்கநாதன் தெருவின் உள்ளீடுகளில் நிலையான குழுக்கள் இடப்படும் என்று தெரிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி, “நாங்கள் இரண்டு உள்ளீடுகளை தடை செய்துள்ளோம், திங்கள் முதல் நுழைவு தடைசெய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நகரம் முழுவதும் சந்தைகள், ஷாப்பிங் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற 40 முக்கிய இடங்களில் விழிப்புடன் இருக்குமாறு போலீசாருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஷங்கர் ஜீவால் அறிவுறுத்தியுள்ளார். “ஷிப்ட் அடிப்படையில் போலீசார் நிறுத்தப்படுவார்கள். மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சந்தைப் பகுதிகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பார்வையாளர்கள் வெப்பநிலை மற்றும் முகமூடிகளுக்கு திரையிடப்படும் இடத்தில் ஒரு தனி கூடாரம் அமைக்கப்படும். சமூக தூரத்தை பராமரிக்க மக்களைக் கேட்க பொது முகவரி அமைப்புகள் பயன்படுத்தப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news in tamil shoppers throng chennais t nagar as lockdown is lifted

Next Story
கொரோனா: தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.35%chennai corona cases
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express