Advertisment

கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா: கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

Tamilnadu covid -19 case update tamil news: தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamilnadu news in tamil tamilnadu covid -19 cases hikes; chief secretary meets district collectors via video conferance

Tamilnadu news in tamil: நாடு முழுதும் கொரோனா தொற்றின் 2வது அலை உருவாகி வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று திங்கட்கிழமை மட்டும் 800க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆகவே தொற்று பதிப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,149 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 2,023 உள்ளது. செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கல்பட்டுவில், 81 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. கோயம்புத்தூரில் கொரோனா சோதனை செய்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தஞ்சாவூரில், 58 பேருக்கு கூடுதலாக தொற்று கண்டறியப்பட்டுதுள்ளது. அதே நேரத்தில் திருவள்ளூரில் மேலும் 44 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான நான்கு இறப்புகளும் 67 முதல் 83 வயதுடையவர்களாக உள்ளனர். மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் மதுரையில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 87 வயதுடைய முதியவர், அதே நாளில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்கனவே இருந்துள்ளது. இந்த நிலையில்,
தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும், 10 நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த மார்ச் 13 ம் தேதி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 75 வயது நபர் ஒருவர், அதே நாளில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அவர் இறந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி காரணமாக அவரது மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை பதிவு செய்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Chennai Tamilnadu Covid 19 Covid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment