தஞ்சையில் கொரோனா பரவல்: அலட்சியப் பள்ளிக்கு அபராதம்; வழக்குப் பதிவு

Thanjavur covid casess today tamil news: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tamil Nadu Covid19 vaccination daily Report Chennais caseload crosses 10,000

Tamilnadu news in tamil: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, அந்த பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news in tamil thanjavur covid casess today suit filed on private school

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com