பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி 623-வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.63, டீசல் ரூ 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அறிஞர் அண்ணா நினைவு தினம்
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில், அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் வரை மௌன ஊர்வலம் செல்கின்றனர். திமுக அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் இந்த ஊர்வலத்திற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி போர் நினைவிடத்திலிருந்து நேப்பியர் பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கொடிப் பணியாளர் சாலை வழியாகவும், காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் பாரதி சாலை வழியாகவும் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் நீர்மட்ட விபரம்
செம்பரம்பாக்கம் - 83.92 சதவீதமும், புழல் - 80.18 சதவீதமும் பூண்டி - 89.72 சதவீதமும், சோழவரம் - 71.6%, கண்ணன்கோட்டை - 98.6 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 03, 2024 22:51 ISTஅமைச்சர் ராமச்சந்திரன் மீதான வழக்கு; உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்தார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார். வழக்கு தொடர்பான கோப்பை பார்த்ததாக மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என உச்சநீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் அறிக்கை தாக்கல் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 03, 2024 20:49 ISTவிளையாட்டு உட்கட்டமைப்புக்கு ரூ 25 கோடி நிதி; ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 25 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், ரூ 11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும். நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ 5.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ 4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ 88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.
-
Feb 03, 2024 20:34 ISTகுரூப் 2 நேர்முகத்தேர்வு தேதிகள் மாற்றம்
ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
-
Feb 03, 2024 20:04 ISTகெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிப்ரவரி 7 ஆம் தேதி விசாரிக்கிறது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என புகார் தெரிவித்துள்ளது.
-
Feb 03, 2024 19:47 ISTவிஜய் அரசியல் வருகையால் பாதிப்பில்லை; அமைச்சர் சாமிநாதன்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளதால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என விருதுநகரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி அளித்துள்ளார்
-
Feb 03, 2024 19:30 ISTராமேஸ்வரத்தில் 4.36 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 4.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குந்துகால் கடல் பகுதி வழியாக தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Feb 03, 2024 19:03 ISTஅமலாக்கத் துறை கைதை எதிரத்த ஹேமந்த் சோரன் மனு; பிப்ரவரி 5ல் விசாரணை
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 5ம் தேதி விசாரிக்கிறது
-
Feb 03, 2024 18:33 ISTகருப்பு வெள்ளையில் உருவாகும் மம்மூட்டி திரைப்படம்
பிப்ரவரி 15ம் தேதி மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள 'பிரமயுகம்' கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளியாகவுள்ளது
-
Feb 03, 2024 18:15 ISTஇலவச வாக்குறுதிகள்; தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகள் இடம் பெறுவதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் அதன் ஆட்சேபத்தை பதிவு செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி, உத்தரவாதங்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
Feb 03, 2024 17:50 ISTகார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
முன்னாள் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எம்.பி தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றம்
-
Feb 03, 2024 16:49 ISTபுதுச்சேரியில் தொகுதியில் கூட்டணியில் பா.ஜ.க போட்டி
பாஜக அணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி யாருக்கு?
புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியுடன், பாஜக ஆலோசனை
பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார், அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்.பி., செல்வகணபதி சந்தித்தனர்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்றது
புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்
-
Feb 03, 2024 16:37 ISTபா.ஜ.க எங்களுடன் பேசி வருகிறது: ஓபிஎஸ்
கூட்டணி தொடர்பாக பா.ஜ.க எங்களுடன் பேசி வருகிறது: ஓபிஎஸ்
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க எங்களுடன் பேசி வருகிறது. பிரிந்துள்ள அ.தி.மு.கவை ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி- ஓ பன்னீர்செல்வம்
-
Feb 03, 2024 16:31 ISTகூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம்-சி.பி.ஐ
கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் -தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டி.
-
Feb 03, 2024 16:18 ISTதிமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கு: அதிமுக வட்டச் செயலாளர் கைது
மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது.
காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல்
-
Feb 03, 2024 16:13 ISTதிமுகவுடன் இந்திய கம்யூ., பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தை
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது
திமுகவுடன் இந்திய கம்யூ., பேச்சுவார்த்தை
-
Feb 03, 2024 15:12 ISTபஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குடியரசுத் தலைவருக்கு கடிதம். பஞ்சாப் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் திடீர் முடிவு
-
Feb 03, 2024 14:37 ISTகாசா கிராண்ட் தலைமை அலுவலகம் முற்றுகை
சென்னையில் காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூரியில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாழம்பூர் காசா கிராண்ட் ஸ்மார்ட் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Feb 03, 2024 13:36 ISTஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்
மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Feb 03, 2024 13:35 ISTஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை
"ஆம்னி பேருந்து மாநகர எல்லைக்கு வர அனுமதியுங்கள். ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதி வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம்
கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாற காலக்கெடு வழங்க அரசிடம் கோரிக்கை. பயணிகளை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமதி கேட்டுள்ளோம்". என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
Feb 03, 2024 13:02 ISTமத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Feb 03, 2024 13:01 ISTஅறநிலையத்துறை அதிகாரிகளின் செயல் - நீதிபதி கருத்து
"இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை" என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
Feb 03, 2024 13:00 IST'உயிருடன் இருக்கிறேன்'- வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டே
"நான் சாகவில்லை. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகவில்லை" என்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே வதந்தி பரப்பியதாகவும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
-
Feb 03, 2024 12:36 ISTதி.மு.க எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வரும் 8ம் தேதி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் என்று திமுக எம்.பி., டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். தமிழகத்தின் மீதான பாஜக அரசின் ஓரவஞ்சனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.
-
Feb 03, 2024 11:46 ISTஎல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது : பிரதமர் மோடி நெகிழ்ச்சி
எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 03, 2024 11:42 ISTதேர்தல் அறிக்கை - கருத்து கேட்கும் திமுக
மக்களவை தேர்தல் அறிக்கை தொடர்பாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்ப திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுத்துப்பூர்வமாகவோ அல்லது சமூக ஊடகங்களிலோ பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என்றும், 08069556900 என்ற தொலைபேசி எண்ணிலும், dmkmanifesto2024@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் பரிந்துரைகளை அனுப்பலாம் தேர்தல் அறிக்கைக் குழு பிரதிநிதிகளிடமும் நேரடியாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தல்
-
Feb 03, 2024 11:41 ISTத.மா.கா யாருடன் கூட்டணி? - வரும் 12ல் முடிவு
மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி? வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு- கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
-
Feb 03, 2024 11:03 ISTஅண்ணாவை போற்றுகிறேன் - அண்ணாமலை
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் அண்ணாவை போற்றுகிறேன் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைவஞ்சலி
-
Feb 03, 2024 11:03 ISTதிமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 9வது நாளாக ஆலோசனை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டம்
-
Feb 03, 2024 11:02 ISTஅண்ணா நினைவு தினம் - முதல்வர் மரியாதை
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்பெயினில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
Feb 03, 2024 11:01 ISTவிஜய் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன் : அன்பில் மகேஷ்
நடிகர் விஜயயை பொருத்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும்போது அன்பொழுக பேசக்கூடியவர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல் நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொள்கைள் வரும்போது கட்சியின் நோக்கம் தெரியவரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரவித்துள்ளார்.
-
Feb 03, 2024 10:49 ISTநெல்லை பட்டமளிப்பு விழா : புறக்கணித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு 30வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. ஆளுநர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.. மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Feb 03, 2024 09:57 ISTஅண்ணா படத்திற்கு ஈபிஎஸ் மரியாதை
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
-
Feb 03, 2024 09:56 ISTமம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்
நடக்க இருப்பது நாடாளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல் இல்லை என்பதை மம்தா பானர்ஜி புரிந்துகொள்ள வேண்டும். மாநில அளவில் நமக்குள்ளே இருக்கும் மாற்று கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மேலும் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக போராடுவதே நமது இலக்கு. இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டியது நம் அனைவரது கடமை என்றும் கூறியுள்ளார்.
-
Feb 03, 2024 09:45 IST‘பாரத் அரிசி' ஒரு கிலோ அரிசி ரூ29-க்கு விற்பனை : மத்திய அரசு அரசு முடிவு
‘பாரத் அரிசி' என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய மத்திய அரசு அரசு முடிவு. நாடு முழுவதும் அரிசி விலை 15 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில், அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது. 5 மற்றும் 10 கிலே பைகளில் விற்பனை செய்ய முடிவு
-
Feb 03, 2024 08:55 ISTதிருவிக கல்லூரி முதல்வர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கீதா மீது தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார்
-
Feb 03, 2024 08:51 ISTதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முதல் அண்ணா நினைவிடம் வரை நடைபெறும் பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிடோர் பங்கேற்பு
-
Feb 03, 2024 08:38 ISTநாடாளுமன்ற தேர்தல் : தி.மு.கவுடன் இந்திய கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை. 2 மக்களவை தொகுதி அல்லது ஒரு மக்களவை தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் திட்டம்
-
Feb 03, 2024 08:36 ISTகேரளா லாட்டரில் ஐயப்ப பக்தருக்கு ரூ20 கோடி பரிசு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றபோது புதுக்சேரியை சேர்ந்த ஒருவர் வாங்கி லாட்டரி சீட்டுக்கு ரூ20 கோடி பரிசு விழுந்துள்ளது. வரி பிடித்தம் போக அவருக்கு ரூ12.60 கோடி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 03, 2024 08:34 ISTஇந்திய வீரரின் சாதனையை தகர்த்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்
இந்திய மண்ணில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டனர்சன் நிகழ்த்தியுள்ளார். 1952-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் லாலா அமர்நாத், 41 வயதில் (92 நாட்கள்) விளையாடி சாதனை படைத்திருந்தார். தற்போது ஆண்டனர் சன் 41 வயது (187 நாட்கள்) விளையாடி சாதனையை முறியடித்துள்ளார்.
-
Feb 03, 2024 08:31 ISTசிவசேனா கட்சி முன்னாள் கவுன்சிலர் மீது பா.ஜ.க எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு
சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்.எல்.ஏ. கணபதி கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் வெவ்வேறு பிரச்னைகளுக்காக இருவரும் புகாரளிக்க வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 03, 2024 07:43 ISTவிஜய் எதிர்காலம் பற்றி என்னால் சொல்ல முடியாது : கனிமொழி எம்.பி
விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுக எம்பி கனிமொழி, விஜய் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
-
Feb 03, 2024 07:41 ISTபிரதமர் மோடி இன்று அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பயணம்
ஒடிசா, அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
Feb 03, 2024 07:39 ISTகட்சி தொடங்கிய விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து
தமிழக வெற்றி கழகம் என்று புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜயக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சி தொடங்கிய முடிவுக்கும், 2026 தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.