/indian-express-tamil/media/media_files/2024/11/29/ZV23Qoaq6vuYCxuF2Opk.jpg)
சிறை கைதி மர்ம மரணம்: கோவை மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறை காவல் அலுவலர் மற்றும் காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jan 29, 2025 19:47 IST
2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 29, 2025 19:09 IST
சீமான் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், பரபரப்புக்காகவே பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் குறித்து சீமான் பேசி வரும் கருத்துகள் தொடர்பாக திருமாவளவன் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
-
Jan 29, 2025 17:52 IST
மேட்டுப்பாளையத்தில் இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை - கோர்ட் தீர்ப்பு
கடந்த 2019-ல் கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த கனகராஜ் வர்ஷினி பிரியா ஜோடி ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கனகராஜின் சகோதரரான வினோத்குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Jan 29, 2025 17:05 IST
காங்கேயம் அருகே ரூ.8 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வட்டி வசூல்; கந்துவட்டி நபர் வீட்டில் டி.எஸ்.பி சோதனை
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் ரூ.8 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வரை வட்டி வசூலித்து மீண்டும் அசல் தொகை கேட்டு மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரில், சாமிநாதன் என்பவரது வீட்டில் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கந்து வட்டி வசூல் புகாரில் சாமிநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ₹10 கோடி மதிப்பிலான 73 கிரையப் பத்திர அசல் ஆவணங்கள், 10 கடனீட்டு பத்திரங்கள், 6 காசோலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 29, 2025 16:59 IST
தடுப்புச் சுவர் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
சீர்காழி அருகே கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Jan 29, 2025 16:51 IST
யூடியூபர் திவ்யா கள்ளச்சி கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Jan 29, 2025 16:40 IST
மதுரை ஐகோர்ட் கருத்து
"வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம். அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று போராட்டம் நடத்திய அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
”இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது” எனக்கூறி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்
-
Jan 29, 2025 16:17 IST
கோவை ஆணவப் படுகொலை வழக்கு - தண்டனை அறிவிப்பு
கடந்த 2019ம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த கனகராஜ் - வர்ஷினி பிரியா இருவரும் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மாலை 5 மணி அளவில் கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவிக்க உள்ளது. இக்கொலை வழக்கில் கனகராஜின் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என கடந்த 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது
-
Jan 29, 2025 16:16 IST
ஈமு கோழி மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
கோவையில் சுசி ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவன மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10ஆண்டு சிறையும், ரூ. 19 கோடி அபராதமும் விதித்து தமிழ்நாடு வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
Jan 29, 2025 15:25 IST
வெடிகுண்டு வீசுவேன்: ஈரோட்டில் சீமான் சர்ச்சை பேச்சு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, நாதக சார்பில், ஈரோடு அசோகபுரம் நெரிக்கல்மேட்டில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘உன் பெரியாரிடம் வெங்காயம்தான் உள்ளது. என்னிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை வீசு, நான் வெடிகுண்டை வீசுகிறேன். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டு வீசினால், உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது’ என்று கூறியுள்ளார்.
சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து, சீமான் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பெரியாரிய அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
Jan 29, 2025 15:21 IST
பள்ளி மாணவிகள் கடத்தல் - இறைச்சிக்கடை தொழிலாளி உள்பட 2 பேர் போக்சோவில் கைது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பள்ளி மாணவிகளை கடத்திய இறைச்சிக்கடை தொழிலாளி உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
-
Jan 29, 2025 14:34 IST
திருச்சி டூ சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற தனியார் நிறுனம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பயின்று வரும் 31 மாற்றுத்திறனாளி மாணவர்களை தனியார் நிறுவனம் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து, தொழிற்பயிற்சி வழங்கியுள்ளது, முதல்முறை விமானத்தில் பயணம் செய்த அவர்கள் சைகை மொழியில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
Jan 29, 2025 14:31 IST
ரூ8 லட்சம் கடனுக்கு ரூ1 கோடி வரை வட்டி; வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் ரூ8 லட்சம் கடனுக்கு ரூ1 கோடி வரை வட்டி வசூலித்து மீண்டும் அசல் தொகை கேட்டு மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரில், சாமிநாதன் என்பவரது வீட்டில் டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை
-
Jan 29, 2025 13:02 IST
நெல்லையில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நெல்லையில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விழுப்புரத்தில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக திமுக தொண்டர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
-
Jan 29, 2025 13:01 IST
வரி செலுத்துவோர் மையம் திறப்பு நிகழ்ச்சி - நடிகர் விஜய்சேதுபதி பேச்சு
கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி செலுத்துகிறோம் அதனால் வரி செலுத்துபவர்களுக்கு சில சலுகைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வரி செலுத்துவோர் மையம் திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
-
Jan 29, 2025 12:49 IST
வருவாய்த்துறை உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
மதுரையில் கடந்த 2016ம் ஆண்டு நிதி நிறுவன உரிமம் வழங்க ₹4000 லஞ்சமாக வாங்கிய வருவாய்த்துறை உதவியாளர் கண்ணகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
-
Jan 29, 2025 11:26 IST
போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி – 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர் சீனிவாசபுரம், செக்கடி பகுதியைச் சேர்ந்த சின்னப்பாண்டி என்பவரின் மனைவி சரஸ்வதி (38) ஆகிய இருவரும் போலி கை வளையல் மற்றும் கை செயின் ஆகியவற்றை அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர்.
விசாரணையில், மணிவண்ணன் கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இதுபோன்ற போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி கவிதா என்பவரை தேடி வருகின்றனர்.
-
Jan 29, 2025 10:45 IST
சேலம் அதிமுக மாவட்டச் செயலாளர் விடுவிப்பு!
சேலம் அதிமுய்க மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து வெங்கடாஜலம் விடுவிப்பு.சேலம் மாநகர் மாவட்ட பணிகளை மேற்கொள்ள எம்.கே.செல்வராஜ், .கே.எஸ்.எம்.பாலு கியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Jan 29, 2025 10:19 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க, நா.த.க என 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் - 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்.
-
Jan 29, 2025 09:53 IST
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
-
Jan 29, 2025 09:52 IST
அகழாய்வில் கத்தி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
Jan 29, 2025 09:51 IST
போக்சோ சட்டத்தில் சிறுவர்கள் மூவர் கைது
ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Jan 29, 2025 09:49 IST
துப்பாக்கிச் சூடு தற்செயலானது-இலங்கை
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தற்செயலானது என இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது. கைது செய்ய முயன்றபோது ஒன்று சேர்ந்து தாக்க எத்தனித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.