தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் -நாடாளுமன்றக் குழு 28ல் விசாரணை
செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து வரும் 28ஆம் தேதி நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 80% தொற்றுக்கு டெல்டா வைரஸ் காரணம்: ஆண்டனி பவுசி
அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கோவிட் தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ : மதிப்பெண் கணக்கீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்வதற்கான கால அவகாசம் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மின்வாரிய ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் இன்று 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 29 பேர் உயிரிழந்த்னர். கொரோனா பாதிப்பில் இருந்து 2,475 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் 25,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
குட்கா, பான்பராக் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கைகளால் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 17.317 கன ஆடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அனையின் பாதுகாப்பு கருதி தமழகத்திற்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வருகின்றனர். அந்த வகையில் விஜயுடன் பீட்ஸ் படத்தில் நடித்துவரும் நடிகை பூஷாஹெக்டே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஸ் அழகிரி, பெகசாஸ் மூலம் ஜனநாயகம் படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் எனது வீட்டில் நடப்பதை இஸ்ரேலில் இருப்பவர்கள் தெரிந்துகொண்டால் எப்படி இந்தியாவில் வாழ்வது என்று கேள்வி எழுப்பியுளளார்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 9 கடைகளுக்கு டெண்டர் நடத்தப்படாமல், சட்டவிரோதமாக உரிமம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட புகாரில் உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்லம் அறிவித்துள்ளார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்க்காக பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்நிறுவனத்தை முதல்வர் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்ட இவர் இதனை தெரிவித்தார்.
சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. கரூர் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சிக்கின்றனர் என ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்
எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கிறது. அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் போக்சோ வழக்கில் அளித்த 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றம் அருகே அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சற்று நேரத்திற்கு முன்பு இந்த கூட்டம் ரத்தானது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உளவு பார்க்க அனுமதி அளித்ததன் விளைவாக ஜனநாயகத்தின் அடிப்படையையே மோடி அரசு தகர்த்துவிட்டது. எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கே.எஸ். அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
க்ரீமிலேயர் வருமான வரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பரிசீலிப்பதாக 2 ஆண்டுகளாக கூறியும் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவரும் முன்னாள் எம்.பியுமான எம். அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பாண்டியராஜன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும், அவரின் 40வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இறுதியாக சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த நிர்வாகிகள் திரும்ப சென்றனர்.
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு அழுத்த நிலையால் ஜூலை 24ம் தேதி வரை, மத்திய இந்தியாவில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் எனவும் கூறியுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த மேலும் 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வீரர்களுக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 87ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமிய, கிறிஸ்தவர்களைப் போன்று இந்து, சீக்கியர்களுக்கு வழிபாட்டுத் தலங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் உரிமை வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,000 த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வட மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை, கரூரில் 21 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.