Advertisment

Tamil News Highlights: வெள்ள பாதிப்பு காரணமாக கடலூரில் 3 ஒன்றியங்களில், விழுப்புரத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
school students rain

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90 காசுக்கும், டீசல் ரூ. 92.48 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 333 ஏரிகள் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ள நிலையில் மீதமுள்ள ஏரிகள் 70 - 90% நிரம்பியதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 03, 2024 21:43 IST
    தென்கொரியாவில் திடீரென நள்ளிரவில் அவரசநிலை பிரகடனம்

    தென்கொரியாவில் திடீரென நள்ளிரவில் அவரசநிலையை பிரகடனம் செய்தார் அதிபர் யூன்சுக் யேல். இதனால் தற்போது அங்கு ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எதிர்கட்சிகள் வட கொரியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் மற்றும் மேயர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Dec 03, 2024 21:28 IST
    மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

    டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதியை பாஜக அரசு பின்பற்றவில்லை. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதே சமூக நீதி. மகளிர் முன்னேற்றத்தையும் மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. `ஒன்றிய அரசில் காலியாக உள்ள ஓபிசி, எஸ்சி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 03, 2024 21:26 IST
    புஷ்பா 2 வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி: இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்

    இயக்குநர் சுகுமாருடன் இணைந்து சண்டை காட்சிகள், படத்தின் இறுதி காட்சிகளில் பணியாற்றியது ஒரு புதுமையான அனுபவம். புஷ்பா-2 உடனான எனது பயணம் மிகப் பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி என்று இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கூறியுள்ளார்.



  • Dec 03, 2024 20:26 IST
    விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு: பொன்முடி தகவல்

    விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பெரும்பாதிப்பு அடைந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகளில் மீட்கப்பட்டுள்ளனர். 2 நாட்களில் 16,660 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 70% இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளது மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80,000 ஹெக்டேர் பாசன நிலம் பாதிக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.



  • Dec 03, 2024 20:24 IST
    மருத்துவமனைக்கு படுக்கை வாங்கி கொடுத்த நடிகர் கார்த்தி

     திருநெல்வேலியில் ஜீவன் அறக்கட்டளை நடத்தும் வையோபதி மருத்துவமனையில் குழந்தைகளின் அவசரத் தேவையை அறிந்து 35 படுக்கைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. வையோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர்.



  • Dec 03, 2024 20:23 IST
    இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்

    இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகளில் ‘திருக்குறள்’  என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



  • Dec 03, 2024 19:42 IST
    புயல் வெள்ள பாதிப்பு - விஜய் விமர்சனம் 

    புயல் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நாங்கள் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை செய்ய போவதில்லை, இருப்பினும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்''  என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்..



  • Dec 03, 2024 19:29 IST
    காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு

    காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்துக்குள் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும். 

    காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பா என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது



  • Dec 03, 2024 19:19 IST
    நாமே காரணம்  - உயர்நீதிமன்றம் வேதனை

    "பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது, அவற்றுக்கு நாமே காரணம். உரிமைகளை பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை'' என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  



  • Dec 03, 2024 19:08 IST
    கடலூரில் விடுமுறை!

    கடலூர் மாவட்டத்தில் 3 பகுதிகளில் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

     



  • Dec 03, 2024 19:08 IST
    848 கிலோ கஞ்சா பறிமுதல் 

    சென்னை செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 848 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



  • Dec 03, 2024 18:31 IST
    ஒரு ரூபாய் கூட வழங்காத மத்திய அரசு 

    நடப்பாண்டில் மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்காதது அம்பலமாகியுள்ளது. 

    மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்காதது அம்பலமானது. தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் ஒன்றிய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25-ல் ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதி வழங்கப்படவில்லை.



  • Dec 03, 2024 18:23 IST
    புதுச்சேரி: முகாமாக செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை!

     புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 04) விடுமுறை என்றும், மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Dec 03, 2024 18:15 IST
    புஷ்பா 2 -  மேக்கிங் வீடியோ வெளியீடு 

    சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா 2 படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படக்குழு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.



  • Dec 03, 2024 18:13 IST
    பிரதமர் வீட்டு வசதி திட்டம் - புதிய நிபந்தனைகள் வெளியீடு

    3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள்.

    ரூ.50,000-க்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் திட்டத்தில் பயன்பெற முடியாது.

    வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் திட்டத்தில் பயன்பெற இயலாது.

    வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

    பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வதி இல்லாத 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.

    செங்கல் சுவர்கள், கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.



  • Dec 03, 2024 18:12 IST
    பிரதமர் வீட்டு வசதி திட்டம் - மக்கள் அதிர்ச்சி 

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



  • Dec 03, 2024 18:05 IST
     விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை 

    தொடர் மழை காரணமாக  விழுப்புரத்தில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 03, 2024 17:36 IST
    கடலூர்: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

    கடலூர், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக திடீர் குப்பம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். 



  • Dec 03, 2024 17:32 IST
    அன்ன கூடையில் 3 மாத குழந்தை

    விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தில் உள்ள சின்ன கவுண்டர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இந்த பகுதியில் நேற்று வெள்ளத்தின் காரணமாக முதல் தளம் வரை வெள்ளநீர் சென்று கொண்டு இருந்தது. இதனால் இந்த பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாலை வெள்ள நீர் சற்று வடிந்ததை அடுத்து அங்கிருந்து அவர்களை மீட்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஈடுபட்டனர் அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பகுத்தறிவு ரம்யா தம்பதியினரின் மூன்று மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் பஞ்சம் புகுந்திருந்தனர் இதனை கண்ட பெயிண்டர் ஆக வேலை செய்யும் ஆறுமுகம் எனும் இளைஞர் துரிதமாக செயல்பட்டு கயிறு கட்டி குழந்தையை அன்ன கூடையில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலையில் பாத்திரத்தில் மூன்று மாத குழந்தையை வைத்து மீட்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது



  • Dec 03, 2024 16:25 IST
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் போதாது - அண்ணமலை

    கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் போதாது; மிக்ஜாம் புயலின்போது சென்னையில் ரூ.6,000 வழங்கப்பட்டது போல வழங்க வேண்டும்” என்று கூறினார்.



  • Dec 03, 2024 16:22 IST
    முன் அறிவிப்பின்றி சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறந்ததால் 3 மாவட்ட மக்கள் துயரம் - இ.பி.எஸ் கண்டனம்

     “தகுந்த முன் அறிவிப்பின்றி சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீரைத் திறந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களை கடும் துயரத்திற்குள்ளாக்கிய மு.க. ஸ்டாலினின் தி.மு.க அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Dec 03, 2024 16:19 IST
    திருவண்ணாமலையில் மண் சரிவு: 6 உடல்கள் மட்டுமே மீட்பு - 7வது உடலை மீட்கும் பணி தீவிரம்

    திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில், 7 பேர் உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், 6 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இறுதியாக கண்டெடுக்கப்பட்ட உறுப்புகள் ராஜ்குமாருடையது, 7வது உடலை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்தது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு விபத்தில் 7வது உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



  • Dec 03, 2024 16:03 IST
    சபாநாயகர் பாரபட்சம் இன்றி நடக்க வேண்டும் - மக்களவையில் ஆ.ராசா  பேச்சு

    மக்களவையில் அதானி பெயரை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.அவையில் உறுப்பினராக இல்லாதவர் பெயரை எதிர்க்கட்சியினர் கூறக் கூடாது என சபாநாயகர் கருத்து தெரிவித்தார். இதற்கு, தி.மு.க எம்.பி. ஆ.ராசா, “உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களைக் கூறி அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டும்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பாரபட்சம் இன்றி சபாநாயகர் நடக்க வேண்டும்” எனக் கூறினார். இத்தகைய விவாதங்களால் மக்களவையில் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.



  • Dec 03, 2024 15:59 IST
    சாத்தனூர் அணையில் முன்னறிவிப்புடன் நீர் திறந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு - சேகர்பாபு

    அமைச்சர் சேகர்பாபு: “சாத்தனூர் அணை திறக்கப்பட்டதில் முன்னறிவிப்போடு படிபடியாகவே நீர் வெளியேற்றப்பட்டது. அதனால்தான் எந்தவிதமான உயிர்ச்சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால், தமிழ்நாடு அரசுக்கு நன்றிதான் சொல்லி இருக்க வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 03, 2024 15:44 IST
    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரி செய்யப்படும் - சேகர் பாபு

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு: “திருவண்ணாமலையில் 40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம்; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரி செய்யப்படும்” என்று கூறினார்.



  • Dec 03, 2024 15:35 IST
    பொன்முடி மீது குறிப்பிட்ட கட்சி நபர் உள்நோக்கத்தோடு சேறு வீச்சு - சேகர்பாபு 

    அமைச்சர் சேகர்பாபு: “அரசியல் உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நபர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் மக்கள் பணிகளை செய்வோம்” என்று கூறினார்.



  • Dec 03, 2024 14:50 IST
    வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அண்ணாமலை

    கடலூர் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார்.



  • Dec 03, 2024 14:37 IST
    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் உதவி

    சென்னையில் ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களை நேரில் அழைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பனையூருக்கு அழைத்து வரப்பட்டு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.



  • Dec 03, 2024 14:28 IST
    தமிழ்நாட்டின் வரலாற்றையும், வளத்தையும் ஒருசேர அழிக்கும் முயற்சி - சு.வெங்கடேசன் எம்.பி

    தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக சு. வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். குறிப்பாக, கீழடியில் 10 அடி குழி தோண்ட அனுமதிக்காத மத்திய அரசு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க அனுமதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • Dec 03, 2024 14:02 IST
    கடலூரில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பிரதான சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.



  • Dec 03, 2024 13:51 IST
    11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



  • Dec 03, 2024 13:34 IST
    ஃபீஞ்சல் புயல் - நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

    ஃபீஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2000 நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Dec 03, 2024 13:03 IST
    அன்பில் மகேஸ் ஆலோசனை

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 



  • Dec 03, 2024 12:58 IST
    விமர்சனங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

    விமர்சனங்களை முறைப்படுத்த விதிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கில் மத்தி ய அரசு, மாநில அரசு மற்றும் யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவு.

    பெரிய பட்ஜெட் படங்கள் குறித்த எதிர்மறை விமர்சனங்களால் படங்கள் தோல்வி அடைவதாகவும், படத்தில் நடித்த நடிகர், இயக்குநர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு வேதனை தெரிவித்தது. 

    அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என நீதிபதி சவுந்தர் உத்தரவிட்டார்.



  • Dec 03, 2024 12:35 IST
    சாத்தனூர் அணையில் 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன - துரைமுருகன்

    5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டே சாத்தனூர் அணையில் 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது; அதிக மழை என்ற காரணத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். அரசின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையானல்  பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டடது என அமைச்சர் துரைமுருகன் கூறினார். 



  • Dec 03, 2024 12:31 IST
    6வது நபரின் உடல் மீட்பு

    திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 6வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 6வது உடல் மீட்பு, மண்சரிவில் சிக்கிய மேலும் ஒருவரின் உடலை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 3-வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில் மண்ணோடு ராட்சத பாறைகளும் விழுந்ததால்  மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



  • Dec 03, 2024 11:50 IST
    மூத்த அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  

    அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். 



  • Dec 03, 2024 11:07 IST
    விரைவில் தமிழ்நாடு வரும் மத்திய குழுக்கள்

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட 3 மத்திய குழுக்கள் விரைவில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வருகின்றன. கடலூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரியில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 



  • Dec 03, 2024 10:52 IST
    தமிழக வெள்ள பாதிப்பு - டி.ஆர்.பாலு நோட்டீஸ்

    தமிழக வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.



  • Dec 03, 2024 10:23 IST
    தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்

    தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார். 



  • Dec 03, 2024 09:59 IST
    கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை துண்டிப்பு

    விழுப்புரத்தில் பெய்த கனமழையால் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை துண்டிக்கப்பட்டது.  கப்பியாம்புலியூர் ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் 100 ஏக்கருக்கு மேலான நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



  • Dec 03, 2024 09:40 IST
    கடலூர் - புதுச்சேரி சாலை பாதிப்பு

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் - புதுச்சேரி சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கடுமையாக சேதமடைந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 



  • Dec 03, 2024 09:39 IST
    சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வீடூர் அணை திறக்கப்பட்ட நிலையில், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



  • Dec 03, 2024 09:36 IST
    கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை

    சேலம் மாவட்டத்தில் கனமழையால் கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கிய நிலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



  • Dec 03, 2024 08:56 IST
    120 ஆடுகள் பலி

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விவசாயி ஒருவரின் 120 ஆடுகள் உயிரிழந்த நிலையில் சில ஆடுகள் வெள்ளத்தால் உயிரிழந்தன. 



  • Dec 03, 2024 08:54 IST
    கரை உடைப்பு; நெற்பயிர்கள் சேதம்

    பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பெரிய ஏரி மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விளைநிலங்களில் புகுந்து நெல் வயல்கள் சேதமடைந்தன.



  • Dec 03, 2024 08:41 IST
    பலியானோரின் உறவினர்கள் போராட்டம்

    திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி பலியானோரில் முழுமையாக 3 பேரின் உடல்கள் மீட்க்கப்படாத நிலையில் அவர்களது  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Dec 03, 2024 08:39 IST
    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது

    சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.



  • Dec 03, 2024 08:38 IST
    மக்களவையை ஒத்திவைக்க கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

    நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும். நிவாரணத்தை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.  புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் மக்களவையை ஒத்திவைக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.



  • Dec 03, 2024 07:59 IST
    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.



Tamil News news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment