Advertisment

Tamil News Updates: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு

Tamil news today Live, Telangana Assembly Election, tamilnadu And Chennai Rains Today- 30 November 2023: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sadae

Tamilnadu Live News Update

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் 558வது நாளாக மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ102.63, டீசல் ஒரு லிட்டர் ரூ94.24 விற்பனை செய்யப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை : தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மீட்புக்குழுக்கள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில், தலா 25 பேர் கொண்ட 4 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு குழு சென்னை இந்திரா நகர் பகுதியில் முகாமிட்டுள்ளது. அரக்கோணம் படைப்பிரிவு பகுதியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு்ளளது.

  • Dec 01, 2023 07:03 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டது.  நீர்வரத்து 1431 கன அடியாக உள்ளது.



  • Nov 30, 2023 22:11 IST
    திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

    திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியின் பாட்டிக்கும் காதில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Nov 30, 2023 21:44 IST
    புயல் எச்சரிக்கை: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு

    சென்னையில் புயல் எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.



  • Nov 30, 2023 21:01 IST
    சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனின் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நவம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வும் பெறும் நிலையில் தமிழக அரசு பணி நீட்டிப்பு செய்துள்ளது.



  • Nov 30, 2023 19:24 IST
    சென்னையில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின் ஆய்வு 

    சென்னையில் கனமழை, புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்வு செய்து வருகிறார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



  • Nov 30, 2023 18:23 IST
    ஆருத்ரா மோசடி வழக்கு: பா.ஜ.க நிர்வாகி ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

     
    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், வரும் டிசம்பர் 12ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை அவரை காவல்துறை கைது செய்யக் கூடாது எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 30, 2023 17:44 IST
    2024-ம் ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர்; தகுதி பெற்ற நாடுகளின் பட்டியல் வெளியீடு

    2024-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது



  • Nov 30, 2023 17:13 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

    செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பாதிப்பு இல்லை. அடையாறு ஆறு தூர் வாரப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்



  • Nov 30, 2023 16:48 IST
    அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    அமைச்சர் பொன்முடியிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை; சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை முடிந்தவுடன் வெளியேறினார் அமைச்சர்; சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பொன்முடிக்கு ED சம்மன் அனுப்பியிருந்தது



  • Nov 30, 2023 16:48 IST
    விஜயகாந்த் உடல் நிலை: இ.பி.எஸ் ட்வீட்



  • Nov 30, 2023 16:20 IST
    கனமழை, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை : முதல்வர் முக்கிய உத்தரவு

    சென்னையில் கனமழை, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு. நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் . மின்தடை ஏற்படும் இடங்களில், மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் 



  • Nov 30, 2023 16:01 IST
    ஆளுநர்களின் அத்துமீறல்கள் குறித்து 3 மாநில முதலமைச்சர்கள் பங்கு கொள்ளும் Speaking4india விரைவில் வெளியாகிறது

    Speaking for India வலையொலி பதிவுத் தொடரில் இதுவரை 3 அத்தியாயங்களை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்; ஆளுநர்களின் அத்துமீறல்கள் குறித்து 3 மாநில முதலமைச்சர்கள் பங்கு கொள்ளும் Speaking4india விரைவில் வெளியாகவுள்ளது



  • Nov 30, 2023 15:01 IST
    மு.க.ஸ்டாலின் உத்தரவு

    கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • Nov 30, 2023 14:41 IST
    தெலங்கானா தேர்தல்

    தெலங்கானா மாநிலத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிக அளவில் மெதக் மாவட்டத்தில் - 50.80 சதவீதம்

    குறைந்த அளவில் ஹைதராபாத் -  20.79 சதவீதம்



  • Nov 30, 2023 13:50 IST
    அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த மாட்டேன்- ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம்

    ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு டிச. 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

     மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம்.

    உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்



  • Nov 30, 2023 13:47 IST
    டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும்.

    பின்னர் இது  வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும்- - வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி



  • Nov 30, 2023 13:27 IST
    4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு



  • Nov 30, 2023 13:27 IST
    டிச. 3-ம் தேதி வங்கக் கடலில் உருவாகும் புயல்

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு.

    டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Nov 30, 2023 13:27 IST
    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    அடையாற்றை தூர்வாரியதால் குடிசை பகுதிகளில் பாதிப்பு இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி திறந்து விட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.  800 கிமீ அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் வேகமாக செல்கிறது. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • Nov 30, 2023 13:10 IST
    சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது- சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • Nov 30, 2023 13:09 IST
    தஞ்சை பெரியகோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்

    தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் ஆண்கள், வேஷ்டி, பேண்ட், சட்டையும், பெண்கள், புடவை, தாவணி, சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2023 12:41 IST
    பள்ளிகளுக்கு விடுமுறை: குழப்பம் தீர்க்கப்படும்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்யும் போதும் விடுமுறை அறிவிக்காததால் குழப்பம்.

    குளறுபடிகள் நடக்காத அளவிற்கு உரிய தீர்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தகவல்.

    பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் தகவல்



  • Nov 30, 2023 12:14 IST
    அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு

    சென்னை, ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு. மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் 



  • Nov 30, 2023 12:14 IST
    அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு

    சென்னை, ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு. மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் 



  • Nov 30, 2023 12:13 IST
    ஃபார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

    ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.

    சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.

    மனுவை அவசர வழக்காக பிற்பகல் விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை - மனு

    அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் - மனு



  • Nov 30, 2023 11:59 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு. 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைப்பு 



  • Nov 30, 2023 11:59 IST
    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு. 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைப்பு 



  • Nov 30, 2023 11:59 IST
    கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

    கோவை நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு. கொள்ளையில் ஈடுபட்டது அரூரை சேர்ந்த விஜயகுமார் என போலீசார் தகவல். 

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை விஜயகுமாரின் தாயாரிடம் இருந்து மீட்பு. நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளையனுக்கு வலைவீச்சு



  • Nov 30, 2023 11:57 IST
    இ.டி முன் பொன்முடி ஆஜர்

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடி அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜர்



  • Nov 30, 2023 11:23 IST
    அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழைப் பதிவு

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செ.மீ. மழைப்பதிவு

    சென்னை கொளத்தூர், திரு.வி.க நகர் , திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 15 செ.மீ. மழைப்பதிவு . சென்னை, அம்பத்தூரில் 14 செ.மீ. மழைப்பதிவு - சென்னை வானிலை மையம் 



  • Nov 30, 2023 11:22 IST
    கனமழை எதிரொலி: சென்னையில் விமானங்கள் ரத்து

    கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்து, 15 விமானங்கள் கால தாமதம். சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து

    சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதம்



  • Nov 30, 2023 10:34 IST
    தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்" காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 48 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Nov 30, 2023 10:33 IST
    சென்னை புழல் ஏரி நீர் திறப்பு 2000 ஆயிரம் கன அடியாக உயர்வு

    புழல் ஏரியில் 2000 கன அடியாக நீர் திறப்பு புழல் ஏரியில் இருந்து உபரி நீர்திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு



  • Nov 30, 2023 10:27 IST
    தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் ஆய்வு

    சென்னை, யானைக்கவுனி பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர் சேகர் பாபு. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 22 சுரங்கப்பாதைகள் அனைத்தும் மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. முதலமைச்சர் உத்தரவின்படி அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் செயலாற்றி வருகின்றோம் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



  • Nov 30, 2023 09:29 IST
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..

    செம்பரம்பாக்கம் - 89.33%

    புழல் - 93.15%

    பூண்டி - 64.44%

    சோழவரம் - 78.72%

    கண்ணன்கோட்டை - 93%



  • Nov 30, 2023 09:25 IST
    சுரங்கப்பாதை மீட்புபணி : மீட்பு குழுவினருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதியுதவி அறிவிப்பு

    உத்திரகாண்ட சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



  • Nov 30, 2023 09:21 IST
    மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவு

    சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், கொளத்தூரில் 15 செ.மீ., திரு.வி.க. நகர், அம்பத்தூரில் தலா 14 செ.மீ. மழை பதிவு இன்று காலையில் மழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது



  • Nov 30, 2023 09:20 IST
    தி.நகர் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் : வாகன ஓட்டிகள் அவதி

    சென்னையில் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில்,தி.நகர் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 



  • Nov 30, 2023 08:31 IST
    புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 1000 கனஅடி உபரிநீர் திறப்பு

    சென்னை அடுத்த புழல் ஏரியில் அதிக நீர்வரத்து காரணமாக நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று உபரிநீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2023 08:29 IST
    கனமழை எதிரொலி : சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    கனமழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



  • Nov 30, 2023 08:26 IST
    சென்னையில் மீண்டும் மழை

    சென்னையில் தற்போது கிண்டி, அடையாறு, பட்டினப்பாக்கம், மைலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் மயிலாப்பூர் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.



  • Nov 30, 2023 08:23 IST
    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு : ஏரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக உயர்வு

    தொடர்மழை காரணமாக செம்பரம்பக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • Nov 30, 2023 07:53 IST
    சென்னை தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்றம்

    சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக 145 இடங்கில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், 68 இடங்களில் உடனடியாக மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • Nov 30, 2023 07:48 IST
    தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

    தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.



  • Nov 30, 2023 07:47 IST
    கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

    கனமழை காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



Chennai Rain tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment