தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
கூடுதல் தளர்வுகள் அமல்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தேநீர்க் கடைகள், சலூன் கடைகள், இனிப்பு கார வகைகள் விற்கும் கடை, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன.
தலைவர்கள் பற்றி அவதூறு-கிஷோர் கே சாமி கைது
அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்ததாக தரப்பட்ட புகாரில் கிஷோர் கே சாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மருத்துவமனையில் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி
டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி, செவ்வாய்க்கிழமை முதல் மக்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து 94.3 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்ட ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் விலை, ஒரு டோஸ் 1,145 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
மின்சார ரயில் சேவைகள் அதிகரிப்பு
சென்னை சுற்றுவட்டாரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை முதல் 343ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
புதுக்கோட்டையில் வடதெரு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
- 20:47 (IST) 14 Jun 2021தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12,772 பேருக்கு கொரோனா; 254 பேர் பலி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 12,772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 254 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 25,561 பேர் குணமடைந்தனர். சென்னையில் மட்டும் இன்று 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- 20:10 (IST) 14 Jun 2021மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதி
நலவாரியத்தில் மே 31க்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிய மனு பரிசீலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- 20:07 (IST) 14 Jun 2021ஒரு மணி நேரத்தில் சுமார் ரூ.73,250 கோடியை இழந்த அதானி
அதானி குழும பங்குகள் இன்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் ஒரு மணி நேரத்தில் சுமார் ரூ.73,250 கோடியை அதானி இழந்துள்ளார். இதனால், ஆசியாவின் 2வது பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்து பின்னுக்கு தள்ளப்படலா என தகவல் வெளியாகிறது. இதற்கு காரணம் அதானி குழுமத்தின் ரூ.43,500 கோடி மதிப்பு பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு முதலீடு நிறுவன கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
- 18:51 (IST) 14 Jun 2021அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை தகவல் வெளியாகி உள்ளது.
- 18:09 (IST) 14 Jun 2021பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவு
பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியருடன் மற்ற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் வர வேண்டும் எனவும், பிற 11 மாவட்டங்களில் தொற்று குறைந்த பின் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
- 18:03 (IST) 14 Jun 2021உள்ளாட்சி தேர்தலுக்காக என்னை நீக்கியுள்ளார்கள் - புகழேந்தி விளக்கம்
உள்ளாட்சி தேர்தலில் பாமகவின் ஆதரவைப் பெற என்னை நீக்கியுள்ளார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும், பலமுறை என்னை அதிமுகவிலிருந்து நீக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது அதை செய்துள்ளார் என்றும், சசிகலா ஆதரவில் இருந்து நான் விலகிய பிறகு தொலைப்பேசியில் கூட அவருடன் பேசியதில்லை எனவும் கூறியுள்ளார்.
- 17:36 (IST) 14 Jun 2021உத்திரபிரதேச செய்தியாளர் மரணம்; மம்தா கண்டனம்
சட்டவிரோத மதுபான கும்பல் குறித்த செய்திகளை வெளியிட்ட செய்தியாளர் பிரதாப்கர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்ததோடு, என்ன நடக்கிறது உத்திரபிரதேசத்தில் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
- 17:36 (IST) 14 Jun 2021உத்திரபிரதேச செய்தியாளர் மரணம்; மம்தா கண்டனம்
சட்டவிரோத மதுபான கும்பல் குறித்த செய்திகளை வெளியிட்ட செய்தியாளர் பிரதாப்கர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்ததோடு, என்ன நடக்கிறது உத்திரபிரதேசத்தில் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
- 17:02 (IST) 14 Jun 2021நகைக்கடையில் திருடிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - மாநில மனித உரிமை ஆணையம்
சென்னை, பூக்கடை பகுதியில் நகைக்கடையில் திருடிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
- 16:30 (IST) 14 Jun 2021தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 16:28 (IST) 14 Jun 2021அதிமுகவில் 15 பேர் அதிரடி நீக்கம்
முன்னாள் அமைச்சர் ஆனந்தன், கள்ளக்குறிச்சி,
முன்னாள் எம்.பி சின்னச்சாமி, ஈரோடு,
எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்கள் வாசு, வேலூர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நடராஜன், வின்செண்ட் ராஜா, சுப்பிரமணியன்,
மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி, திருச்சி,
மகளிரணி செயலாளர் சுஜாதா ஹர்ஷினி, மதுரை,
தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவா, திருவண்ணாமலை,
பில்முர் ராபர்ட், கன்னியாகுமரி,
ஸ்ரீதேவி பாண்டியன், விருகம்பாக்கம்,
இளைஞர் பாசறை ராஜேஷ் சிங், சேப்பாக்கம், சென்னை,
மாணவர் அணி ஓட்டக்காரன் ராஜூ, சேப்பாக்கம்,
இளைஞர் பாசறை சதீஷ் (எ) கண்ணா சேப்பாக்கம்,
பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மதுரை
ஆகிய 15 பேர் அதிமுகவில் இருந்து சசிகலாவுடன் தொடர்பு கொண்டதற்காக நீக்கப்பட்டுள்ளனர்.
- 15:54 (IST) 14 Jun 2021அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிரடி!
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா பதவிக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சசிகலாவுடன் தொலைப்பேசியில் உரையாடியதாக 15 அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
- 15:45 (IST) 14 Jun 2021அதிமுக வில் இருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம்!
அதிமுக செய்தி தொடர்பாளரான புகழேந்தி இன்று முதல் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- 15:42 (IST) 14 Jun 2021பொருளாளர், செயலாளர் யார்?
அதிமுக சட்டமன்ற கட்சி பொருளாளராக கடம்பூர் ராஜூவும், செயலாளராக கே.பி.அன்பழகனும், துணைச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 15:29 (IST) 14 Jun 2021அதிமுக துணை கொறடா பதவி யாருக்கு?
அதிமுக துணைக் கொறடா பதவிக்கு அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 15:27 (IST) 14 Jun 2021எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ்!
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேர்வாகியுள்ளார்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/EkhOSoHQJb
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2021 - 15:24 (IST) 14 Jun 2021அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!
அதிமுக கொறடா பதவிக்கு எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 15:12 (IST) 14 Jun 2021தடுப்பூசிக்கு பின் இரத்த தானம்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்ததானம் செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 14:51 (IST) 14 Jun 2021போலி ட்விட்டர் கணக்கு; நடிகர் செந்தில் போலீசில் புகார்!
தனது பெயரில் போலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, முதலமைச்சரை டேக் செய்து தான் சொல்லாத கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருவதாக நடிகர் செந்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
- 14:17 (IST) 14 Jun 2021நீட் ஆலோசனை கூட்டம்; ஏ.கே.ராஜன் பேட்டி!
நீட் தேர்வு விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வால் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தரவுகள் திரட்டப்படுவதாகவும், வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- 14:14 (IST) 14 Jun 2021விலங்குகளுக்கான திட்டம் தேவை; நீதிமன்றம்!
தெருவிலங்குகளின் பாதுகாப்பு, நாய்களுக்கான கருத்தடை நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கு திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயார்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- 14:10 (IST) 14 Jun 2021தலைமறைவான யூடியூப் மதன்!
யூ டியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் மதன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரின் வலைதள பக்கங்களை முடக்க யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
- 14:09 (IST) 14 Jun 2021கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு மத்திய அரசு அனுமதி!
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு நாளை மறுநாள் முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 13:45 (IST) 14 Jun 2021சுஷில் ஹரி பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்
சென்னை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் மாணவ, மாணவியர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுவரை 50 சதவீத மாணவ, மாணவியர் பள்ளி மாற்று சான்றிதழை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- 13:41 (IST) 14 Jun 20213 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:37 (IST) 14 Jun 2021அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் வருகை
எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வு குறித்து அதிமுக ஆலோசனை நடத்துகிறது. மேலும், அதிமுக சட்டப்பேரவை கொறடாவை தேர்வு செய்யவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏ-களின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
- 13:34 (IST) 14 Jun 2021அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் வருகை
எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வு குறித்து அதிமுக ஆலோசனை நடத்துகிறது. மேலும், அதிமுக சட்டப்பேரவை கொறடாவை தேர்வு செய்யவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏ-களின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
- 12:46 (IST) 14 Jun 202127 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு மதிப்பெண் பதிவேடு உள்ளன. எனவே, 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெறுகிறது என்றும் 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும், கட்டுப்பாடுகளை பின்பற்ற மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- 12:43 (IST) 14 Jun 2021நீட் தேர்வு விவகாரம் - ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நீட் தேர்வு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழக அரசு அமைத்த 9 பேர் கொண்ட குழு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
- 11:42 (IST) 14 Jun 2021தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,
அதன் யாரிப்பு நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை அரசு கண்காணிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
- 11:22 (IST) 14 Jun 2021தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமனம்
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 10:44 (IST) 14 Jun 2021கல்லணை 16ஆம் தேதி திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 16ஆம் தேதி கல்லணை திறக்கப்படுகிறது. கல்லணை திறக்கப்படுவதால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்ட நிலங்கள் பாசன வசதி பெறும். மே 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லணை திறக்கப்படுகிறது.
- 10:11 (IST) 14 Jun 2021அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- 10:06 (IST) 14 Jun 2021தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
- 10:05 (IST) 14 Jun 2021தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
- 09:31 (IST) 14 Jun 2021போக்குவரத்து தொடங்க மக்கள் ஒத்துழைப்பு தேவை -மு.க.ஸ்டாலின்
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் என தெரிவித்துள்ளார்.
- 09:25 (IST) 14 Jun 2021ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 70, 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,19,501பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 09:01 (IST) 14 Jun 2021அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா பதவி யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.