Advertisment

Tamil News Today : நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு விடுப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஊரடங்கு தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் தொற்று பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு விடுப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழகத்திற்கு மேலும் 10லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

புனேவில் இருந்து நேற்று 10 லட்சத்து 8000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இதனை தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

12-18 வயது சிறார்களுக்கு சைடஸ் கெடில்லா தடுப்பூசிக்கு அனுமதியளிக்க கோரிக்கை

பெங்களூருவைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா மருந்து நிறுவனம், 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு செலுத்தக் கூடிய சைகோவ்-டி என்ற தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ட்ரோன் விமானங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

தீவிரவாதிகளால் மிகவும் எளிதாக வாங்கக் கூடிய டிரோன் விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை மாற்று கல்லூரிகளில் மாணவர்களை தற்காலிகமாக படிக்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:52 (IST) 02 Jul 2021
    நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு விடுப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

    கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாய விலைக்கடை செயல்பட்டதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 20:55 (IST) 02 Jul 2021
    தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

    தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை தமிழ்நடு அரசு அறிவித்துள்ளது.



  • 20:25 (IST) 02 Jul 2021
    ஜூலை 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மத்திய அரசு தகவல்

    ஜூலை 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தகவல் தெவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 19:18 (IST) 02 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,230 பேருக்கு கொரோனா; 97 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,230 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இணைநோய்கள் இல்லாத 18 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:03 (IST) 02 Jul 2021
    கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.



  • 17:36 (IST) 02 Jul 2021
    ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

    சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில், சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மரணமடைந்த மாணவர் கேரளாவை சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் உன்னிகிருஷ்ணனின் தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.



  • 17:36 (IST) 02 Jul 2021
    ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

    சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில், சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மரணமடைந்த மாணவர் கேரளாவை சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் உன்னிகிருஷ்ணனின் தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.



  • 16:54 (IST) 02 Jul 2021
    3-வது அலை பரவாமல தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - உதயநிதி

    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிரின்வேஸ் சாலையில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா 3-வது அலை பரவாமல தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



  • 16:53 (IST) 02 Jul 2021
    3-வது அலை பரவாமல தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - உதயநிதி

    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிரின்வேஸ் சாலையில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா 3-வது அலை பரவாமல தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



  • 16:44 (IST) 02 Jul 2021
    பெட்ரோல் டீசல் விலை உயர்வு - டிடிவி தினகரன் கண்டனம்

    பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்தள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதிவில், விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்தாதது மத்திய அரசின் மனசாட்சியற்ற செயல் என அமமுக டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.



  • 16:39 (IST) 02 Jul 2021
    மின்கணக்கீடு டிஜிட்டல் முறையில் இருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாறறம்

    மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் முறையில் இருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்றப்படும் என்றும், மின்வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடிஇழப்பை சரி செய்ய ஸ்டார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என்று மின்வாரித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.



  • 16:35 (IST) 02 Jul 2021
    கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நெதர்லாந்து அரசு அனுமதி

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நெதர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்த 10வது ஐரோப்பிய நாடு நெதர்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.



  • 16:24 (IST) 02 Jul 2021
    திருத்தணி முருகன் கோவிலுக்கு ரோப்கார் வசதி

    பக்தர்களின் வசதிக்காக "திருத்தணி முருகன் கோவிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி" அமைக்கப்படும் என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.



  • 16:06 (IST) 02 Jul 2021
    முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



  • 15:50 (IST) 02 Jul 2021
    'ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடி' - கார்த்திக் சுப்பராஜ்

    ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதா கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்



  • 15:48 (IST) 02 Jul 2021
    கொரோனா 3வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் - உதயநிதி ஸ்டாலின்

    கொரோனா 3வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்று திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 15:43 (IST) 02 Jul 2021
    "ஐஐடி என்ன மர்ம வளாகமா? ஏகலைவனின் பிரச்னையே அவனின் ஆற்றல்தானே!"- சு.வெங்கடேசன் எம்.பி

    ”சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுகிறேன்” என்று உதவிப் பேராசிரியர் விபின் புதியதாத் விட்டில் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி “ஐஐடி என்ன மர்ம வளாகமா?” என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.



  • 15:10 (IST) 02 Jul 2021
    கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்கும் - உயர்நீதிமன்றம்

    "பேருந்துகளை இயக்குவது குறித்தும், கோவில்களை திறப்பது குறித்தும் மாநில அரசுதான் முடிவெடுக்கும்" என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், 'நிபுணர் குழுவுடன் ஆலோசித்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன என்றும், 3ம் அலை அபாயம் உள்ள நிலையில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது' என குறிப்பிட்டுள்ளது.



  • 14:46 (IST) 02 Jul 2021
    இந்தியன் 2 படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க மறுப்பு!

    லைகா நிறுவனத்தின் இடைக்கால மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தியன் 2 படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.



  • 14:35 (IST) 02 Jul 2021
    "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல..." - நடிகர் சூர்யா ட்வீட்!

    சினிமா ஒளிப்பதிவிற்கான (திருத்த) சட்ட வரைவு இந்த ஆண்டு செய்யயப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காட்டமான முறையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல..." என்று ட்வீட் செய்துள்ளார்.



  • 13:46 (IST) 02 Jul 2021
    7.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல்

    சார்ஜாவில் இருந்து உடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த 7.9 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.



  • 13:19 (IST) 02 Jul 2021
    இந்தியாவில் தமிழகம் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும் - ஸ்டாலின்

    தமிழகம், இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும் என்றும் பின் தங்கிய மாவட்டம் என எதுவும் இருக்க‌க்கூடாது என்றும் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



  • 12:48 (IST) 02 Jul 2021
    10.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது

    வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 12:46 (IST) 02 Jul 2021
    பட்டா வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது

    தமிழகத்தில் பட்டா வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு வருவாய் துறை தொடர்பான கோரிக்கைகளே அதிகமாக வந்துள்ளன என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.



  • 11:50 (IST) 02 Jul 2021
    ஊரடங்கு தளர்வு - முதல்வர் ஆலோசனை

    மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 5-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.



  • 11:11 (IST) 02 Jul 2021
    தமிழகத்தின் வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • 10:18 (IST) 02 Jul 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 853 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து 59,384 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 10:07 (IST) 02 Jul 2021
    சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு -மா.சுப்பிரமணியன்

    தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் தொற்று சிறிது அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.



  • 10:04 (IST) 02 Jul 2021
    சென்னையில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

    சென்னையில் பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.100.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையில் லிட்டர் ரூ.93.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:49 (IST) 02 Jul 2021
    டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய நீச்சல் வீராங்கனை தகுதி

    பேக் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் இந்தியாவில் இருந்து முதல் வீராங்கனையாக மானா படேல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.



Tamil News Live Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment