Petrol and Diesel Price: சென்னையில் 102-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ₨101.40-க்கும், டீசல் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தேர்தல் வாக்குறுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பொய் கூறுகிறார் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
முதல்வர் 80% பாஜக குறித்துதான் பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
India News Update: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 55 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. உ.பி.யில் 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கோவாவில் 40 தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேபாேல் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி அருகே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
விண்ணில் ஏவப்பட்டது செயற்கைக்கோள்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV C-52 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-04 விண்ணில் ஏவப்பட்டது
Corona update: உலகளவில் இதுவரை 41.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 33.25 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.33 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், நாளை முதல் நடைபெறவிருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்
10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்
மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பீகாரில், ஹிஜாப் அணிவதில் எந்த தடையும் இல்லை என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு கேள்வித்தாளும் லீக் ஆனதாக புகார் எழுந்துள்ளது. இது கேள்வித்தாள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்பட கலைஞர் குமார் குடும்பத்திற்கு பத்திரிக்கையாளர் நல நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகிறார் என உதயநிதி ஸ்டாலின் நெல்லை பிரசாரத்தில் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப்ரவரி 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 18 வரை கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து' பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான 10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதுரை மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஊழல் செய்துள்ளது`என்று கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி கோரி சென்னை மாநகராட்சி, காவல்துறைக்கு உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை மாநகர காவல்துறை, மாநகராட்சி, தமிழக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர்கள் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்ற டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
கேரளாவின் குரும்பாச்சி மலைப்பகுதிகளில் அனுமதியின்றி மலையேற்றம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற, யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றிய திரு.டி.குமார் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/LAj7qHdhuA
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 14, 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறால் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோவையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,747.08 புள்ளிகள் சரிந்து 56,405.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெறறது. அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 531.95 புள்ளிகள் சரிந்து 16,842.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், குமரி மாவட்ட பிரச்சாரத்தில் “இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 10, 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியான நிலையில் நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ”பிரதமர் மோடி தனது ஒவ்வொரு பேச்சிலும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன், 15 லட்சம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வேன் என்றும் கூறினார். ஆனால் யாருக்கு கிடைத்ததா என கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தலில் ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக, பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தொடர்ந்த வழக்கில், கோரிக்கை மனுவை 2 நாட்களில் மறுபரிசீலனை செய்யும்படி கோவை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் மாசிமகத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்து வருவதால், திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கான்பூர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேசத்தில்’ கல்லூரிகளுக்கு செல்லும் இஸ்லாமிய மாணவிகளின் எண்ணிக்கை’ கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளதாக பேசினார்.
விவசாயிகளுக்கு மானிய விலையில்’ பெட்ரோல், டீசல் வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்குவது அரசின் கொள்கை முடிவு, இதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் சேர, பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு அறிவித்துள்ளார்.
2022ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு, விசாரணையில் சிறந்து விளங்கும் காவலர்களின் பெயர்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் பரிந்துரைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2021 நவம்பர் 14.87% மற்றும் டிசம்பர் மாதத்தில் 13.56% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 12.26% ஆக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது திமுக. மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று நாகர்கோவிலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் ரயில்வே நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம். விவசாயிகள் இன்று மாலை ரயில் மூலம் மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என்றும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் எதிர் மனுதாரர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கீழடி புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஹிஜாப் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து வந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்து ரூ. 37,496க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,687 ஆகும்.
பிரபல ஆன்லைன் வர்த்தக செயலியான அலிபாபா, டென்செண்ட்ம்m நெட் ஈஸ் உள்ளிட்ட மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 36 வது கட்ட விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். இதுவரை 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 1,042 பேர் ஆஜராகி உள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றார்.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தொடங்கியது. நேற்று காலை வெளியான அறிவியல் கேள்விகளை கொண்டு தேர்வு தொடங்கியது. புதிதாக கேள்விகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித மாற்றமும் இன்றி தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கோவா மாநிலம், கோதம்பியில் உள்ள வாக்குச் சாவடியில் அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வாக்கு செலுத்தினார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மிகச் சிறந்த ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வந்தது. இதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இல்லையெனில் காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைப் போல உத்தரப் பிரதேசம் ஆகிவிடும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
காலை 9 மணிக்குள் கோவாவில் 11 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 9 சதவீதமும், உத்தரகாண்டில் 5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 172.95 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 11,66,993 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
யார் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். 60-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் (2-ஆம் கட்டத் தேர்தல்) ஆகிய மாநிலங்களில் வாக்களிக்கத் தகுதி கொண்ட அனைவரும் ஆர்வமுடன் முன்வந்து வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.