scorecardresearch
Live

Tamil News Today: ஆக்கிரமித்து கட்டினால் தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – ஐகோர்ட்

அமெரிக்காவின் மாடெர்னா கொரோனா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும், அவசரகால பயன்பாட்டிற்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tamil News Today: ஆக்கிரமித்து கட்டினால் தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – ஐகோர்ட்

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சி.சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று மாலை பிறப்பித்துள்ளார்.ஏற்கெனவே இவர் டிஜிபி அந்தஸ்தில் ரயில்வே பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வருகிறார்.

3வது அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும், அரசு மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வாங்கவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும்.

பஸ் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், பேருந்து பயணச்சீட்டுக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டமில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்த வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
21:27 (IST) 30 Jun 2021
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டினால் தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – ஐகோர்ட்

நாகையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டினால் அது தாஹ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

20:22 (IST) 30 Jun 2021
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,506 பேருக்கு கொரோனா; 113 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,506 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 113 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்ரு 5,537 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

19:09 (IST) 30 Jun 2021
புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

19:07 (IST) 30 Jun 2021
நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

17:52 (IST) 30 Jun 2021
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : மத்திய மாநில அரசுகள் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்.பி.பி.எஸ் சேர்க்கை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு திட்ட வரைவு எதுவும் அனுப்பவில்லை என்று தமிழக அரசும், தமிழக அரசு தரப்பில் எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று மத்திய அரசும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளன.

17:27 (IST) 30 Jun 2021
தமிழகத்தை சொந்த மண்ணாக கருதுகிறேன் – முன்னாள் டிஜிபி திரிபாதி

தமிழகத்தில் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னையில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய முன்னாள் டிஜிபி திரிபாதி தமிழகத்தை சொந்த மண்ணாக கருதுகிறேன் – தமிழக மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று கூறியுள்ளார்.

17:24 (IST) 30 Jun 2021
காவல்துறையின் சாணக்கியர் திரிபாதி – டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னையில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறையின் சாணக்கியராக திகழ்ந்தார், திரிபாதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

16:49 (IST) 30 Jun 2021
ஆசிரமத்தை அபகரிக்க முயற்சி : சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

கேளம்பாக்கத்தில் உள்ள 70 ஏக்கர் பரப்பிலான ஆசிரமத்தை அபகரிக்கும் நோக்கில் அரக்கட்டளைநிர்வாகிகள் செயல்படுவதாக சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

16:40 (IST) 30 Jun 2021
டீசல் விலை உயர்வு : கார் வியாபாரிகள் வேதனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணையம் செய்து வருகிறது. ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் விலை தினமும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், பெட்ரோலுக்கு இணையாக டீசல் விலையும் உயர்வதால், விற்பனையாகாமல் கிடக்கும் கார்கள் குறித்து| கார் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

16:34 (IST) 30 Jun 2021
தமிழக முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பணி நிறைவு விழா

தமிழக முன்னாள் டிஜிபி திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவரின் பணி நிறைவு விழா நடைபெற்று வருகிறது சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பற்கேற்றுள்ளனர்.

15:23 (IST) 30 Jun 2021
இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்- பிரதமர் மோடி

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல் என்றும் ஜிஎஸ்டி வெளிப்படைத்தன்மையை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரி சுமையை குறைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

15:01 (IST) 30 Jun 2021
அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது – எடப்பாடி பழனிசாமி

அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது என கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை அடிப்படையில் தான் மின்வாரியத்திற்கு கடன் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

14:21 (IST) 30 Jun 2021
கைதி முத்து மனோவின் உடலை ஜூலை 2க்குள் பெற வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த கைதி முத்து மனோவின் உடலை ஜூலை 2க்குள் பெற வேண்டும் என முத்துமனோவின் உறவினர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், உறவினர்கள் உடலை பெறாவிட்டால் மாவட்ட நிர்வாகமே இறுதிச்சடங்கு செய்யவும் உத்தரவு

14:11 (IST) 30 Jun 2021
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

13:45 (IST) 30 Jun 2021
ஹூண்டாய் ஆலையில் ஒரு கோடியாவது கார் அறிமுகம்

ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்த பின், தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம் என்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேவையாற்றி வருகிறது ஹூண்டாய் கார் நிறுவனம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் பொருளாதார நிலையை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவோம் என்று உறுதியளித்தார்.

13:32 (IST) 30 Jun 2021
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. கடற்கரை சாலை, பூங்காக்கள் ஆகியவை இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மற்றும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது.

13:29 (IST) 30 Jun 2021
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லை

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்றும் பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

11:37 (IST) 30 Jun 2021
தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு

தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.

11:03 (IST) 30 Jun 2021
கொரோனா மரணம்- இழப்பீட்டுக்காக வழிமுறைகள் வகுக்க உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரேனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் முறையை எளிமையாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

10:44 (IST) 30 Jun 2021
மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும்- மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம் எனவும், அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடைபோடும் என கூறினார். அண்ணா பெயரில் புதிய திட்டங்கள் குறித்த அறிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

10:07 (IST) 30 Jun 2021
கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது

கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவைக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை நிர்ணயிக்கப்படும் என கூறியுள்ளார்.

09:51 (IST) 30 Jun 2021
இந்தியாவில் ஒரே நாளில் 45,951 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 817பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 60,729 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

09:04 (IST) 30 Jun 2021
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவி வருகிறது. குறுவை பணிகளைத் தொடங்கி இருந்த நிலையில் கச்சா எண்ணெய் பரவி வருவதால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

08:52 (IST) 30 Jun 2021
சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

சிபிசிஐடி காவல் விசாரணை முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2 நாள் விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

08:47 (IST) 30 Jun 2021
சிவசங்கர் பாபா இ-மெயில் முடக்கம்

சிவசங்கர் பாபாவின் இ – மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய “ஆபாச சாட்” சிக்கியது. மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரமும் சிக்கியது. சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ – மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கினர்

Web Title: Tamilnadu news live today mk stalin neet corona lockdown admk sasikala