Advertisment

News Highlights : இன்று முதல் கடுமையாகிறது ஊரடங்கு -காவல்துறை எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights : இன்று முதல் கடுமையாகிறது ஊரடங்கு -காவல்துறை எச்சரிக்கை

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது

ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. இன்று காலை ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதற்கட்டமாக நெல்லை மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

12ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடைபெறும்

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறைவதைப் பொருத்து தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

2 மாதங்களுக்கு ஊரடங்கு தேவை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. தினசரி உயிரிழப்பும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10% அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அவசியம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

பிரதமர், ஆர்பிஐ ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன்களுக்கு EMI செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கக் கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

8 வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: வேளாண் அமைச்சர்

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரங்களில், அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக, ஆராய்ந்து உரிய முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"



  • 21:39 (IST) 13 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு



  • 21:38 (IST) 13 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு



  • 20:08 (IST) 13 May 2021
    சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    இன்று நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • 20:06 (IST) 13 May 2021
    ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி

    ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 19:47 (IST) 13 May 2021
    சீமானின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • 18:44 (IST) 13 May 2021
    கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு அறிவிப்பு

    கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்கப்படவுள்ளது. கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, பருப்பு, மஞ்சள் தூள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.



  • 18:39 (IST) 13 May 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், சிலர் அதை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.



  • 17:56 (IST) 13 May 2021
    தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

    தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். மானிய சலுகை பெற இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 17:51 (IST) 13 May 2021
    கடலூர் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு15 லட்ச ரூபாய் நிவாரணம் -தொழிற்சாலை அறிவிப்பு

    கடலூர் சிப்காட் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை தரப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாய் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிற்சாலை நிர்வாகம் இந்த முடிவை அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:38 (IST) 13 May 2021
    100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை கேட்டறிகிறார் பிரதமர் மோடி. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு. முதல் கட்டமாக வரும் 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20ஆம் தேதியும் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை.



  • 17:34 (IST) 13 May 2021
    தடுப்பூசி இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.



  • 17:21 (IST) 13 May 2021
    ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன.



  • 17:08 (IST) 13 May 2021
    கோவிஷீல்ட் போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு!

    கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடுவதற்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 வாரங்களாக இருந்த இடைவெளி, 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.



  • 17:04 (IST) 13 May 2021
    சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று அதிகம்; மத்திய அரசு!

    தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 17:02 (IST) 13 May 2021
    பொன் ராதாகிருஷ்ணன் குணமடைந்தார்!

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொன்.ராதாகிருஷ்ணன் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.



  • 17:00 (IST) 13 May 2021
    ரெம்டெசிவிர் விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்!

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து, இனிமேல் நேரு ஸ்டேடியத்தில் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 15:39 (IST) 13 May 2021
    கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வெளியே நிறுத்தக்கூடாது - ஐகோர்ட்

    கொரோனா பாதித்தவர்களுடன் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்க கூடாது. மருத்துவமனைகளில் தற்காலிக படுக்கைகளாக ஸ்ட்ரெச்சர்களை படுக்கைகளாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் நடவடிக்கையில் திருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்,

    "மூடப்பட்ட, செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை தற்காலிகமாக சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.



  • 15:12 (IST) 13 May 2021
    சென்னையில் கொரோனாவுக்கு காவல் உயர் அதிகாரி உயிரிழப்பு

    சென்னையில் பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் (52) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் இதுவரை 24 போலீசார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.



  • 15:07 (IST) 13 May 2021
    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை மரணம்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய தந்தை செந்தமிழன் காலமானார் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.



  • 15:01 (IST) 13 May 2021
    கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவருடைய மகள் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.



  • 14:17 (IST) 13 May 2021
    தடுப்பூசி மீதான வரியை பூஜ்ஜியமாக்குக; மத்திய அரசுக்கு முதலவர் ஸ்டாலின் வேண்டுகோள்!

    கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத்தொகைகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 13:57 (IST) 13 May 2021
    தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

    வருகின்ற 15ம் தேதி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மிகக்கனமழை பெய்ய இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் 15ம் தேதி அன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • 13:55 (IST) 13 May 2021
    சிப்காட் விபத்து : இழப்பீடு அறிவிப்பு

    பாய்லர் வெடித்து உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயம் அடைந்த 10 நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 13:53 (IST) 13 May 2021
    கொரோனா மருந்துகள் மீதான ஜிஎஸ்டியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்

    கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசி மீதான ஜிஎஸ்டியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத் தொகைகளையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை



  • 13:48 (IST) 13 May 2021
    பத்ம ப்ரியாவும் கட்சியில் இருந்து விலகல்

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து சமீபத்தில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம ப்ரியா கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்றும் “சில காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



  • 13:44 (IST) 13 May 2021
    தனிப்பட்ட காரணங்களுக்காக ம.நீ.மவில் இருந்து விலகினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.



  • 13:11 (IST) 13 May 2021
    பெண்களின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேரமாக்கள்

    பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள், நிர்பயா திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டும் என்று ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 12:50 (IST) 13 May 2021
    3,070 காவல்துறையினருக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் 3,070 காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:49 (IST) 13 May 2021
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்

    தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு தினங்களில் 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டு வரப்பட உள்ளது



  • 12:46 (IST) 13 May 2021
    உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! - ஸ்டாலின் வீடியோ

    கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் வைக்க உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் என்று முதல்வர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    உலகத் தமிழர்களே!

    உயிர்காக்க நிதி வழங்குவீர்! https://t.co/7P7Gcz5yxV

    — M.K.Stalin (@mkstalin) May 13, 2021


  • 12:27 (IST) 13 May 2021
    கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறை சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

    சென்னை பெரியார் திடலில் 50 படுக்கைகளுடன் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறை சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மருந்துகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும்; கொரோனா பேரிடரை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 11:44 (IST) 13 May 2021
    திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி

    தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.



  • 11:43 (IST) 13 May 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை -3 பேர் கைது

    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.



  • 11:23 (IST) 13 May 2021
    திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி

    தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.



  • 11:00 (IST) 13 May 2021
    தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி

    இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

    மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.



  • 10:42 (IST) 13 May 2021
    மேலும் 3 நோயாளிகள் உயிரிழப்பு

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:37 (IST) 13 May 2021
    தமிழகம் வருகிறது ஆக்சிஜன் ரயில்

    மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயிலில் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டையார்பேட்டைக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகிறது.



  • 10:01 (IST) 13 May 2021
    ஸ்டெர்லைட் ஆக்சிஜன் நெல்லை மருத்துவமனை வந்தடைந்தது

    ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்து அனுப்பப்பட்ட ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தது. டேங்கர் லாரியில் இருந்து 4.82 டன் ஆக்சிஜனை அரசு மருத்துவமனைக் கிடங்கில் நிரப்பும் பணி நடந்து வருகிறது.



  • 09:32 (IST) 13 May 2021
    பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

    கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:31 (IST) 13 May 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 4,1209 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஒரே நாளில் 3,52,181 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.



  • 09:25 (IST) 13 May 2021
    பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

    கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 09:15 (IST) 13 May 2021
    பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

    கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Tamil News Live Update Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment