Tamil Nadu news today Updates : வரும் மார்ச் 31 க்குள் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்) செயல்படாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 27ம் தேதி வரையில் 30.75 கோடிக்கும் அதிகமான பான் அட்டை ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 17.58 கோடி பான் அட்டை இன்னும் ஆதார் அட்டையோடு இணைக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
CAA Protest Live Updates : நள்ளிரவில் பரபரப்பைக் கிளப்பிய குடியுரிமை எதிர்ப்புப் போராட்டம்
மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை “துரோகிகள், தேச விரோதிகள் என்று அழைக்க முடியாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மக்கள் சட்டத்தை எதிர்க்க விரும்புகிறார்கள், எவ்வாறு இதை தேச துரோகமாக பார்க்க முடியும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது.
இதுபோன்ற, மேலும் பல செய்த செய்திகளை அறிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Tamil Nadu news today : சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் நாட்டமுடையவர் என்றும், ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், அதில் தமிழருவி மணியன் இருக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது அம்மாநில காங்கிரஸ் கட்சி சரியான முறையில் வேலை செய்யாததே தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை வறுத்தெடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
குஜராத்திற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரைப் புதுப்பிக்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை விமர்சிக்கும் விதமாக பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Mr PRIME MINISTER .... you can hide US from TRUMP .. can you hide YOUR SELF from US .. SHAME on you. #JustAsking pic.twitter.com/gWhIDTzg3Z
— Prakash Raj (@prakashraaj) February 15, 2020
டெல்லியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சங்கத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுமையான படைப்புகளை வணிகமயமாக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட பிரதமர், அறிவியலை பரந்த அளவில் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அறிவியலின் பக்கம் மாணவர்கள் ஈர்க்கப்படுவதன் மூலம்தான், அடுத்த தலைமுறைக்கான அறிவியல் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தேவையை அறிந்து விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் என்றும், ஊட்டச் சத்து குறைபாடு, விவசாய உற்பத்தி பெருக்கம், தண்ணீர் சேமிப்பு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அவர் கட்சி தொடங்குவார? மாட்டாரா? என்பதை ரஜினி தான் சொல்லவேண்டும் தமிழருவி மணியன் கிடையாது. கமலாவது களத்திற்கு வந்து விட்டார். ஆனால் ரஜினி இன்னும் களத்திற்கு வரவில்லை. நாங்கள் ரஜினியின் மீது மரியாதை வைத்திருக்கிறோம்.
ஆனால் அரசியலில் எப்படி இருப்பார் என்பது தெரியவில்லை. இப்போதுவரை அவர் நடிகர் தான். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது மிகப்பெரிய கடல். அப்படிப்பட்ட அரசியலில் எப்படி தன்னை எப்படி முன்னெடுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில் ரஜினிகாந்த் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். ரஜினி நிறைய குழப்பம் அடைகிறார். எந்த ஏழுபேர் என்று கேட்கிறார். ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுப்பதைப் போல தான் தெரிகிறது. அவரின் சொந்த கருத்து அல்ல’ என்று தெரிவித்தார்.
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அவர் கட்சி தொடங்குவார? மாட்டாரா? என்பதை ரஜினி தான் சொல்லவேண்டும் தமிழருவி மணியன் கிடையாது. கமலாவது களத்திற்கு வந்து விட்டார். ஆனால் ரஜினி இன்னும் களத்திற்கு வரவில்லை. நாங்கள் ரஜினியின் மீது மரியாதை வைத்திருக்கிறோம்.ஆனால் அரசியலில் எப்படி இருப்பார் என்பது தெரியவில்லை. இப்போதுவரை அவர் நடிகர் தான். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது மிகப்பெரிய கடல். அப்படிப்பட்ட அரசியலில் எப்படி தன்னை எப்படி முன்னெடுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில் ரஜினிகாந்த் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். ரஜினி நிறைய குழப்பம் அடைகிறார். எந்த ஏழுபேர் என்று கேட்கிறார். ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுப்பதைப் போல தான் தெரிகிறது. அவரின் சொந்த கருத்து அல்ல’ என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு முள்ளங்கி சாகுபடி நல்ல லாபத்தை தந்ததால் இந்தாண்டும் அதிகம் அளவில் விவசாயிகள் முள்ளங்கி பயிரிட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு முள்ளங்கி விலை போகவில்லை.
விலை ஏறாததால் விற்பனை ஆகாத முள்ளங்கியை சொந்த நிலத்திலேயே உழுது விவசாயிகள் அழித்தனர். சாகுபடி செய்த பயிருக்கு உரிய விலை கிடைக்காததாலும், பதப்படுத்தும் நிலையம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் விவசாயிகளை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
100 மீட்டர் தூரத்தை ஜமைக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் 9.58 விநாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ள நிலையில் , அதனை கம்பாளா வீரர் ஸ்ரீனிவாசா கவுடா 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர் திங்களன்று இந்திய விளையாட்டு ஆணையம் வந்தடைவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் 77-வது சீனியர் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்தன. இதில் இன்று மகளிர், ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப்போட்டிகள் நடந்தன.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தான்வி கண்ணாவை எதிர்த்துக் களமிறங்கினார் ஜோஷ்னா சின்னப்பா. இதில் தான்வி கண்ணாவை 8-11, 11-6, 11-4, 11-7 என்ற கணக்கில் வீழ்த்தி 18-வது சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா கைப்பற்றினார். தொடக்கத்தில் முதல் செட்டை இழந்த ஜோஷ்னா அதன்பின் சுதாரித்து ஆடி வாகை சூடினார்.
16-தேசிய சாம்பியன் பட்டங்களை புவேஷ்வரி குமார் பெற்றிருந்ததைக் கடந்த ஆண்டு ஜோஷ்ணா புனேயில் முறியடித்தார். இந்த முறை 18-வது சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா வென்றுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தைவென்ற ஜோஷ்ணா, இரு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார், அந்த இருபோட்டிகளும் இறுதிப்போட்டிகளாகும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள அபிஷேக் பிரதானை 11-6, 11-5, 11-6 என்ற செட்களில் வீழ்த்தினார் சவுரவ் கோஷல். இது அவருக்கு 13-வது சாம்பியன் பட்டமாகும்.
"On the streets of Chennai" குழு தனது மெட்ரோ சீரிஸின் ஒரு பகுதியாக இன்று சென்னை மெட்ரோ ரயிலில் இசைத்த இன்னிசை,
Concerts at the Metro Series: Performance by "On the streets of Chennai" 15.02.2020#ChennaiMetro #CMRL pic.twitter.com/WjUvTaugYr
— Chennai Metro Rail (@cmrlofficial) February 15, 2020
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சத்துணவினால் 5 லட்சம் மாணவpர்கள் பயன்பெறுவதாக குறிப்பிட்டார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சாதி மத வேறுபாடு இன்றி சேவையாற்றி வரும் அக்ஷய பாத்திரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையளிப்பதாக குறிப்பிட்டார். மேலும், இத்திட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் 5 கோடி ரூபாய் வழங்கியதற்கு துணை முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்ட காளைகளை, மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்க முயன்றனர்.
இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், செல்போன்கள், வாட்ச் போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
கடந்த 3 ஆண்டகளில் 250 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாகவும், 202 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மழலையர் கல்வியை மேம்படுத்த 2 ஆயிரத்து 381 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 58 ஆயிரத்து 654 இளைஞர்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி அளிக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 992 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக 231 புள்ளி 72 கோடி ரூபாய் செலவில் குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 9 லட்சத்து 83ஆயிரத்து 435 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொடர் முயற்சியால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 930 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 955 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலம் 22 ஆயிரத்து 96 கோடி ரூபாய் செலவில் 21 ஆயிரத்து 109 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 921 புதிய பேருந்துகளும், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகளும், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் மாநாடு நாளை பாரிஸில் தொடங்குகிறது. பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 205 நாடுகள், சர்வதேச நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை சேர்ந்த 800 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் , பயங்கரவாத மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவதை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் பதவிகள் நியமனத்தில் முறையாக விதிகள் பின்பற்றப்பட வேண்டும்
எஸ்.பி முதல் டிஜிபி வரையிலான பதவிகளில் ஐபிஎஸ் அதிகாரிகளை முறையாக நியமிக்க வேண்டும்
- தமிழக தலைமைச்செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கியது. 5 ஆயிரத்து 376 மையங்களில் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வையும், 4 ஆயிரத்து 983 மையங்களில் நடைபெறும் 12 ஆம் வகுப்பு தேர்வையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, முப்பதாயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வையும், இருபதாயிரம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதுவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பால்வளத்துறை ஆணையர் அறிவித்துள்ளார். ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தால் தனியார் டேங்கர்கள் மூலம் பால் பண்ணைகளுக்கு பால் கொண்டுவரப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகி வரும் அட்சய பாத்திரம் சமையலறைகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி .வேலுமணி, உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்
மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். துணை நிலை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க, பதவி ஏற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார். நடிகர் விஜய் ரஜினிக்கு சமமானவர் இல்லை என்றும் நடிகர் அஜித் தான் ரஜினிக்கு சமமானவர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று பல்வேறு மாநில பாஜக தலைவரை நியமித்தார். கேரளா பாஜக தலைவர் - கே. சுரேந்திரன், மத்திய பிரதேசம் பாஜக தலைவர் - விஷ்ணு தத், சிக்கிம் பாஜக தலைவர் - பகதூர் சவுகான்
நீண்ட நாள் காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அரசியல் வட்டராத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என்று ராதா ரவி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி" ராதா ரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது. அனைத்து பிரச்சனைகளையும் சட்ட ரீதியாக எதிர் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா ஃபைசல் மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது . கடந்த ஆண்டு காஷ்மீர் அரசியல் தீர்வு வேண்டும் என்ற நோக்கில் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீடு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டில், ஐஏஎஸ் தேர்வில் சாதித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையை ஷா ஃபைசல் பெற்றார்.
TNPSC Group 4,2A Exam : சம்பிபத்தில் நடந்த குரூப் 4, 2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைத் தொடர்ந்து தேர்வாணையம் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. வரும் காலங்களில் குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வுகளில் முதல்நிலை (பரிலிம்ஸ்), முதன்மைத் (மெயின்ஸ்) தேர்வுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டுளது. அதாவது upsc, group I தேர்வுகள் போல் நடத்தபப்டும்
இந்திய அரசியலமைப்பில் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தனது தீர்ப்பில் தெரிவித்தது. அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலித் எம்.பி.க்கள் மத்திய உணவு மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை சந்தித்து இடஒதுக்கீட்டுடன் கூடிய இந்திய நீதித்துறை பணியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் (Indian judicial Service )
துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தான் நாட்டிற்கு இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய எர்டோகன், ""ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும், காஷ்மீரில் இருக்கும் எட்டு மில்லியன் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். காஷ்மீர் முற்றுகை இடப்பட்டுள்ளது, இன்று காஷ்மீர் பிரச்சினை உங்களிடம் (பாகிஸ்தான் )இருப்பதை போலவே எங்களுக்கும் நெருக்கமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கு இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்திய நாட்டின் உள்விவகாரங்ககளில் தலைஇடுவது முறையல்ல என்றும் கூறியுள்ளது.
துணை முதல்வரின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights