Advertisment

Tamil News Updates: மறைந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி

Tamil Nadu News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu

Tamil News Updates

tamilnadu news | பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில், மாற்றம் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், சென்னையில் 22 வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Apr 07, 2024 07:28 IST
    மறைந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • Apr 07, 2024 07:04 IST
    சென்னையில் ரூ. 4 கோடி பறிமுதல்

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது. 

    நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்.



  • Apr 06, 2024 22:17 IST
    புகழேந்தி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்



  • Apr 06, 2024 20:56 IST
    இட ஒதுக்கீட்டை பறிக்க பல்வேறு வழிகளில் பா.ஜ.க முயற்சி -ஸ்டாலின்

    இட ஒதுக்கீட்டை பறிக்க பல்வேறு வழிகளில் பா.ஜ.க முயற்சிக்கிறது. பா.ஜ.க – பா.ம.க கூட்டணியை பா.ம.க தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. வளர்ச்சி அடைந்த நாடு உருவாக, இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்



  • Apr 06, 2024 20:36 IST
    மோடி வாஷிங் மெஷினில் ஊழல்வாதிகள் தூய்மையாகின்றனர் - ஸ்டாலின்

    மோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார், மேட் பை பா.ஜ.க. அந்த வாஷிங் மெஷினில் உள்ளே சென்றால் ஊழல்வாதிகள் தூய்மையாகின்றனர் என சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்



  • Apr 06, 2024 20:13 IST
    மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை - ஸ்டாலின்

    மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி என சிதம்பரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்



  • Apr 06, 2024 20:02 IST
    பா.ஜ.க – பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – ஸ்டாலின்

    பா.ஜ.க – பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. இந்தியா கூட்டணி தான் சமூக நீதிக் கூட்டணி. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது என கடலூர் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்



  • Apr 06, 2024 19:05 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுமையாக தாங்கியுள்ளது - மோடி

    பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை "முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுமையாக தாங்கியுள்ளது" என்றும், "அதன் எஞ்சிய பகுதி இடதுசாரிகளின் ஆதிக்கம்" என்றும் கூறினார்.



  • Apr 06, 2024 18:31 IST
    குஜராத் மாடலுக்கு தாமரை மலர்வளையம் வைத்தவர் ஸ்டாலின் – கமல்ஹாசன்

    குஜராத் மாடலுக்கு தாமரை பூக்களால் ஆன மலர்வளையம் வைத்தவர் ஸ்டாலின் என சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்



  • Apr 06, 2024 18:16 IST
    ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது



  • Apr 06, 2024 18:00 IST
    சி.பி.ஐ ஐகோர்ட் உத்தரவு 

    "கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து" என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 



  • Apr 06, 2024 17:34 IST
    ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை - டி.டி.வி தினகரன்

    "ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. 10,000 கொடுத்தனர். 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50,000 கொடுத்தார்கள். நான் ஒன்னுமே கொடுக்கவில்லையே. ஆர்.கே. நகருக்கு நான் தான் வேண்டும் எனக்கூறி வாக்களித்தனர். ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர்" என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். 



  • Apr 06, 2024 17:31 IST
    திருச்சி பிரசாரத்தில் இ.பி.எஸ் பேச்சு

    ``சின்னத்தை முடக்க வேண்டுமென சிலர் முயற்சி செய்தனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க'' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

     



  • Apr 06, 2024 17:30 IST
    'தி.மு.க கூட்டணிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை - இ.பி.எஸ் தாக்கு  

    "தி.மு.க கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணி, அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தி.மு.க கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஸ்டாலின், மத்தியில் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க மக்களுக்கு என்ன செய்தது?'' என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Apr 06, 2024 17:26 IST
    பெங்களூருவில் தேர் சாய்ந்து விபத்து

    பெங்களூருவில் 120 அடி உயர தேர் சாய்ந்து விபத்துகுள்ளானது. தேரை வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து நடந்துள்ளது. 



  • Apr 06, 2024 17:08 IST
    ஜெ.பி.நட்டா நாளை மதுரை வருகை - ராதிகாவை ஆதரித்து பிரச்சாரம் 

    மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து நாளை (ஏப்ரல் 07) மதுரை வருகிறார். விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஜெ.பி.நட்டா ஈடுபடுகிறார்.



  • Apr 06, 2024 16:41 IST
    'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' - ஸ்டாலின் அறிக்கை

    “எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவு அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் அடக்குமுறை செய்ததும் தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா (I.N.D.I.A) கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 



  • Apr 06, 2024 16:18 IST
    'எங்களை யாரும் மிரட்ட முடியாது' - பிரேமலதா விஜயகாந்த்

    "பா.ஜ.க எங்களை மிரட்டவில்லை. உரிமையுடன் கூட்டணிக்கு அழைத்தார்கள். எங்களை யாரும் மிரட்ட முடியாது" என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 



  • Apr 06, 2024 16:09 IST
    தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு 

    "அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Apr 06, 2024 15:42 IST
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார். 

    ✦ நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்

    ✦ ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும்

    ✦ PM கேர்ஸ் நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்

    ✦ சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்

     



  • Apr 06, 2024 15:38 IST
    சி.பி.எம். வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த  ஐ.பெரியசாமி

    திண்டுக்கல் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக ஆத்தூரில் வாக்கு சேகரித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.



  • Apr 06, 2024 14:35 IST
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

    ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 06, 2024 14:10 IST
    பொருத்தமற்ற கூட்டணியை நாங்கள் அமைக்கவில்லை- ப.சிதம்பரம்

    சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக உடன் பாமக கூட்டணி

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரி, செஸ் வரி அதிகமாக இருப்பதே காரணம்

    பெட்ரோல், டீசல் மீதான வரிகளை சீரமைத்தாலே விலையை குறைக்க முடியும்

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும்

    காரைக்குடியில் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த ப.சிதம்பரம்



  • Apr 06, 2024 14:01 IST
    ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல்

    கோவை விமான நிலையத்திற்கு  உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி காரில் எடுத்து வரப்பட்ட ஐந்தரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் - தேர்தல் அதிகாரி பேட்டி



  • Apr 06, 2024 13:57 IST
    வெப்ப அலைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 06, 2024 13:41 IST
    பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்



  • Apr 06, 2024 13:36 IST
    அஞ்சலிக்காக கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புகழேந்தியின் உடல்

    மறைந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் அஞ்சலிக்காக கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இரவு 9.30 முதல் 11 மணிக்குள் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்



  • Apr 06, 2024 13:17 IST
    புகழேந்தியின் உடல் நாளை அடக்கம்

    மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின்  உடல் அவரது சொந்த கிராமமான அத்தியூர் திருவாதியில் நாளை (ஏப்.07) மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படும்

    - விழுப்புரத்தில் எம்எல்ஏ புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் பொன்முடி பேட்டி



  • Apr 06, 2024 13:08 IST
    திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

    விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும்,  எம்எல்ஏவுமான புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது;

    தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் திமுகவின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார்;

    நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது

    - திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்                                            



  • Apr 06, 2024 13:01 IST
    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமர்: வைகோ

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது - வைகோ



  • Apr 06, 2024 12:53 IST
    சீமான் பிரச்சாரம்

    பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ரூ.1000 கொடுத்துவிட்டு அதை சொல்லியே வாக்கு கேட்கிறார்கள். உரிமைத்தொகை கொடுத்துவிட்டு அதை சொல்லியே வாக்கு கேட்பது எப்படி சேவையாகும்? -  நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்



  • Apr 06, 2024 12:53 IST
    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம்

    மீண்டும் மோடி வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். ஆனால் இந்தியா கூட்டணியால்..?. நாட்டை சூறையாடுவது தான் இந்தியா கூட்டணியின் எண்ணம்.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய போது தமிழகம் கொதித்து எழுந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படி பேச முடியும்?. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 



  • Apr 06, 2024 12:33 IST
    பாஜகவின் 44-வது ஆண்டு நிறுவன தினம்

    பாஜகவின் 44-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. மீண்டும் ஒருமுறை ஆட்சி பொறுப்பை வழங்கி மக்கள் ஆசீர்வதிப்பார்கள் என நம்பிக்கை



  • Apr 06, 2024 12:32 IST
    திருச்சியில் ஜே.பி.நட்டா பேரணிக்கு அனுமதி மறுப்பு

    திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை நடைபெற இருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

    திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது

    சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை, தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு. மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தல்

    36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு



  • Apr 06, 2024 12:27 IST
    ‘இந்தியன் 2’ அப்டேட் இன்று மாலை வெளியீடு

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவிப்பு. 



  • Apr 06, 2024 12:23 IST
    மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

    24 உரிமை முழுக்கம் என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது. சி.ஏ.ஏ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 



  • Apr 06, 2024 12:04 IST
     மத்திய சென்னை பகுதியில் கமல் பிரச்சாரம்

     மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தேர்தல் பிரசாரம். 5 மணிக்கு மிண்ட் தங்க சாலை பகுதியில் பிரச்சாரம். 



  • Apr 06, 2024 11:55 IST
    ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைத்த சீல் அகற்றம் 

    ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைத்த சீல் அகற்றம் 

    நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்ட சீல் அகற்றம் 

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் வீட்டை என்.சி.பி அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்தனர். 



  • Apr 06, 2024 11:33 IST
    2-வது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு 

    சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு 

    நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் பேரில் நடவடிக்கை

    சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை

    நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை செய்து வரும் வருமான வரித்துறை

    ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை

    தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்



  • Apr 06, 2024 11:24 IST
    புகழேந்தி உடலுக்கு பொன்முடி அஞ்சலி

    மறைந்த திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு, அஞ்சலி செலுத்த அமைச்சர் பொன்முடி வருகை. கண்கலங்கிய சோகத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, மனைவியுடன் வந்தார்



  • Apr 06, 2024 11:23 IST
    விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்

    விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

    உடல்நலக்குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புகழேந்தி சிகிச்சை பெற்று வந்தார்

    விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிப்பு

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி

    1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 - 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார்

    1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.



  • Apr 06, 2024 10:49 IST
    அடுத்த 24 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் : காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

    "ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்றால் அடுத்த 24 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும்"  என விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்குறுதி அளித்துள்ளார்.



  • Apr 06, 2024 10:48 IST
    பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்

    ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் சாலையோர கடைகளில் ஜூஸ் குடித்தும், பஜ்ஜி சுட்டும் வாக்கு சேகரித்தார்.



  • Apr 06, 2024 10:44 IST
    என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் பாபர் மசூதி இடிப்பு, ராமஜென்ம பூமி குறிப்புகள் நீக்கம்

    NCERT பாடப்புத்தகங்களில் சில வரலாற்றுக் குறிப்புகள் நீக்கம்

    ஒன்றிய அரசின் NCERT பாடத்திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டுக்கான 11, 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி இடிப்பு, ராமஜென்ம பூமி, 2002 குஜராத் கலவரம், மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான சில குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளது!

    இத்தகைய திருத்தங்கள், இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகள், சமூக-அரசியல்-நிலப்பரப்பு பற்றிய மாணவர்களின் புரிதலை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து NCERT தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.



  • Apr 06, 2024 09:56 IST
    ஒரே நாளில் சவரனுக்கு ரூ840 அதிரிப்பு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ 840 அதிகரித்து ஒரு சவரன் ரூ 52,920 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ 6615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Apr 06, 2024 09:32 IST
    ஆட்டுக்குட்டியை கொன்ற சிறுத்தை?

    மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தை ஆட்டுக்குட்டியை கொன்று சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தர்காடு தண்டபாணி செட்டி தெருவில், நேற்று ஆடு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை ரயில் நிலைய கூட்ஸ் யார்ட் ப்ளாட்பார்மில் மற்றொரு ஆட்டின் உடல் பாகங்கள் இன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட ஆட்டின் தலை, முன் கால்கள் வைத்து வனத்துறை, போலீசார் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.



  • Apr 06, 2024 09:30 IST
    திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் தங்க நகைகள் அணிந்த வந்த பக்தர்

    திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிக அளவில் தங்க நகைகள் அணிந்த வந்த ஒரு பக்தர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த அவரை கண்டு வியந்த பக்தர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். 3 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை தாம் அணிந்துள்ளதாக அந்த பக்தர் தெரிவித்தார்



  • Apr 06, 2024 09:29 IST
    தஞ்சை பெரிய கோயிலில், சித்திரை பெருவிழா கொடியேற்றம்

    தஞ்சை பெரிய கோயிலில், சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். தமிழ் முறைப்படி திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த நலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.20ல் நடைபெறுகிறது



  • Apr 06, 2024 09:28 IST
    SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

    கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை. ஏடிஎம்-ல் இருந்து சுமார் ₹10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 06, 2024 09:07 IST
    பா.ஜ.க தனது சாதனைகளை சொல்ல ஒரு செங்கல்லை தவிர வேறு எதுவும் இல்லை : மு.க.ஸ்டாலின்

    கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தேர்தல் நேரத்தில், வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது. 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை தமிழக மக்களிடம் சொல்ல, ஒரு செங்கல்லை தவிர வேறு எதுவும் இல்லை என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.



tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment