Advertisment

Tamil News Updates: நான் எப்படிப் பேச வேண்டும்... எழுதிக்கொடுத்து பயிற்சியளித்தவர் முரசொலி செல்வம் - மு.க. ஸ்டாலின்

Tamil news updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin Murasoli

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 217 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2018-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ100.75-க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2497 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 474 கனஅடியில் இருந்து 450 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.

1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 183 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 145 கன அடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 317 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 41.5% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 37.8%, புழல் - 75.67%, பூண்டி - 15.6%,சோழவரம் - 16.93%, கண்ணன்கோட்டை - 63.4%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Oct 21, 2024 22:32 IST
    ‘லப்பர் பந்து’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி OTT-யில் வெளியீடு

    ‘லப்பர் பந்து’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி OTTல் வெளியாகிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்கில் வெளியான இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.



  • Oct 21, 2024 22:26 IST
    நான் எப்படிப் பேச வேண்டும்... எழுதிக்கொடுத்து பயிற்சியளித்தவர் முரசொலி செல்வம் - மு.க. ஸ்டாலின்

    முரசொலி செல்வம் படத்திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் எப்படிப் பேச வேண்டும் என்று எழுதிக்கொடுத்து பயிற்சியளித்தவர் முரசொலி செல்வம்” என்று கூறினார்.



  • Oct 21, 2024 22:04 IST
    திறந்த நிலை பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றார் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தனபால்

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தனபால் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளி சிறுவர்கள் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக சில தகவல்கள் கிடைத்ததாகவும், அதையே ஆய்வாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படித்ததாகவும் கூறினார்.



  • Oct 21, 2024 21:59 IST
    ‘நோ எண்ட்ரி’-யில் சென்ற காரை தடுத்த காவலாளி மீது சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

    மாமல்லபுரத்தில் ‘நோ எண்ட்ரி’ வழியாக சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட நான்கு பேர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 21:54 IST
    ஆண்டிப்பட்டியில் இரட்டை இலை தோற்கிறது என்றால் வேட்டி கட்டலாமா? ஓ.பி.எஸ்-ஐ தாக்கிப் பேசிய ஆர்.பி. உதயகுமார்

    ராஜபாளையத்தில் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாகத் தாக்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  “அம்மா, புரட்சித் தலைவர் ஜெயித்த ஆண்டிப்பட்டி தொகுதியில் இரட்டை இலை தோற்கிறது என்றால் நீங்கள் வேட்டி கட்டலாமா?..” என்று கேள்வி எழுப்பினார். 



  • Oct 21, 2024 20:46 IST
    கோவை குண்டுவெடிப்பு: மேலும் 3 பேர் கைது - என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை

    2022ம் ஆண்டு நிகழ்ந்த கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அபு அனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பாவாஸ் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் மீது 4 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 20:10 IST
    முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும் - மு.க. ஸ்டாலின்

    சென்னையில் நடைபெற்ற முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்” என்று கூறினார்.



  • Oct 21, 2024 19:10 IST
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    வானிலை ஆய்வு மையத்தின் மாலை 6.30 மணி அறிக்கையில், தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் தென்காசி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



  • Oct 21, 2024 18:44 IST
    சர்ச்சை வீடியோவை நீக்கினார் இர்ஃபான்

    குழந்தையின் தொப்புள் கொடியை தனது கையால் வெட்டி பதிவிட்ட வீடியோவை யூ டியூபர் இர்ஃபான் நீக்கினார். மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் வீடியோ நீக்கப்பட்டது



  • Oct 21, 2024 18:25 IST
    விமானங்களுக்கு மிரட்டல் – என்.ஐ.ஏ விசாரணை

    விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணையை கையில் எடுத்துள்ளது. மிரட்டல் வந்த இ-மெயில் முகவரி மற்றும் சமூக வலைதள முகவரியை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது



  • Oct 21, 2024 17:43 IST
    சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் - நீதிபதி தண்டபாணி

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்



  • Oct 21, 2024 17:24 IST
    திருவாரூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

    திருவாரூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கையாக திருவாரூர் - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், தற்போது சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது



  • Oct 21, 2024 17:18 IST
    காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட ஜோடி கைது

    சென்னை மெரினாவில் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் இருவரையும் வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது கைது செய்துள்ளனர்



  • Oct 21, 2024 16:53 IST
    சென்னை: போலீசாரை ஆபாசமாக பேசிய ஜோடி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

    சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை ஆபாசமாக பேசிய போதை ஜோடி கைது செய்யப்பட்டனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Oct 21, 2024 16:33 IST
    தேனி: சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் நீக்கம் 

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசனை பொறுப்பில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கையில், ரூ. 4.67 லட்சம் உரிய அனுமதியின்றி செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தொகையை நாகமணி, செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தொகையை அவர் செலுத்தாததால் செக் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் பதவி பறிக்கப்படுள்ளது. 

     



  • Oct 21, 2024 16:32 IST
    கூடுதல் கால அவகாசம் கோரிய எக்ஸ் தளம் 

    திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் மற்றும் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பயனர்களின் கணக்கு விபரங்களை தர மறுத்த எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

    "போலி கணக்குகளை உருவாக்கி மிரட்டல் விடுபவர்களின் தகவல்களை அந்நிறுவனம் தர மறுக்கி்றது என்றால், அதற்கு அந்நிறுவனமும் துணை போகிறதே என்று பொருள்” என  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தில்லை நகர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி மாநகர சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார். 

    பெங்களூரில் உள்ள எக்ஸ் நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Oct 21, 2024 16:30 IST
    போலீசாரை மிரட்டிய ஜோடியை பிடித்து விசாரணை

    சென்னை மெரினா லூப் சாலையில்  காவலர்களை  ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் சந்திரமோகன் மற்றும் அவரது தோழியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Oct 21, 2024 16:29 IST
    தூய்மை பணியாளர்கள் விபத்தில் பலி 

    மதுரை திருமங்கலம் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற நகராட்சி தூய்மை பணியாளர்கள், லாரி மோதியதில் பரிதமாக உயிரிழந்தார். நாகரத்தினம், லட்சுமி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Oct 21, 2024 16:02 IST
    காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி மீது புகார்

    சென்னை மெரினாவில் காவலர்களை தம்பதி ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில், ஆபாசமாக பேசிய தம்பதி மீது காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 



  • Oct 21, 2024 16:02 IST
    பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    நெல்லையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்தது மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். 

     



  • Oct 21, 2024 16:01 IST
    `ஒற்றை தலைமையும் பிரிட்டானியா பிஸ்கட்டும்' - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு 

    "நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை முடிவை ஓ.பி.எஸ் ஏற்க மறுத்தார். அப்போது நான் பிரிட்டானியா பிஸ்கட் மூலம் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பெயர்களை எழுதி வாக்கெடுப்பு நடத்தி தலைமை யார் என முடிவெடுக்கலாம் என கூறினேன்" என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



  • Oct 21, 2024 15:57 IST
    இ.பி.எஸ் விமர்சனம் - உதயநிதி ஸ்டாலின் பதில்!

    "என்னை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுதந்திரம் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல சீனியர்களைத் தாண்டிதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான கதையை எல்லாரும் பார்க்கத்தான் செய்தோம். பல சீனியர்களைத் தாண்டி, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது நாம் பார்த்ததுதான்” என்று எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துளளார். 



  • Oct 21, 2024 15:55 IST
    அ.தி.மு.க-வில் நடிகை கௌதமிக்கு பொறுப்பு

    அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 



  • Oct 21, 2024 15:13 IST
    வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - 24-ல் கரையை கடக்கும்  `டானா' புயல் 

    அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது `டானா' புயலாக வலுவடைந்து ஒடிசா- மேற்கு வங்க பகுதிகளில் வரும் 24ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

     



  • Oct 21, 2024 15:02 IST
    வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையைக் கடக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 14:03 IST
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து தமிழக அரசு உத்தடவிட்டுள்ளது. அதன்படி, ரூ. 16 ஆயிரத்து 800 வரை அதிகபட்சமாக போனஸ் கிடைக்குமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 13:55 IST
    17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது.



  • Oct 21, 2024 13:43 IST
    டிஐஜி-யிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

    சென்னையில், டிஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்காக பயன்படுத்தி தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.



  • Oct 21, 2024 13:30 IST
    அரசை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

    திமுக பொறுப்பேற்ற பின் அறநிலையத்துறை செய்து வரும் சாதனைகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், பக்தியை பகல் வேஷ அரசியலுக்காக பயன்படுத்துபவர்களால் இதனை தாங்கிகொள்ள முடியவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.



  • Oct 21, 2024 13:16 IST
    காரில் சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு...

    தீபாவளி பண்டிகைக்கு கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாமென அவர் அறிவுறுத்தியுள்ளார். 



  • Oct 21, 2024 13:10 IST
    முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை, திருச்சி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 24 விமானங்களுக்கு சைபர் மோசடி கும்பல் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. 



  • Oct 21, 2024 12:58 IST
    நா.த.க விழுப்புரம் மாவட்ட செயலாளர் விலகல்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். 



  • Oct 21, 2024 12:52 IST
    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்

    அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோ பதிவு செய்து மீண்டும் யூ டியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கி உள்ளார். குழந்தை பிறப்பை வீடியோ பதிவு செய்து, குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டி சர்ச்சைகுரிய வகையில் வீடியோ பதிவிட்டுள்ளார். 



  • Oct 21, 2024 12:33 IST
    14,016 பேருந்துகள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு 14,016 பேருந்துகள் இயக்கம். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

    சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம், அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

    நவம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்கப்படும். 

    சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது



  • Oct 21, 2024 12:02 IST
    வரதராஜபுரம் கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்தது

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. காட்டாற்று வெள்ளத்தால் வரதராஜபுரம் புளியமரத்து ஓடையில் உடைப்பு, வரதராஜபுரம் கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. 

    வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் அருகே உள்ள கோயிலில் தஞ்சம், வீடுகளில் இருந்த பொருட்கள் மழைநீரில் நனைந்து முழுவதும் சேதமடைந்தது. 



  • Oct 21, 2024 11:53 IST
    சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது .

    அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 



  • Oct 21, 2024 11:52 IST
    300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

    கோவையில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குறைந்த அளவிலேயே நிறுவனங்கள் போனஸ் வழங்கி இருப்பதாக குற்றஞ்சாட்டி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்., முழுமையான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமலேயே தன்னிச்சையாக பணத்தை செலுத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். 



  • Oct 21, 2024 11:18 IST
    பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்

    அறநிலையத் துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்களால் இதை தாங்க முடியவில்லை. அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 



  • Oct 21, 2024 10:55 IST
    டெல்லியில் பள்ளி அருகே நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து புதிய தகவல்

    தலைநகர் டெல்லியில் பள்ளி அருகே நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலித்தீன் பையில் சுற்றி, ஒன்றரை அடி ஆழமுள்ள குழியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளது.  சந்தேகத்திற்குரிய நபரை சிசிடிவி மூலம் தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 21, 2024 10:21 IST
    தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவு தண்ணீர்: சென்னை – பெங்களூரு சாலையில் பதற்றம்

    கிருஷ்ணகிரி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீர் தேங்கி நிற்பதால், சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.



  • Oct 21, 2024 10:18 IST
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,300, சவரன் ரூ.58,400 விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Oct 21, 2024 10:16 IST
    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக செயல்படுகிறார்: எல்.முருகன்

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக செயல்படுகிறார். ஆளுநர் மாற்றம் குறித்த யூகங்களுக்கு பதில் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.



  • Oct 21, 2024 09:39 IST
    சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும்

    சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும்- சேலத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். 



  • Oct 21, 2024 09:35 IST
    காவலர் வீரவணக்க நாள்

    காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம்  வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார்.



  • Oct 21, 2024 09:00 IST
    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரித்துள்ளது. 113 அடியைக் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 97.89 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 08:59 IST
    ஃப்ரஞ்ச் ப்ரைஸ் (FRENCH FRIES) தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ட்ரம்ப்

    தனது கல்லூரி காலத்தில் McDonald's கடையில் வேலை செய்ததாக கமலா ஹாரிஸ் பேசி வரும் நிலையில், அவரை விட 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை பார்த்துள்ளேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.



  • Oct 21, 2024 08:43 IST
    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாற வாய்ப்பு

    மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் டானா புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Oct 21, 2024 08:11 IST
    கனமழை பாதிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய பெங்களூர்

    பெங்களூருவில் வெளுத்து வாங்கிவரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. ஒக்கலிபுரம், ரிச்மண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவித்து வரும் நிலையில், கனமழை காரணமாக பெங்களூருவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 21, 2024 08:08 IST
    இந்தியாவில் ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: பயணிகள் அச்சம்

    இந்தியாவில் ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். அதே சமயம் இவை அனைத்துமே புரளி என்று தெரியவந்தவுடன் அனைவரும் நிம்மதியடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடு செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் சம்பங்கள் அதிகரித்து வருவதால், சமீபத்தில் விமான நிலைய இயக்குனரகத்தின் தலைவர் மாற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 



  • Oct 21, 2024 07:37 IST
    சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

    விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment