பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 207 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், இன்றும் மாற்றம் இல்லை. அதன்படி 208-வது நாளாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை ரூ92.34-க்கும், கேஸ் விலை ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இ.சி.ஆர் வழியாக மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து சேவை
மயிலாடுதுறையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்வதற்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு காலை 4:15 மணிக்கு சென்னை சென்றடையும். மீண்டும் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இயக்கி மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறுத்தினார்.
-
Oct 12, 2024 05:17 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி: “ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். விபத்தால் பாதிக்கப்பட்ட பாக்மதி ரயில் பயணிகள், சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவரவர் இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட தடத்தில் சுமார் 15 மணிநேரத்தில் ரயில் போக்குவரத்து சரி செய்யப்படும்” என்று கூறினார்.
-
Oct 12, 2024 05:11 ISTரயில் விபத்து: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார் உதயநிதி
கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
-
Oct 11, 2024 23:18 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து: சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!
கவரப்பேட்டை அருகே ஏற்பட்டுள்ள ரயில் விபத்தால் சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில் போக்குவரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி - ஹவுரா, எர்ணாகுளம் - டாடாநகர், காக்கிநாடா - தன்பாத் உள்ளிட்ட விரைவு ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 23:14 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து: சென்னைக்கு அழைத்து வரப்படும் பயணிகள்
ரயில் விபத்து நடந்த கவரப்பேட்டையில் இருந்து பயணிகள் மின்சார ரயிலில் செண்ட்ரலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தர்பங்கா செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. தர்பங்கா செல்லும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
-
Oct 11, 2024 23:04 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து: 19 பேருக்கு காயம் - அமைச்சர் நாசர் தகவல்
அமைச்சர் நாசர்: “கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயில் விபத்தில் 3 பேருக்கு எலும்பு முறிவு 16 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 11, 2024 23:01 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: உயிரிழப்பு இல்லை; 5 பேருக்கு காயம் - தலைமைச் செயலாளர் முருகானந்தம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேட்டி: “கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தற்போது வரை எந்த மரணமும் இல்லை. தற்போது வரை 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 11, 2024 23:00 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: உயிரிழப்பு இல்லை - தலைமைச் செயலாளர் முருகானந்தம்
சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தற்போது வரை எந்த மரணமும் இல்லை என்றும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
-
Oct 11, 2024 22:55 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ஸ்டாலின் உத்தரவு
சென்னை அருகே கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 11, 2024 22:52 ISTகவரப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்பு எதுவுமில்லை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு எதுவுமில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
Oct 11, 2024 22:49 ISTசென்னை அருகே ரயில் விபத்து; காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரம்; சம்பவ இடத்தில் அமைச்சர் நாசர்
சென்னை அருகே கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததைத் தொடர்ந்து, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு அமைச்சர் நாசர் விரைந்து சென்றுள்ளார்.
-
Oct 11, 2024 22:46 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்து தொடர்பாக 044 2535 4151 மற்றும் 044 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 22:43 ISTகவரப்பேட்டை அருகே ரயில் விபத்து: தவறான சிக்னல் காரணமா?
கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகல் விரைவு ரயில் மோதியதில் சுமார் 5 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
பாக்மதி அதிவிரையும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.27 மணி அளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் இயக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 109 கி.மீ வேகத்தில் சென்ற ரயிலை லூப் லைனில் செல்லும்போது ரயில் ஓட்டுநர் 90 கி.மீ வேகத்திற்கு குறைத்துள்ளார். பிரதான லைனில் இருந்து லூப் லைனிற்கு செல்லும்போது நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 5 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மீட்பு பணி விரைந்து நடைபெறுகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்நிலையில், தவறான சிக்னல் காரணமாக இந்த ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Oct 11, 2024 22:30 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்
சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் விபத்து மீட்பு பணிகளுக்காக சென்னை, அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட இரு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைகின்றனர்.
-
Oct 11, 2024 21:25 ISTகவரப்பேட்டை அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து
திருவள்ளூர் மாவட்ட்டம், கவரப்பேட்டை அருகே மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் ஒன்றோடொன்ரு மோதிக் கொண்டதில் பெட்டிகளில் தீப்பிடித்துள்ளது.
-
Oct 11, 2024 21:02 ISTதிருச்சியில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு ஸ்டாலின் பாராட்டு
திருச்சியில் விமானம் தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வட்டமடித்த நிலையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர். திக் திக் திக் நொடிகள் முடிவுக்கு வந்தது. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Oct 11, 2024 20:37 ISTதிருச்சியில் 2 மணி நேரமாக வட்டமடித்த விமானம்... பாதுகாப்பாக தரையிறங்கியது
திருச்சியில் விமானம் தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வட்டமடித்த நிலையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. திக் திக் திக் நொடிகள் முடிவுக்கு வந்ததுஇ.
-
Oct 11, 2024 19:32 ISTதிருச்சியில் விமானத்தை தரையிறக்க முடியாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தவிக்கும் விமானிகள்
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானத்தை தரையிறக்க விமானிகள் முயற்சி செய்து வருகின்றனர். தரையிறக்குவதில் சிக்கல் நீடிப்பதால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக வானில் விமானம் வட்டமிட்டு வருகிறது.
-
Oct 11, 2024 19:28 ISTகாப்பகங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 1,400 மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 19:00 ISTமுரசொலி செல்வத்தின் உடல் தகனம்
மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
-
Oct 11, 2024 18:31 ISTவங்கதேசத்தில் காளி கோயிலுக்கு மோடி பரிசாக அளித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் கிரீடம் திருட்டு
வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் கிரீடம் திருடு போன நிலையில், காவல்துறையினர் சிசிடிவி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Oct 11, 2024 17:43 ISTகாரைக்குடியில் வெளுத்து வாங்கும் மழை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, அரியக்குடி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது
-
Oct 11, 2024 17:09 ISTமுரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடக்கம்
முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து தொடங்கியது
-
Oct 11, 2024 16:44 ISTதிண்டிவனத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் சேதம்
திண்டிவனத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. கருணாகரன் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த வடமாநிலத்தவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 16 பேர் தங்கி இருந்த நிலையில், அனைவரும் ஊருக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது
-
Oct 11, 2024 16:43 ISTமாநில கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னையில் மாநில கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதான, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் கொலை வழக்கில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
-
Oct 11, 2024 16:16 ISTதனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. விடுமுறை நாட்களையொட்டி திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 11, 2024 16:12 ISTதனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் டி.என்.எஸ்.டி.சி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. விடுமுறை நாட்களையொட்டி திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Oct 11, 2024 15:40 ISTகாரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது
பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தியதில் கோயில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமானது.
-
Oct 11, 2024 15:37 ISTஅமைப்புக்கு நோபல் பரிசு: ஜப்பான் அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது ஏன்?
அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், அணு ஆயுதம் இல்லா உலகத்தை உருவாக்கும் முயற்சிகளுக்காக, நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 15:14 IST3 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Oct 11, 2024 15:08 ISTஅமைதிக்கான நோபல் பரிசு - ஜப்பான் நிறுவனத்துக்கு அறிவிப்பு
ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 15:03 ISTநீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது குழந்தை பலி
சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிசாட்டில் தோட்ட வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா – ஜமுனா தம்பதியினர் நேற்று தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
-
Oct 11, 2024 13:57 ISTசெல்வம் உடலுக்கு, விஜய்யின் தந்தை அஞ்சலி
மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இறுதி அஞ்சலி செலுத்தினார். நேற்று விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று தந்தை மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 11, 2024 13:20 ISTமின்வேலியில் சிக்கி 70 வயது முதியவர் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி 70 வயது முதியவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்த சண்முகம் என்ற 70 வயது முதியவர் தனது நிலத்துக்கு சென்றபோது உயிரிழந்துள்ளார். பக்கத்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததால், அதில் சிக்கி உயிரிழந்தார். மின்வேலியில் சிக்கி சண்முகம் உயிரிழந்தது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Oct 11, 2024 13:19 ISTபைக் மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பைக் மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியான நிலையில், மற்றொருவர் சிகிச்சை பலனின்றி மரணம்.
வசந்தகுமார், ராகுல், விஜய் ஆகிய மூன்று பேரின் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நண்பர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
-
Oct 11, 2024 13:16 ISTமுரசொலி செல்வத்தின் உதவியாளரை ஆறுதல்படுத்திய ஸ்டாலின்
தனது கணவர் முரசொலி செல்வத்தின் உதவியாளரைப் பார்த்ததும் கட்டியணைத்து செல்வி அழுதார். 12 வயதில் இருந்து முரசொலி செல்வம் குடும்பத்தோடு பயணித்து வரும் அவரை, அருகில் அமர வைத்து ஆறுதல்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#Watch | தனது கணவர் முரசொலி செல்வத்தின் உதவியாளரைப் பார்த்ததும் கட்டியணைத்து அழுத செல்வி.
— Sun News (@sunnewstamil) October 11, 2024
12 வயதில் இருந்து முரசொலி செல்வம் குடும்பத்தோடு பயணித்து வரும் அவரை, அருகில் அமர வைத்து ஆறுதல்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.#SunNews | #MurasoliSelvam pic.twitter.com/iH3OYcaBNX -
Oct 11, 2024 12:04 ISTவங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருட்டு
வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருட்டு போன நிலையில், கிரீடத்தை ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தூய்மை பணியில் ஈடுபட்ட போது கிரீடம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், கொள்ளையனை தேடும் வங்கதேச காவல்துறை ஈடுபட்டுள்ளது.
-
Oct 11, 2024 12:00 ISTஆளுநர் ஆர்.என்.ரவி ஆயுதபூஜை வாழ்த்து
இந்த ஆயுத பூஜை மிகச்சிறந்த புதுமை மற்றும் மீள்திறன் உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
Oct 11, 2024 11:59 ISTபழனி மலைக்கோவிலில் நாளை நடையடைப்பு
வன்னிகா சூரன் வதத்தை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் நாளை பிற்பகல் 3.15க்கு நடையடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
-
Oct 11, 2024 11:56 ISTமின்வேலியில் சிக்கி முதியவர் மரணம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்த 70 வயது முதியவர் தனது நிலத்துக்கு சென்றபோது பக்கத்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததால், அதில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 11, 2024 11:09 ISTமுரசொலி செல்வம் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி
மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் உடலுக்கு விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
-
Oct 11, 2024 10:11 ISTசிலிண்டர் வெடித்து படுகாயமடைந்த ஆசிரியை மரணம்
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா வீட்டில், கடந்த இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்
-
Oct 11, 2024 10:08 ISTசென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையின் வடபழனி, சேப்பாக்கம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறனது.
-
Oct 11, 2024 10:06 ISTகட்சி அறிவிப்புக்கு கட்டுப்படாத குமரி அ.தி.மு.க.வினர்: தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவு
ஆா.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டதால் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பொறுப்புகளை பறிப்பதாக கடந்த 8ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு கட்டுப்படாமல் குமரி மாவட்ட அதிமுகவினர் தளவாய் சுந்தரத்தின் பெயருக்கு பின்னால் கட்சிப் பொறுப்புகளை அச்சிட்டு ஆயூதபூஜை போஸ்டர் அடித்துள்ளனர்.
-
Oct 11, 2024 09:10 ISTதஞ்சையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் சேவை தொடக்கம்
தஞ்சையில் இருந்து சென்னைக்கு இன்று முதல் திங்கள், வியாழன் ஆகிய 2 நாட்கள் தவிர மற்ற 5 நாட்களுக்கு பகல் நேரத்தில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தஞ்சை மக்களின் நீண்டகால கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
-
Oct 11, 2024 09:07 ISTகனமழை எச்சரிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம்
தமிழ்நாட்டில் வரும் 15-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, அனைத்து ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
-
Oct 11, 2024 09:05 ISTபள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வதந்தி பரப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 11, 2024 08:20 ISTரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது: மகாராஷ்டிரா அரசு தீர்மானம்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ரத்தன் டாடாவுக்கு கடந்த 2008-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Oct 11, 2024 08:17 ISTரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர் பணி நீக்கம்
திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த அரசு பேருந்தை, ஓட்டிய தற்காலிக ஓட்டுனர் பார்த்திபன் என்பவர், ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்திபனை, பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Oct 11, 2024 07:34 ISTதென்கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு: பிரதமர் மோடி பேச்சு
லாவோஸ் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
Oct 11, 2024 07:30 ISTஆயுதபூஜை கொண்டாட்டங்கள்
தமிழ்நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், பொரி, பூக்கள் மற்றும் பழங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.