பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 218 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 219-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ100.75-க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 10வது நாளாக தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து, 16,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க 10வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 22, 2024 22:29 ISTகனமழை: கோவையில் அக்டோபர் 23-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 23) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 22, 2024 21:11 ISTபெங்களூருவில் சரிந்த அடுக்கு மாடிக் கட்டடம்; மீட்பு பணி தீவிரம்
பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழையால், பாபுசா பாள்யா பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாட்டிற்குள் சிக்கிய 17 பேரில், 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“4 மாடி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு, 6 மாடியை அனுமதி இன்றி கட்டியதால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்துள்ளது. தற்போது வரை 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்” என்று பா.ஜ.க எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் தெரிவித்துள்ளார்.
-
Oct 22, 2024 20:48 ISTவங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வேகம் அதிகரிப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இதற்கு முன் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரும் வேகம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 22, 2024 19:20 ISTரஷ்யா - உக்ரைன் பிரச்னை: அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் - மோடி
ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று பிரதமர் மோடி ரஷ்யாவில் உத்தரவாதம் அளித்தார்.
-
Oct 22, 2024 18:52 ISTஏசி கோச்களில் வழங்கப்படும் போர்வைகள் மாதத்துக்கு ஓரிரு முறைதான் துவைக்கப்படுகின்றன - ரயில்வே
ஏசி கோச்களில் வழங்கப்படும் உல்லன் போர்வைகள் மாதத்துக்கு ஓரிரு முறைதான் துவைக்கப்படுகின்றன என ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை அளித்த பதிலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Oct 22, 2024 18:38 ISTசென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் விரைவில் அறிமுகம்
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
-
Oct 22, 2024 18:16 ISTசெழிப்பான பூமி நாமக்கல் மாவட்டம் - மு.க.ஸ்டாலின்
லாரி கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அடித்தளமாக விளங்கும் மாவட்டம், கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி, ஜவ்வு அரிசி ஆலை என பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில்களும், நன்செய், புன்செய் நிலங்களும் நிறைந்த செழிப்பான பூமி நாமக்கல் மாவட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Oct 22, 2024 18:00 ISTஇ.பி.எஸ் பேசியதை மக்கள் காமெடியாக பார்க்கின்றனர் - ஸ்டாலின்
தி.மு.க.,வின் மதிப்பு சரிந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி பேசியதை மக்கள் காமெடியாக பார்க்கின்றனர் என்று நாமக்கல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Oct 22, 2024 17:55 ISTதி.மு.க பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரியாக பணியாற்றும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Oct 22, 2024 17:26 ISTநாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைப்பது மிகவும் பொருத்தமானது - ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் இருந்து 1997ல் நாமக்கல் மாவட்டமாக பிரித்தவர் கருணாநிதி. நாமக்கல் மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைப்பது மிகவும் பொருத்தமானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Oct 22, 2024 17:10 ISTகல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
கோவை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தங்கும் விடுதி உரிமையாளருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்
-
Oct 22, 2024 17:00 ISTபுதிய தூதரகம் திறப்பதால் இரு நாட்டு உறவும் வலுப்பெறும் - மோடி
ரஷ்யாவில் கசான் நகரில் புதிய தூதரகத்தை திறப்பதால், இரு நாட்டு உறவும் வலுப்பெறுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு வருகை தந்துள்ள மோடி, புதினின் நட்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
Oct 22, 2024 16:47 ISTபுதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்
நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 664 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
Oct 22, 2024 16:31 ISTகுண்டர் சட்டம் நடவடிக்கை குறித்து விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 26 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கையை உறுதி செய்வதற்கான விசாரணை நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர்.
-
Oct 22, 2024 16:09 ISTபட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்துள்ளார். இந்நிலையில், விழாவில் கலந்து கொண்ட 434 மாணவ, மாணவிகளுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார்.
-
Oct 22, 2024 15:58 ISTகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி, குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
-
Oct 22, 2024 15:53 ISTசிஆர்பிஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 20-ஆம் தேதி டெல்லி ரோகிணி பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்படத்தக்கது.
-
Oct 22, 2024 15:48 ISTநித்தியானந்தா நீதித் துறைக்கு சவால் விடுகிறார் - நீதிமன்றம்
நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கு சவால் விடுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. நித்தியானந்தாவுக்கு எதிராக பல வழக்குகளில் பிடிவாரண்ட் இருந்தும், அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 15:31 ISTBSNL நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுகம்
BSNL நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினார்.
-
Oct 22, 2024 15:24 ISTகஞ்சா புகைக்க போலீசாரிடம் தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்
கேரள மாநிலம், மூணாறில் கஞ்சா புகைப்பதற்காக காவல் நிலையத்திற்கு வந்து தீப்பெட்டி கேட்ட மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
Oct 22, 2024 15:18 ISTகாமன்வெல்த் தொடரில் இருந்து நீக்கப்பட்ட போட்டிகள்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, மல்யுத்தம், கிரிக்கெட், துப்பாக்கிச் சூடு ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. நிதி பிரச்சனை தொடர்பாக இப்போட்டிகள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 15:13 ISTமதுரை விமான நிலைய இயக்குநருக்கு உத்தரவு
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொதுப்பாதையில் தடுப்புச் சுவர் கட்டியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்க கோரி, விமான நிலைய இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Oct 22, 2024 15:02 ISTரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ்
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
Oct 22, 2024 15:02 ISTத.வெ.க மாநாடு - பணிகள் விறுவிறு
த.வெ.க மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழைந்து விடாமல் தடுக்க 10 அடியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 14:26 ISTபெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம்
பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால் காணும் இடமெல்லாம் வெள்ளமாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், குடியிருப்புகளில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
குடியிருப்பு பார்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. நாளையும் கனமழை தொடரும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 14:25 ISTகனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
Oct 22, 2024 14:16 ISTஸ்டாலின் பொதுமக்களுடன் சந்திப்பு
நாமக்கல் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். காரில் இருந்து இறங்கி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், நாமக்கல்லில் ரூ.810 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
-
Oct 22, 2024 14:16 ISTமாலை 4 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று மாலை 4 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 14:11 ISTசென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Oct 22, 2024 14:06 ISTநாமக்கல்: கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு
நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் இன்று மாலை நடைபெறும் விழாவில் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
Oct 22, 2024 14:05 ISTதெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் குத்திக்கொலை
தெலுங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் இன்று காலை அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Oct 22, 2024 14:05 ISTமேலூரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்
மதுரை: மேலூர் அருகே பணி முடிந்து ஆட்டோவில் பணம் எடுத்துச் சென்ற டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பெருமாள்பட்டி கிராமத்தில் பணி முடிந்து இரவு ஆட்டோவில் சென்றபோது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மர்ம கும்பல் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து கொண்டதோடு, ஆட்டோ ஓட்டுனர் தலையில் வெட்டி விட்டு சென்றுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் ராஜ்குமார், பாண்டியராஜன், ஆட்டோ ஓட்டுனர் திருமலைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்
-
Oct 22, 2024 13:29 ISTதி.மு.க கூட்டணியில் அதிருப்தி - இ.பி.எஸ் பேச்சு
'அ.தி.மு.க ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது, அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை இருக்கலாம், ஆனால் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்" என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Oct 22, 2024 12:17 ISTதொப்புள்கொடி அறுப்பு வீடியோ: மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது: மா.சுப்பிரமணியன்
குழந்தையின் தொப்புள்கொடி அறுப்பு விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது. இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
Oct 22, 2024 11:39 ISTஇது உத்தரவில்லை, வேண்டுகோள்: கழிவுகளை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளை கேட்ட அமைச்சர்!
பல்லாவரம் இஎஸ்ஐ மருந்தகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பைக் கழிவுகளை கண்டு கோபமடைந்த அமைச்சர் மாநகராட்சி அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு குப்பைகளை அகற்ற அறிவுறுத்திய நிலையில், உத்தரவில்லை வேண்டுகோள் என அதிகாரிகளிடம் கூறியுள்ளர்.
-
Oct 22, 2024 11:37 ISTரூ180 கோடி செலவில் இரு சக்கரவாகன தொழிற்சாலை விரிவாக்கம்
ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகாலில் செயல்பட்டு வரும் இரு சக்கர வாகன தொழிற்சாலையை ரூ180 கோடி செலவில் யமஹா நிறுவனம் விரிவாக்கம் செய்ய உள்ளது. ஏற்கனவே 1789 கோடி முதலீட்டில் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 180 கோடி முதலீடு செய்ய உள்ளதால், 431 பேருக்க வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 22, 2024 11:16 ISTநோ என்ட்ரி வழியாக சென்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்: 3 பேர் கைது
மாமல்லபுரத்தில் நோ என்ட்ரி வழியாக சென்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரபுதாஸ், சண்முகபிரியா, கீர்த்தனா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 11:00 ISTஇளைஞர்களுக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்ற புதிய வியாதி: ஜகதீப் தன்கர்
தற்கால இளைஞர்களுக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்ற புதிய வியாதி உள்ளது. ஆனால் எந்த நாட்டுக்க செல்வது எந்த படிப்பை படிப்பது என்று அவர்களுக்க தெளிவு இல்லை என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். ஜகதீப் தன்கரின் மகள் காம்னா, அமெரிக்காவின் ஆர்கேடியா பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு முடித்து கோடைகால படிப்பக்காக, இங்கிலாந்து, அஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளக்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Oct 22, 2024 10:55 ISTகிளாம்பாக்கம் காலநிலை பூங்காவை முதல்வர் விரைவில் திறந்து வைப்பார்: அமைச்சர் சேகர் பாபு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்
-
Oct 22, 2024 10:53 ISTமீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கும் அஜித்
கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்
-
Oct 22, 2024 10:52 ISTஈரோட்டில் கனமழை: தண்ணீரில் மூழ்கிய ரயில் நிலைய சாலை
கனமழை காரணமாக ஈரோடு ரயில் நிலையம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளனர். காளைமாடு சிலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பயர் சர்வீஸ் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Oct 22, 2024 10:50 ISTயூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரத்தில் மருத்துவர் மீது புகார்
யூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரத்தில், தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்?, எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
Oct 22, 2024 10:47 ISTத.வெ.க நிர்வாகி மரணம்: தளபதி விஜய் இரங்கல் பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும்…
— TVK Vijay (@tvkvijayhq) October 22, 2024 -
Oct 22, 2024 10:16 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து: ஆஜராக சம்மன்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர் உட்பட 4 பேர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது. கவரப்பேட்டை ஸ்டேசன் சூப்பிரன்ட், ஸ்டேசன் மாஸ்டர் முனி பிரசாத், கேட் கீப்பர், பிளாட்பாரத்தில் கொடி அசைப்பவர் என 4 பேருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 10:14 ISTவாகன நிறுத்துமிட பணியாளரை தாக்கிய விவகாரம்: போலீசார் வழக்குப்பதிவு
மாமல்லபுரத்தில் நோ என்ட்ரியில் சென்ற காரை தடுத்த வாகன நிறுத்துமிட பணியாளரை தாக்கிய விவகாரத்தில், 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Oct 22, 2024 10:13 ISTஇர்ஃபான் மீது போலீசில் புகார்
அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூ டியூபர் இர்ஃபான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை மீதும், இர்ஃபான் மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
Oct 22, 2024 09:09 ISTதமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை: 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4நாட்கள் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 22, 2024 09:07 ISTகாற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக கரையை கடக்கும்
-
Oct 22, 2024 08:26 ISTதமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சை ஆகிய 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
Oct 22, 2024 07:51 ISTவயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும், பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியில் வரும் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.