Tamil News Highlights : அண்ணாமலை காலத்தில் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது - நயினார் நாகேந்திரன்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK cadres police complaint against Nainar Nagenthran, BJP MLA Nainar Nagenthran, Nainar Nagenthran wrong speech, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி அதிமுக நிர்வாகிகள் புகார், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அதிமுக, பாஜக, BJP, AIADMK, Tamilnadu, tamilnadu politics

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

Advertisment

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல், தமிழக பா.ஜ.க தலைவர் தேர்வு குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

  • Apr 11, 2025 20:46 IST

    அண்ணாமலை காலத்தில் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது - நயினார் நாகேந்திரன்

    அண்ணாமலை காலத்தில் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது என பா.ஜ.க மாநில தலைவராக தேர்வான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்



  • Apr 11, 2025 20:29 IST

    பல்கலைக்கழக மானிய குழு தலைவர் வினித் ஜோஷி

    மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் வினித் ஜோஷி, கூடுதலாக பல்கலைக்கழக மானிய குழு தலைவர் பதவியை கவனிப்பார் என யூ.ஜி.சி தெரிவித்துள்ளது



  • Advertisment
    Advertisements
  • Apr 11, 2025 19:20 IST

    திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க ஐகோர்ட் உத்தரவு

    திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோரிக்கையை ஏற்று மே மாதம் இடிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது



  • Apr 11, 2025 19:18 IST

    திபெத்தில் லேசான நிலநடுக்கம்

    திபெத்தில் மாலை 3.27 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகியுள்ளது



  • Apr 11, 2025 19:18 IST

    ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு

    பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசினார்



  • Apr 11, 2025 18:43 IST

    கே.என்.நேருவின் சகோதரர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் உள்ளது - அமலாக்கத்துறை

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற டிஜிட்டல் ஆவணங்களும் சோதனையில் சிக்கி உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது



  • Apr 11, 2025 18:14 IST

    திருச்சியில் இஸ்லாமியர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    ஒன்றிய அரசின் புதிய வக்ஃபு சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து  தென்னூர் ஹை ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசலின் தூணிலும் கருப்பு கொடியை பறக்க விட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. 



  • Apr 11, 2025 17:01 IST

    மதுரை சித்திரைத் திருவிழா; வைகை அணையில் இருந்து வரும் மே 8-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

    மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண 13,600 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், கடந்தாண்டு மாநகராட்சியின் மின்சாரத்தை பயன்படுத்தியதற்கு ரூ.1 கோடி கட்டணத்தை கோயில் நிர்வாகம் அளிக்காததால், இந்தாண்டு மின்வாரியம் மூலம் வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ள மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்



  • Apr 11, 2025 16:45 IST

    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி உடன் ஆலோசனை 

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி உடன் ஆலோசனை நடத்திவருகிறார்.



  • Apr 11, 2025 16:44 IST

    ‘பா.ம.க ஒரு குடும்பம் மாதிரி.. ராமதாஸ், அன்புமணி இடையே  சின்ன சலசலப்புதான்’ -  ஜி.கே. மணி பேட்டி

    பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே. மணி திண்டிவனம் தைலாபுரத்தில் பேட்டி: “டாக்டர் ராமதாஸை சந்தித்து நேற்று செய்த அறிவிப்பு குறித்து பேசினேன். நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டார். அதை வெளியே சொல்ல முடியாது. இது உட்கட்சி பிரச்னை. ஒவ்வொரு கட்சியிலும் இதுபோல நிலை வரும். ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். தேர்தலில் வெற்றி பெறுவோம். பா.ம.க ஒரு குடும்பம் மாதிரி.. ராமதாஸ், அன்புமணி இடையே  சின்ன சலசலப்புதான். மிக விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.



  • Apr 11, 2025 16:34 IST

    அமைச்சர் கேன்.என். நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

    அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Apr 11, 2025 16:29 IST

    பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடைபெறுகிறார் அண்ணாமலை

    தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விடைபெறுகிறார். 2021 ஜூலை 8-ம் தேதி பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். அண்ணாமலை தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட தமிழ்நாடு பா.ஜ.க வாக்கு சதவீதம் அதிகரித்தாலும், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.



  • Apr 11, 2025 16:17 IST

    பா.ஜ.க மாநில தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்

    பா.ஜ.க-வின் மாநில தலைவர் பதவிக்கு ஒரு மனதாக தேர்வாகிறார் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்; புதிய மாநில தலைவர் குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நயினார் நாகேந்திரன் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க-வில் பயணித்து வருகிறார். தற்போது, பா.ஜ.கவின் சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார்.



  • Apr 11, 2025 15:57 IST

    பங்குனி உத்திர திருவிழா - தமிழகம் முழுக்க பக்தி பரவசம்

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, 63 நாயன்மார்களின் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் மற்றும் தெப்பக்குளம் சாலை வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



  • Apr 11, 2025 15:54 IST

    "அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்"

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரிகமானது, அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 



  • Apr 11, 2025 14:33 IST

    போட்டியின்றி தேர்வாகிறாரா நயினார்?

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு துவங்கிய நிலையில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 11, 2025 14:16 IST

    முதல்வருடன் திருச்சி சிவா சந்திப்பு

    திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்த திருச்சி சிவா கட்சிக்காக தொடந்து உழைப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். 



  • Apr 11, 2025 14:07 IST

    ஞானசேகரனின் தம்பி கைது

    நகைக்கடைகளில் போலி நகையை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  



  • Apr 11, 2025 14:03 IST

    பதவி பறிப்பு - விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட அமைச்சர் பொன்முடி

    பெண்கள்  குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக தி.மு.க துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம்  தெரிவிக்கப்பட்டது .  சர்ச்சைகுரிய பேச்சு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது. 



  • Apr 11, 2025 14:01 IST

    ஆளுநர் ரவிக்கு எதிராக போஸ்டர் 

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை முழுவதும் ’Get out RN Ravi’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.



  • Apr 11, 2025 13:44 IST

    மதுரை சித்திரை திருவிழா -  மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

    மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.



  • Apr 11, 2025 13:34 IST

    மீன் இனப்பெருக்க காலம் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை 

     

    குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Apr 11, 2025 13:11 IST

    ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - நெல்லை முபாரக் பதில் 

    எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நெல்லை முபாரக், எஸ்டிபிஐ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம்; திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக நெல்லை முபாரக் நன்றி, எஸ்டிபிஐ நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டனர்.



  • Apr 11, 2025 13:04 IST

    குட் பேட் அக்லி வசூல் 

    அஜித்குமார் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் 28 கோடியே 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 11, 2025 12:46 IST

    டி.டி.வி தினகரனுக்கு வழக்கமான உடல் பரிசோதனை

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள
    தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 11, 2025 12:27 IST

    அண்ணாமலையை மாற்ற இ.பி.எஸ் சொல்லவில்லை: செல்லூர் ராஜு பேட்டி

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றுமாறு எடப்பாடி சொல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி கட்டாயப்படுத்தின்பேரில் சந்திக்கவில்லை என செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டியில் கூறினார்.



  • Apr 11, 2025 11:33 IST

    தி.மு.க துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்

    தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். முன்னதாக, அப்பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டார்.



  • Apr 11, 2025 11:02 IST

    தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்

    தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக, கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Apr 11, 2025 10:11 IST

    அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி கண்டனம்

    அமைச்சர் பொன்முடிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 11, 2025 09:39 IST

    தங்கம் விலை புதிய உச்சம் - இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,485 உயர்வு

    இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,485 உயர்ந்த் ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.



  • Apr 11, 2025 09:38 IST

    128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

    128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பிடித்துள்ளது. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில் 5 புதிய விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Apr 11, 2025 09:36 IST

    திருப்பதியில் தங்கத்தேரோட்டம்

    வருடாந்திர வசந்தோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேரோட்டம் தொடங்கியது. 2 ஆம் நாளான இன்று தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தங்கத்தேரோட்டத்தையொட்டி 4 மாட வீதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



  • Apr 11, 2025 09:31 IST

    விஜய் தலைமையில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: