Chennai News Highlights: அ.தி.மு.கவை கூறுபோட்டு விற்ற பா.ஜ.க - உதயநிதி விமர்சனம்

Tamil Nadu Latest News Update: தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udhayanidhi

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 06, 2025 21:42 IST

    தினகரனுடன் சமரசம் பேசத் தயார் -நயினார் நாகேந்திரன்

    டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன் என்று மதுரையில் பேட்டியளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



  • Sep 06, 2025 20:49 IST

    செங்கோட்டையனின் ஆதரவாளர் சித்துராஜ் பதவி நீக்கம்

    செங்கோட்டையனின் ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Advertisment
  • Sep 06, 2025 20:39 IST

    பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை

    பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொலைபேசி மூலம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.



  • Sep 06, 2025 20:26 IST

    செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா

    கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள்என சுமார் 300 பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 06, 2025 19:54 IST

    அரசியல் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை - அண்ணாமலை

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள் எனக்கும் திருப்தியாக இல்லை என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். எடப்பாடி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் சற்று பொறுமை காக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருமித்த கருத்தோடு 2026 தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்றார்.



  • Sep 06, 2025 19:35 IST

    "விஜய் சுற்றுப்பயணத்தை காவல்துறை மூலம் தடுக்க முயற்சி"

    ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள். அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.



  • Sep 06, 2025 19:30 IST

    விநாயகர் பூஜையில் வைத்த லட்டு ரூ.2.32 கோடிக்கு விற்பனை

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் பூஜையில் வைத்த லட்டு ரூ.2.32 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. கடந்தாண்டு ரூ.1.87 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்தாண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்டவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஏலத்தில் பங்கேற்றதில், பால கணேஷ் அணியினர் வென்றனர்.



  • Sep 06, 2025 19:22 IST

    குஜராத்தில் ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

    குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள பவகவ் மலையில், ரோப் கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மலை உச்சியில் உள்ள மகாகாளிகா கோவிலுக்கு சரக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற ரோப் காரில், திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்த நிலையில், போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 06, 2025 18:55 IST

    சென்னை: செப்.9 முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒருபகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) 9.9.2025 முதல் 19.10.2025 வரை காலை 5 மணி முதல் 6:30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.



  • Sep 06, 2025 18:32 IST

    செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்.க்கு கடிதம்

    செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சி பதவியில் இருந்து நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியாமா, ஐடி பிரிவுச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதி உள்ளனர்.



  • Sep 06, 2025 18:14 IST

    ரூ. 12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இடத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான 32,000 லிட்டர் 'எம்டி' ரக போதை திரவம் பறிமுதல் செய்யப்பட்டது. தானேவில் கைதான ஒருவர் கொடுத்த ரகசிய தகவலால் செர்ல்லப்பள்ளியில் உள்ள ஆலையில் மகாராஷ்டிரா காவல்துறை சோதனை செய்தது. நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்திய ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • Sep 06, 2025 18:04 IST

    எடப்பாடி செயல் சிறுபிள்ளைத்தனமானது - சசிகலா

    செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல்: கட்சி நலனுக்கு உகந்தது இல்லை. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை எண்ணி பார்க்க வேண்டும். இணைய வேண்டும் என கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் கூறப்போகிறோம்? அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம். யாராக இருந்தாலும் தாங்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. தி.மு.க.வை வலுவிழக்க செய்வதே இன்றைய இலக்காக இருக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Sep 06, 2025 18:04 IST

    செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் - ஓபிஎஸ்

    செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை; மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 

    ஓபிஎஸ் பேட்டி    



  • Sep 06, 2025 18:02 IST

    ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

    ஏர்போர்ட் மூர்த்தி மீது டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து விசிகவினர் தாக்குதல் நடத்தியதை அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    அவர் தனது அறிக்கையில், "எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவார்கள். திமுகவின் கூட்டணி கட்சி என்றால், அவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட காவல்துறை அனுமதிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 06, 2025 17:55 IST

    ஏர்போர்ட் மூர்த்தி புகார்

    விசிக தலைவர் திருமாவளவனின் தூண்டுதலின் பேரில், விசிகவினர் தன்னைத் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி சென்னை, டிஜிபி அலுவலகம் அருகில் உள்ள மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 06, 2025 17:12 IST

    மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு...

    தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக செப். 09 முதல் செப். 19 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் இருக்கும். அந்த நாட்களில் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

    காலை 06:30 மணிக்கு பிறகு, வழக்கம்போல் எந்தவித மாற்றமுமின்றி ரயில்கள் இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அறிவித்துள்ளது.

     



  • Sep 06, 2025 17:10 IST

    கடந்த காலமெல்லாம் கடலில் மூழ்கிவிட்டது- பொன்னையன்

    செங்கோட்டையன் பற்றியோ, கூட்டணி குறித்தோ எடப்பாடி பழனிசாமிதான் பேசுவார். கடந்த காலமெல்லாம் கடலில் மூழ்கிவிட்டது; தொண்டர்கள் பழனிசாமி பக்கம் உள்ளனர்; கட்சிக்கென கொள்கை உண்டு, அது கடுமையாகப் பின்பற்றப்படும், அதுவே பழனிசாமியின் முடிவு

    முன்னாள் அமைச்சர் பொன்னையன்



  • Sep 06, 2025 16:31 IST

    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள்: அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் தூத்துக்குடி



  • Sep 06, 2025 15:52 IST

    செங்கோட்டையனுக்கு ஓ.பி.எஸ். ஆதரவு

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார்.



  • Sep 06, 2025 15:50 IST

    கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 11 புறநகர் ரயில்கள் ரத்து

    தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையின்படி, பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை (செப்டம்பர் 7, 2025) கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், சென்னை – கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 06, 2025 15:48 IST

    ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்

    ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • Sep 06, 2025 15:40 IST

    விஜய் பிரச்சாரம்

    2026 தேர்தல் பிரச்சாரங்களில் இப்போதே பல கட்சிகளும் மும்முரம் காட்டத் தொடங்கிவிட்டன. விஜய்யும் பிரச்சார பயணத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 13.09.2025 அன்று திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் விஜய் அரியலூர், குன்னம், பெரம்பலூர் என பல்வேறு பகுதிகளில் உரையாற்றுகிறார்.



  • Sep 06, 2025 14:49 IST

    ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் - தமிழிசை கண்டனம்

    ஏர்போர்ட் மூர்த்தி மீதான தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்; காவல் துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கொஞ்சம்கூட கவலை இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



  • Sep 06, 2025 14:20 IST

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கவேண்டும் :நயினார் நாகேந்திரன்

    டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "அதிமுக ஒன்றுபடுவதே பாஜகவின் விருப்பம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கவேண்டும். டிடிவி தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேவையில்லாமல் வம்புக்கிழுக்கிறார் தினகரன்,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.



  • Sep 06, 2025 14:14 IST

    தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் செப். 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Sep 06, 2025 14:12 IST

    முன்னாள் எம்பி சத்யபாமா பதவி தப்பியது

    செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் அருகில் அமர்ந்திருந்த அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா பதவி தப்பியது. இன்று மீண்டும் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்த சத்தியபாமா



  • Sep 06, 2025 14:00 IST

    பேருந்தில் தங்க நகைகளை திருடிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

    சென்னை நெற்குன்றம் பகுதியில் பேருந்தில் தங்க நகைகளை திருடிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை போலீசார் கைது செய்தனர். பேருந்தில் பயணி ஒருவர் பையில் வைத்திருந்த நகையை திருடிய புகாரில் பாரதி கைது.



  • Sep 06, 2025 13:37 IST

    ஒருங்கிணைப்பு பணி தொடரும் - செங்கோட்டையன்

    என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும்; எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும் காலில் விழுகிறோம், கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பவர்களையே புறக்கணித்துள்ளனர் என்று அதிமுகவில் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 



  • Sep 06, 2025 13:33 IST

    விளக்கம் கேட்டிருக்க வேண்டும் - செங்கோட்டையன்

    ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிமுகவில் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 



  • Sep 06, 2025 13:21 IST

    அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை காண நேர்ந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லண்டனில் அம்பேத்கர் படித்தபோது அவர் வசித்த இல்லத்தை பார்வையிட்டேன். அம்பேத்கர், பெரியார் உரையாடும் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை காண நேர்ந்தது. இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட இளைஞர், அறிவின் மூலம் உயர்ந்து லண்டனில் மரியாதை பெற்றார். அம்பேத்கர் இல்லத்தில் வியப்பும், மரியாதையும் கலந்த உணர்வு ஏற்பட்டது,"இவ்வாறு தெரிவித்தார்.



  • Sep 06, 2025 12:49 IST

    தர்மம் வெல்ல வேண்டும்; கட்சிப்பதவியை பறித்ததற்கு மகிழ்ச்சி -  செங்கோட்டையன் பேட்டி 

    தர்மம் வெல்ல வேண்டும்; கட்சிப்பதவியை பறித்ததற்கு என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியூஸ் 18-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 



  • Sep 06, 2025 12:26 IST

    தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 06, 2025 12:26 IST

    அ.தி.மு.க பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் - இ.பி.எஸ்

    அ.திமு.க.வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் கெடு விதித்த விவகாரத்தில், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 



  • Sep 06, 2025 11:30 IST

    திருப்பதி மாவட்டத்தில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி 30 பயணிகள் காயம்

    திருப்பதி மாவட்டத்தில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கிரானைட் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 



  • Sep 06, 2025 11:24 IST

    பாடகர் எஸ்.பி.சரணுக்கு மிரட்டல் - காவல்நிலையத்தில் புகார்

    வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குனர் மீது பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள குடியிருப்பை உதவி இயக்குநர் திருஞானம் என்பவரிடம் வாடகைக்கு விட்டதாகவும், ஆனால் 23 மாதங்களுக்கான வாடகை தராமல் திருஞானம் மிரட்டுவதாக எஸ்.பி.சரண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 



  • Sep 06, 2025 10:51 IST

    சிறந்த பிரதமர் - ட்ரம்பின் கருத்துக்கு மோடி வரவேற்பு

    இந்திய, அமெரிக்க உறவு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். "டிரம்பின் உணர்வுகளையும், மதிப்பீட்டையும் ஆழமாக பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான கூட்டாண்மையை கொண்டுள்ளன. இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவை கொண்டுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

     



  • Sep 06, 2025 10:08 IST

    ஜி.எஸ்.டி வரிகுறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு - மத்திய அரசு கணிப்பு

    ஜி.எஸ்.டி. வரிகுறைப்பால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. வரிகுறைப்பால், வருடாந்திர அடிப்படையில் நிகர நிதி தாக்கம் ரூ.48 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு கணிந்துள்ளது. 



  • Sep 06, 2025 10:04 IST

    புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை 

    ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தைக் கடந்து நகைப்பு பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது. கிராம் தங்கம் ரூ.120 உயர்ந்து, பத்தாயிரம் ரூபாயைக் கடந்து இன்று ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.138க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     



  • Sep 06, 2025 08:51 IST

    7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப் பேச்சு

    நான் 7 மாதங்களில் செய்ததை யாரும் செய்யவில்லை. 7 மாத‌த்தில் 7 போர்களை
    நிறுத்தியுள்ளேன். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது, நான் நினைத்த‌தை விட மிகவும் கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



  • Sep 06, 2025 08:50 IST

    சிறையில் வார்டனை தாக்கி தப்பிய கைதிகள்

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள சோடவரம் கிளை சிறையில், வார்டன்களை தாக்கிவிட்டு 2 கைதிகள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Sep 06, 2025 08:49 IST

    ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி: டிரம்ப் வரிவிதிப்பு காரணம் என தகவல்

    அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். டிரம்ப் வரிவிதிப்பு காரணமாக பிரதமர் மோடி  அமெரிக்கா செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 06, 2025 07:53 IST

    சில நேரங்களில் மோடியின் செயல் பிடிக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

    மோடி உடன் எப்போதும் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அதே சமயம், சில நேரங்களில் மோடியின் செயல் பிடிக்கவில்லை. இந்தியாவுடன் சிறப்பு உறவை கொண்டுள்ளதால் கவலைப்பட தேவையில்லை. ரஷ்யாவிலிருந்து இந்தியா இவ்வளவு கச்சா எண்ணெய்  வாங்குவது அதிருப்தி அளிக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியள்ளார்.



  • Sep 06, 2025 07:51 IST

    தமிழ்நாடு காவலர் தினம்: காவல் நிலையத்தில் காவலர்கள் உறுதிமொழி

    தமிழ்நாடு காவலர் தினத்தை ஒட்டி, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான செப். 6, காவலர் நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.  அதன்படி காவலர் பதக்கங்கள் வழங்குவது, கண்காட்சிகள், ரத்ததான முகாம்கள் நடத்தப்படும். 



  • Sep 06, 2025 07:47 IST

    மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி, பிரிட்டன் பயணங்களின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது, 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



Live Updates Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: