Tamil Breaking News: இன்று முதல் ஜூன் 30ம் தேடி வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்தது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே உரிய பாதுகாப்போடு வெளியே செல்ல வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாது. கம்பம் - பழனி கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் தற்போது இயங்கும் பேருந்தில் 50% மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு விநியோகிப்பதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியத்தில் இருந்து ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்தியாவில், கொரோனா நோய் தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றைய தேதியில் குணம் அடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகளின் விகிதம் 56.38 சதவீதமாக உள்ளது. இதுவரை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,189 ஆக அதிகரித்து. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 10,994 கோவிட்-19 குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,78,014 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Updates: இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல, 2019-20 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நவ.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முறைகேடாக இ-பாஸ் வழங்கிய அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் போலி ஆவணங்கள், ரூ.2,000 பெற்றுக்கொண்டு முறைகேடாக இ-பாஸ் கொடுத்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முறைகேடாக இ-பாஸ் வழங்கிய அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் போலி ஆவணங்கள், ரூ.2,000 பெற்றுக்கொண்டு முறைகேடாக இ-பாஸ் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மதுரை ரயில்வே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து மருத்துவமனையில் பல படுக்கைகள் கொண்ட சிறு சிறு அறைகளாக மாற்றம் செயப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது ஸ்டாலின் பழி போடுகிறார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765+18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது. வீடுகள் தோறும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என கண்டறியும் திட்டம் உலகிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67,468ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளியில் வந்தால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் பழனிசாம் அறிவித்துள்ளார். மேலும், மாவட்டங்களுக்குள் நாளை முதல் 30 ஆம் தேதி வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்ற காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று யுஜிசியின் நிபுணர்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை அக்டோபர் மாதத்திற்கு முன்பாக தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இரண்டு எஸ்.ஐ.க்கள், 2 தலைமை காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் uறுதி செய்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று, முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் அந்தந்த மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான் குளத்தில் வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பை கண்டித்து சென்னையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பெரம்பூர், சூளை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடைக்கப்பட்டு உள்ளது. இதில் மளிகை, காய்கறி, பேப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடங்கும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு கொடுத்த ஆர்டர் பேரில் தென்கொரியாவில் இருந்து கூடுதலாக 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.. ஆர்டர் செய்த 15 லட்சம் பி.சி.ஆர். கருவிகளில் 1.5 லட்சம் கருவிகள் தற்போது வந்துள்ளன . தமிழகத்தில் தற்போது 6. 77 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளன என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவிதுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் மரண விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று கனிமொழி கேள்வி எழுப்பினார். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் போலி இ பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ- பாஸ் தயாரிப்புக்கு ரூ. 5,000 வரை பணம் கைமாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
பொதுத்துறை, தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கொரோனா தொற்று பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். கொரோனா தொற்று பரிசோதனைக்காக நாடு முழுவதும் ஆயிரம் ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் போலீசார் தாக்கியதில் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காணொலி மூலம் மதியம் 12.30 மணிக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
பதஞ்சலி நிறுவனத்தின் கோவிட்-19 மருந்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அதனை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆயூஷ்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறினார்.
முன்னதாக, அரசிதழ் அறிவிக்கை எண் No. L.11011/8/2020/AS உத்தரவின் கீழ் கோவிட் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படும் மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு/ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்/மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு, இன்ஸ்டிடியூஷனல் எதிக்ஸ் கமிட்டி ஒப்புதல்; CTRI பதிவு, ஆராய்ச்சி/ஆராய்ச்சிகளின் புள்ளிவிவர முடிவுகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும் என்று
ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது
தீவிர ஊரடங்கு செயல்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டுமே தவிர நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடாது என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மதுரை,தேனி மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அவர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மதுரை , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வரும் ஜூன் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- காய்கறி கடை, மளிகை கடை பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும்.
- கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்துக்கு செல்ல தேவையில்லை.
- ஜூன் 29, 30ம் தேதிகளில் வங்கிகள் 33% ஊழியர்களுடன் செயல்படும். ஏடிஎம் சேவைகள் இயல்பாக செயல்பட அனுமதி.
- மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.
- சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்துறை, கருவூலத்துறை, ஆவின், குடிநீர் ஆகியவை முழு அளவில் செயல்பட அனுமதி.
- மருத்துவமனை தொடர்பான பணிகள், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு அனுமதி.
- ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி இல்லை.
- விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பும் ப்ரீபெய்டு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
இன்று முதல் 30 வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சி, பரவை நகராட்சி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்தால் இந்த நடவடிக்கை.
மதுரை ஊரடங்கு:
- அம்மா உணவங்கள் தொடர்ந்து செயல்படும்.
- அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி.
- வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்தால், கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
- ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலை செய்யலாம்.
- டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.
-
ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கடைகள் இயங்காது.
ரஷ்யாவுடனான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று ரஷ்ய துணைப்பிரதமரை சந்தித்த பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப்போர் வெற்றிதின பேரணியில் இன்று பங்கேற்கிறார் .
தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1227பேர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35, 339 ஆக உயர்ந்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights