Advertisment

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3708 கொரோனா தொற்று கண்ட குணம் அடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 95,526 நோயாளிகள் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. உலகிலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள  நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மத்திய அரசு தெரிவித்தது.

 

இந்தியாவில் ஏற்படுகின்ற 73 சதவிகித கொரோனா இறப்புகள் ஏற்கனவே நோய் உள்ள நபர்களுக்குத் தான் (நீரிழிவு, உயர்இரத்த அழுத்தம், இருதய நாளக் கோளாறு மற்றும் சுவாச மண்டல நோய்கள்) ஏற்படுகிறது. எனவே இத்தகைய ஆபத்துக்காரணி அதிகமாக உள்ள குழுவினர் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட வேண்டும். அவசரத் தேவையைத் தவிர இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) இன்று பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Live Updates: இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:37 (IST)03 Jun 2020

    திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

    சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    22:28 (IST)03 Jun 2020

    தப்பியது மும்பை

    நிசார்கா புயலால், மும்பையில் கடுமையான பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் மும்பை தப்பியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மின்கம்பங்கள் சிலவும் புயலால் பாதிக்கப்பட்டன.

    21:23 (IST)03 Jun 2020

    ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

    ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்கு ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மார்ச் 21 முதல் மே 31ம் தேதி வரையிலான டிக்கெட் ரத்துக்கான கட்டணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    21:18 (IST)03 Jun 2020

    டெல்லி காலணி தொழிற்சாலையில் தீவிபத்து

    டெல்லியில் ரஜோரி கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் காலணி தொழிற்சாலையில் இன்று மாலை 6.50 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 26 தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    20:48 (IST)03 Jun 2020

    மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

    மார்ச் 25ம் முதல் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜூலை 6ம் தேதி வரை தமிழக மின்வாரியம் அவகாசம் அளித்துள்ளது. மற்ற பகுதிகளுக்கு இம்மாதம் 15ம் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது.

    19:56 (IST)03 Jun 2020

    நாசிக்கை நோக்கி நகர்கிறது நிசார்கா புயல்

    மகாராஷ்டிராவின் அலிபாக் இடையே கரையை கடந்த நிசார்கா புயல், வலுவிழந்து தற்போது நாசிக்கை நோக்கி நகரத்துவங்கியுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    19:43 (IST)03 Jun 2020

    நடிகர் பிரசன்னாவிற்கு தமிழக மின்வாரியம் கண்டிப்பு

    கொரோனா ஊரடங்கால், தமிழக மின்வாரியம் மின்உபேயாக கணக்கெடுத்தலில் குளறுபடி நடைபெறுவதாக நடிகர் பிரசன்னா குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் பிரசன்னாவிற்கு தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மின் வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின்கட்டண வசூல் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்ற தகவல் தவறு என்றும், பிரசன்னா, மின்வாரியத்தை கடும்சொற்களால் குற்றம்சாட்டியது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:16 (IST)03 Jun 2020

    சிறப்பு விமானங்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

    வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.  வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் இந்தியா வருவதற்கு விசாவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு விமானங்கள் மூலம் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்தியா வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:58 (IST)03 Jun 2020

    கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

    கர்நாடகாவில் 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஜூலை 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    18:39 (IST)03 Jun 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது

    தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. 

    சென்னையில் மட்டும் 1012 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

    11 பேர் புதிதாக மரணமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

    18:28 (IST)03 Jun 2020

    தனியார் ஆய்வக கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்

    சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் முழு விவரங்களையும் பெற வேண்டும் எனத் தனியார் ஆய்வகங்களுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கி, ஆணை பிறப்பித்துள்ளது

    17:38 (IST)03 Jun 2020

    வேதித்தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி

    குஜராத் மாநிலம் தாஹேஜ் பகுதியில் உள்ள வேதித்தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார், மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    publive-image

    17:32 (IST)03 Jun 2020

    தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜூலை 31ந் தேதி ஓய்வு பெறும் நிலையில், அக்டோபர் 31ந் தேதி வரை பதவிக்காலம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    publive-image

    17:03 (IST)03 Jun 2020

    திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1056 ஆக உயர்ந்துள்ளது.

    16:37 (IST)03 Jun 2020

    தலைமைச்செயலாளர் ஆலோசனை

    ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக, தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலாளர் சண்முகம், மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்திவருகிறார்.

    16:33 (IST)03 Jun 2020

    மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்!

    10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை (ஜூன்4 ) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

    16:28 (IST)03 Jun 2020

    உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!

    மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்  என்று அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது. 

    16:05 (IST)03 Jun 2020

    மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!

    ஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    16:02 (IST)03 Jun 2020

    மாணவர்களுக்கு முகக்கவசம்!

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    15:07 (IST)03 Jun 2020

    மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள்!

    மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்கவும் அரசு தரப்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்த பின்பு மாணவர்களுக்கு கட்டாயம் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை நடத்த முன்பே தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14:24 (IST)03 Jun 2020

    மழைக்கு வாய்ப்பு!

    வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஎன வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும்  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    14:23 (IST)03 Jun 2020

    புலம் பெயர் தொழிலாளர்கள்!

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிற்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதியை தமிழக அரசு கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:53 (IST)03 Jun 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிற்பித்துள்ளது. தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும்  என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:32 (IST)03 Jun 2020

    திமுக பொருளாளர் துரைமுருகன்!

    திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என திமுக லைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  துரைமுருகனின் ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின்,   கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியவில்லை என்றார். இதனால் தற்போதைய நிலைப்படி பொருளாளர் பதவியில் துரைமுருகனே நீடிப்பார் என்று அறிவித்தார். 

    12:59 (IST)03 Jun 2020

    பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    வரும் 8-ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுமேலும் ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இந்த அறிவிப்பு அடுத்தக்கட்ட முடிவு குறித்து யோசிக்க வைத்துள்ளது. . 

    12:04 (IST)03 Jun 2020

    இந்தியாவில் 101497 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் - சுகாதார அமைச்சகம்

    நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207615 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனாவில் இருந்து 100303 பேர் குணம் அடைந்துள்ளனர்,101497 பேர் தற்போது சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது 

    11:59 (IST)03 Jun 2020

    ஊரடங்கை மீறியதாக ரூ. 9.76 கோடி அபராதம் வசூல் - தமிழக காவல்துறை

    தமிழகத்தில் இதுவரையில் ஊரடங்கை மீறியதாக 5.73 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4.43 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 9.76 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    11:40 (IST)03 Jun 2020

    சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 51.7 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்

    02.06.2020 நிலவரப்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51.7% (8,506) சதவீதம் பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.8 சதவீதமாக உள்ளது.

    11:31 (IST)03 Jun 2020

    சமூக நீதியை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர் - கமல்ஹாசன்

    பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.

    11:25 (IST)03 Jun 2020

    53,248 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

    ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பிரதமர் அறிவித்த நிதி தொகுப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 53,248 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 42 கோடி பேர் இதன்மூலம் பயனடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    11:24 (IST)03 Jun 2020

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 1,360 ஆக அதிகரிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று 87  பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 1,395 ஆக அதிகரித்துள்ளது.  

    11:23 (IST)03 Jun 2020

    மாணவர் விடுதிக்கான கட்டுமான பணிகளை பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    தேனி அரசு கலைக்கல்லூரி வளாகம் அருகே 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவர் விடுதிக்கான கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

    10:32 (IST)03 Jun 2020

    இன்று மாலை கரையை கடக்கும் நிசர்கா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

    கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) இன்று பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    10:28 (IST)03 Jun 2020

    அம்மா இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தையை ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் தத்தெடுத்தது.

    பீகார் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த பெண் இறந்த நிலையில், அவருடைய குழந்தை அம்மா இறந்ததை அறியாமல் அவரை எழுப்ப முயன்ற மனதை உலுக்கும் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வந்தது.

    மேலும், விவரங்களுக்கு:தாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்

    இந்நிலையில், இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் அந்த குழந்தையை தத்து எடுத்துள்ளது. இந்த செய்தியை, நடிகர் ஷாருக்கான் உணர்ச்சி பொங்க தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.    

    10:16 (IST)03 Jun 2020

    வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தயிருக்க வேண்டும்

    வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமானப் பயணிகள் அனைவரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    10:14 (IST)03 Jun 2020

    கலைஞர் நினைவிடத்தில் மணமக்களுக்கு ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்

    தலைவர் கருணாநிதியின் 97- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடைத்தில் மு.க ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தினர். மேலும், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மணமக்களுக்கு ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.

    10:09 (IST)03 Jun 2020

    சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொய்வின்றி நடந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொய்வின்றி நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார். அதிக மக்கள் தொகை உள்ளதால் நோய் தொற்றை கட்டுப்படுததுவதில் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    09:34 (IST)03 Jun 2020

    2.19 கோடிக்கு மேற்பட்ட குடும்பதாரர்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பயன்

    பொது முடக்கநிலை காரணமாக எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். அதன் விளைவாக. கடந்த மே மாதத்தில், 2.19 கோடிக்கு மேற்பட்ட குடும்பதாரர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தின் அதிபட்ச (கடந்த ஆண்டு மே மாதம் - 2.12 கோடி) உயர்வு என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

    09:22 (IST)03 Jun 2020

    95,526 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர் – மத்திய அரசு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3708 கொரோனா தொற்று கண்ட குணம் அடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 95,526 நோயாளிகள் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. உலகிலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள  நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மத்திய அரசு தெரிவித்தது

    Tamil News Today Live Updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயரத்தைத் தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 1,091பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களில், 1378 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 20,857 பேர், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 2,351 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    Tamilnadu Coronavirus Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment