Advertisment

தமிழகம் முழுவதும் பாஜக இன்று சிஏஏ ஆதரவுப் பேரணி

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP Rally, CAA supporters

BJP Rally, CAA supporters

Tamil nadu news today updates : தமிழகம் முழுவதும் இன்று சிஏஏ ஆதரவு பேரணியை பாஜக நடத்துகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இல.கணேசன் தலைமையிலும், சிவகங்கையில் ஹெச்.ராஜா தலைமையிலும், திருநெல்வேலியில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலும், கோவையில் வானதி சீனிவாசன் தலைமையிலும் இந்தப் பேரணி நடக்கிறது.

Advertisment

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (வயது 58) இன்று காலை காலமானார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த எம்.எல்.ஏ சாமியின் உயிர், திருவெற்றியூர் கே.வி.கே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை பிரிந்தது. 1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்த கே.பி.பி சாமி, 2006-ல் திருவொற்றியூர் தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அவர், 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ். முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் மற்றும் ஹரியான உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் அறிவிப்பை சட்ட அமைச்சகம் அறிவித்தது  பிப்ரவரி 12 அன்று, இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி முரளிதர் இடமாற்றத்தை பரிந்துரைத்தது.

மேலும், பல முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:07 (IST)27 Feb 2020

    சென்னையில் முதல்வருடன் வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் சந்திப்பு

    சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக் குழுவினர் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வரை சந்தித்துள்ளனர்.

    22:05 (IST)27 Feb 2020

    டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது வழக்குப் பதிவு

    டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை (ஐபி) ஊழியர் மரண வழக்கில் கொலை செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    21:42 (IST)27 Feb 2020

    மார்ச் 1-ம் தேதி திமுகவினர் யாரும் வாழ்த்து கூற நேரில் வர வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலிவுற்றிருக்கும் சூழலில் பிறந்த நாளை கொண்டாடும் மன நிலையில் இல்லை. அதனால், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் மார்ச்-1ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    20:21 (IST)27 Feb 2020

    டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

    டெல்லி ஜி.டி.பி மருத்துவமனையில் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதால் வடகிழக்கு டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 38 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 34 பேர் ஜிடிபி மருத்துவமனையிலும், ஒருவர் ஜக் பிரவேஷ் மருத்துவமனையிலும், 3 பேர் லோக் நாயக் மருத்துவமனையிலும் இறந்தனர்.

    20:01 (IST)27 Feb 2020

    என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு.தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்!” என  தெரிவித்துள்ளார்.

    19:55 (IST)27 Feb 2020

    10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு புள்ளி விவரம் வெளியீடு - தேர்வுத்துறை

    பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 10ம் வகுப்பு தேர்வுகள் 3,825 மையங்களிலும், 11ம் வகுப்பு தேர்வுகள் 3,016 மையங்களிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் 3,012 மையங்களிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

    19:10 (IST)27 Feb 2020

    தமிழகத்தில் சிஏஏவை ஆதரித்து பாஜக சார்பில் நாளை மாவட்டந்தோறும் பேரணி அறிவிப்பு

    தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாளை மாவட்டந்தோறும் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    18:17 (IST)27 Feb 2020

    தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் செய்வதில்லை - உயர் நீதிமன்றம்

    மதுக்கடைகளை இட மாற்றம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால்
    கடைபிடிப்பதில்லை.மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா? டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    17:42 (IST)27 Feb 2020

    2018ல் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் தமிழக சிபிசிஐடி போலீஸார் சம்மன்

    2018ல் நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சிபிசிஐடி
    போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    17:15 (IST)27 Feb 2020

    இந்தியாவின் பாதுகாப்பு நிலையை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் பாதுகாப்பு நிலைமை அரசியலாக்கப்படக்கூடாது" என்று எச்சரித்தார். கல்வரத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த அவர், “வன்முறையில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு எஸ்.டி.எம் அதிகாரிகள் உதவுவார்கள். வன்முறையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று கெஜ்ரிவால் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

    16:43 (IST)27 Feb 2020

    உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் மின் கசிவு; தீ விபத்தில் சுமார் 30 பசு மாடுகள் பலி

    உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 பசு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    16:42 (IST)27 Feb 2020

    கோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை - உயர்நீதிமன்றம்

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொது வழிபாட்டு தளமான கோயில்களில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை; திருவிழா நேரங்களில் தென்கலை, வடகலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டால் புகார் தரவேண்டும் என்று கூறியுள்ளது.

    16:12 (IST)27 Feb 2020

    இன்று முதல் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  -  குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

    அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், இன்று மாலை முதல் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

    15:35 (IST)27 Feb 2020

    டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மியும்தான் காரணம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றச்சாட்டு

    மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம். கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    14:51 (IST)27 Feb 2020

    ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன்

    மதக்கலவரத்தை தூண்டுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

    14:15 (IST)27 Feb 2020

    வெங்காய ஏற்றுமதி தடையை நீக்க மத்திய அரசு முடிவு

    வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டதாக,  உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    14:06 (IST)27 Feb 2020

    திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

    திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ”கே.பி.பி. சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    13:49 (IST)27 Feb 2020

    இளவரசர் அறிவிப்பு

    பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்தவித அடைமொழியும் இன்றி ஹாரி என்றே அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்

    13:00 (IST)27 Feb 2020

    மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது ரஜினியின் எதிர்காலத்திற்கு நல்லது- எஸ்.ஆர்.சேகர்

    டெல்லி கலவரம் மத்தியஅரசின் தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்

    12:56 (IST)27 Feb 2020

    டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்

    காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்"  என்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார். 

    12:56 (IST)27 Feb 2020

    டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம் - மன்மோகன் சிங்

    காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், பிற எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், " டெல்லி கலவரம் இந்த தேசத்தின் அவமானம்"  என்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவத்தார். 

    12:05 (IST)27 Feb 2020

    அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு

    அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தர வரிசையில்  முதல் 10 இடங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு    'பாத் பீகார் கி' என்ற பிரசாரத்தை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில், இந்த பிரச்சாரம் தன்னுடைய யோசனையில் வந்ததாக கூறி சாஸ்வத் கவுதம் என்பவர் புகார் அளித்துள்ளார்.     

    பட்லிபுத்ரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவு 420 (மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குவதை தூண்டுதல்) மற்றும் 406 (நம்பிக்கையை மீறியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    11:56 (IST)27 Feb 2020

    நீதிபதி முரளிதர் இடமாற்றத்தில் நடைமுறை பின்பற்றப்பட்டது – சட்ட அமைச்சர்

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்ற பட்டதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துளார்.  இடமாற்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தொடர்புடைய நீதிபதியிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  

    10:43 (IST)27 Feb 2020

    ராமசுப்புவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் ராமசுப்பு. அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். உதவி ஆணையர் ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் 13 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

    10:34 (IST)27 Feb 2020

    X,XI,XII பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

    தமிழகத்தில் மேலிநிலை படிப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 

    10 வகுப்பு பொதுத்தேர்வு :  மார்ச்27-  ஏப்.13 ; தேர்வு முடிவுகள் - மே.4

    பிளஸ்1 பொதுத்தேர்வு : மார்ச்.4. - மார்ச்.26 ; தேர்வு முடிவுகள் - மே.14

    பிளஸ்2 பொதுத்தேர்வு : மார்ச்.2. - மார்ச்.24 ; தேர்வு முடிவுகள் - ஏப்.24 

    10:22 (IST)27 Feb 2020

    டெல்லி கலவரம்: அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கருத்து

    அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனித உரிமைகள் பிரச்சினையில் தோல்வியுற்றதாக குற்றம் சாட்டினார்.

    தனது இந்திய பயணத்தின் போது டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து அமெரிக்கா அதிபரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு அதிபர், "தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அவருடன் (மோடி) விவாதிக்கவில்லை, அது இந்தியா உள் விவகராம் " என்று கூறியிருந்தார். இந்த பதில் "தலைமைத்துவம் தோல்வி" என்று பெர்னி சாண்டர்ஸ் கூறியுள்ளார்.

    மேலும், சாண்டர்ஸ் தனது ட்விட்டரில்,"200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவை தங்கள் வீடாக நினைத்து வாழ்கின்றனர். முஸ்லீம்-விரோத கும்பல் வன்முறை குறைந்தது 27 பேரைக் கொன்றது மற்றும் பலரைக் காயப்படுத்தியுள்ளது. டிரம்ப் 'இது இந்தியாவின் உள்விவகராம் ' என்று பதிலளித்துள்ளார். இது மனித உரிமைகள் மீதான தலைமைத்துவம் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

    10:08 (IST)27 Feb 2020

    நீதிபதி லோயாவை நினைவில் கொள்கிறேன் - ராகுல் காந்தி கருத்து

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நீதிபதி முரளிதர் இடமாற்றம் விவகாரத்தை கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்   " துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவில் கொள்கிறேன், அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை " என்று பதிவு  செய்துள்ளார்.

    10:05 (IST)27 Feb 2020

    நீதிபதி முரளிதர் இடமாற்றம், பிரியங்கா காந்தி கண்டனம்

    The midnight transfer of Justice Muralidhar isn’t shocking given the current dispensation, but it is certianly sad & shameful. Millions of Indians have faith in a resilient & upright judiciary, the government’s attempts to muzzle justice & break their faith are deplorable. pic.twitter.com/KKt4IeAMyv— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 27, 2020தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நீதிபதி முரளிதரனை நள்ளிரவில் இடமாற்றம் செய்திருப்பது  அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு உண்மையிலேயே வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. லட்சக்கணக்கான இந்தியர்கள் நேர்மையான நீதித்துறையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். நீதித் துறையில் மக்களின் நம்பிக்கையை உடைக்கும்  அரசாங்கத்தின் முயற்சிகள் இழிவானவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.   

    Tamil nadu news today updates : சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்புமனு படிவம் 26-ல் வேட்பாளர்கள், குற்ற விபரங்கள், சொத்து உள்ளிட்ட விபரங்களை முறையாக தெரிவிக்க வில்லை என்பதால் எம்.பி. பார்திபனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் – 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

     

     

     

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment