பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.42 காசுக்கும் விற்பனையாகிறது.
பொங்கல் சிறப்பு ரயில்: ஜனவரி 12 முதல் நெல்லை, குமரி, நாகர்கோவில் மற்றும் ராமநாதபுரத்துக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 04, 2025 22:30 ISTதிருவள்ளுவர் திருநாள் விருதாளர்கள் அறிவிப்பு
திருவள்ளுவர் திருநாள் விருதுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.
-
Jan 04, 2025 21:53 ISTசவார்க்கரின் வரலாறு திரித்து பேசப்பட்டது - அண்ணாமலை
தமிழகத்தில் சவார்க்கரின் வரலாறு திரித்து பேசப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சவார்க்கர் என்றால் மன்னிப்பு கேட்டார், காந்தியை கொலை செய்ய தூண்டுதலாக இருந்தார் என்பதில் மட்டுமே அடைத்து வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 04, 2025 21:05 ISTசீமான் பேச்சால் சர்ச்சை
சென்னை, புத்தக கண்காட்சியில் முதலமைச்சர் குறித்து சீமான் ஒருமையில் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், சீமானின் பேச்சுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என நிகழ்வை நடத்தும் பபாசி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
-
Jan 04, 2025 20:19 ISTசி.பி.ஐ விசாரணை வேண்டும் - தமிழிசை
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகளுடன், ஆளுநரை சந்தித்த பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
Jan 04, 2025 19:53 ISTதாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை ரத்து
தாம்பரம் - கடற்கரை இடையே நாளை (ஜன 5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ஃபூட் ஓவர் பிரிட்ஜ் பணியின் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
Jan 04, 2025 19:12 ISTஅமலாக்கத்துறை சோதனை - துரைமுருகன் பதில்
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், தனது வீட்டில் எதுவும் இல்லை என எழுதி கொடுத்துச் சென்றதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
Jan 04, 2025 18:37 ISTஅனகாபுத்தூரில் பயங்கர தீ விபத்து
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jan 04, 2025 18:36 ISTராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு : காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு, வரும் 21ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
-
Jan 04, 2025 17:44 ISTவிண்வெளியில் துளிர்விட்ட காராமணி வதைகள்: இஸ்ரோ அறிவிப்பு
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி60 ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள், 4 நாட்களில் முளைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ, விரைவில் இலைகள் துளிர்விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
Jan 04, 2025 17:42 ISTஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை மன்னிட்டு தொடர் விடுமுறை விடப்படும் நிலையில், ஜனவரி 17-ந் தேதியும் தமிழக அரசின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனவரி 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 04, 2025 16:59 ISTமாணவி பாலியல் வன்கொடுமை - வழக்கை போலீஸ் திசை திருப்ப முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,"அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது." என்று பதிவிட்டுள்ளார்.
-
Jan 04, 2025 16:47 ISTஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகம் - புதுச்சேரி அரசு தகவல்
புத்தாண்டு தினத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளது. புத்தாண்டு ஜன., 1ம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் அடுத்த 24, மணி நேரத்தில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 10 பெண் குழந்தைகள், 9 ஆண் குழந்தைகள் உள்பட 19 குழந்தைகள் பிறந்தன.
இதில்,10 குழந்தைகள் சுகப்பிரசவமாகவும், 9 குழந்தைகள் அறுவை சிகிச்சையிலும் பிறந்தன.மேலும், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள்ளன.
அதே தினத்தில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 24 பேர் சாலை விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டனர். 26 பேர் சண்டையில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
-
Jan 04, 2025 16:34 ISTபீஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பீஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பீஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடந்தது. பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்தது. புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
-
Jan 04, 2025 16:32 ISTஅரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் சிறப்பம்சங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ளது.
-
Jan 04, 2025 16:14 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கோர்ட் அதிரடி உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமித்து கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அஞ்சலை, பொற்கொடி, மலர்க்கொடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தற்போதைய சூழலில் விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தார்.
-
Jan 04, 2025 15:46 ISTசென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
"சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக காலை 7 முதல் மதியம் 2 மணி வரை இரு மார்க்கங்களிலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட உள்ளது" என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jan 04, 2025 15:00 ISTகுடியிருப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்யாவின் குடும்பத்திற்கு குடியிருப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "முதலமைச்சர் வீடு கொடுத்திருக்கிறார்; இனி எங்களை யாரும் துரத்த முடியாது" என்று அந்த சிறுமியின் குடும்பத்தினர் கூறுகிறார்.
-
Jan 04, 2025 13:57 ISTஎம்.எல்.ஏ. பாலாஜி நோட்டீஸ்
ஜன.6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க விசிக எம்.எல்.ஏ. பாலாஜி நோட்டீஸ்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க விசிக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது
வேங்கைவயல் விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி
-
Jan 04, 2025 13:17 ISTவேறொருவருக்கு தொடர்பு - உறுதி செய்த மாணவி.
"பாலியல் வன்கொடுமை சம்பவம் - வேறொருவரிடம் ஞானசேகரனுக்கு தொடர்பு". சிறப்பு விசாரணை குழுவிடம் திட்டவட்டமாக உறுதி செய்த மாணவி.
-
Jan 04, 2025 13:04 ISTதமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக ஒலித்த வேறு பாடல்
சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக ஒலித்த வேறு பாடல். புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்ததால் சலசலப்பு.
-
Jan 04, 2025 13:01 ISTபேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
அரக்கோணத்தில் தனியார் பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து பேர் படுகாயம்அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கடற்படை விமான தளம் வளாகம் எதிரே அரியலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சிமெண்ட் லாரியும், திருத்தணியில் இருந்து ஆரணி சென்ற தனியார் பேருந்தும் விடியற்காலை 4.30 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநர் கேசவனின் கால்கள் சிக்கிக் கொண்ட நிலையில், லாரியின் முன்பகுதி அப்புறப்படுத்தப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.
-
Jan 04, 2025 12:56 ISTபெண்களை குற்றவாளிகளாக குற்றம் சாட்டுகின்றனர் - கனிமொழி
பாலியல் பலாத்கார வழக்கில் பெண் ஏன் அங்கிருந்தார். அண்ணா என்று அழைத்திருந்தால் விட்டிருப்பாரே என்று பெண்களை குற்றவாளிகளாக குற்றம் சாட்டுகின்றனர் . ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் நமது கொள்கை எதிரி என அண்ணா பல்கலை விவகாரம் பற்றி கனிமொழி எம்.பி பேசினா
-
Jan 04, 2025 12:23 ISTதமிழக நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பூரில் தாராபுரம், வெள்ளகோவில் பகுதியில் 2 மேம்பாலங்களுக்கு ரூ.9.22 கோடி ஒதுக்கீடு. தேவகோட்டை-புதுக்கோட்டை சாலையில் மேம்பாம் கட்ட ரூ.8.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
Jan 04, 2025 11:22 ISTஅதிமுக ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி - சேகர்பாபு
"கடந்த அதிமுக ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவியது " - போராட அனுமதி மறுக்கப்படுவதாக சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
-
Jan 04, 2025 11:15 ISTஅனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலர் வெளியீடு
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்
சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பழனியில் 2024 ஆகஸ்ட் மாதம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.
-
Jan 04, 2025 10:58 ISTபுதிய வைரஸ் - அச்சம் வேண்டாம்
சீனா முழுவதும் அதிவேகமாக பரவி வரும் HMPV வைரஸ் பாதிப்பு குறித்து இந்திய மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கமளித்துள்ளது.
-
Jan 04, 2025 10:33 ISTஅமைச்சர் சேகர்பாபு பேட்டி
கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்பது கடந்த ஆட்சி காலத்தில் தான் நடந்தது. ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் பா.ஜ.கவினர் அடைக்கப்படவில்லை.மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேவை என்ன என்பதை அறிந்து அது நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
Jan 04, 2025 10:23 ISTஅண்ணா பல்கலை.க்கு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கசென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார் சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 04, 2025 09:50 ISTஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி
"ஒரு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
Jan 04, 2025 09:09 IST2 கி.மீ. இடைவெளியில் இரண்டு விண்கலம்
விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்க ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய Spadex A மற்றும் Spadex B விண்கலம் இரண்டும் 2 கி.மீ. இடைவெளியில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jan 04, 2025 09:06 ISTவிமானங்கள் தாமதம்
அடர் பனிமூட்டம் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் 92 விமானங்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் கடும் பனிமூட்டத்தின் காரணமாக திருப்பி விடப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடர்பனி, மோசமான வானிலை காரணமாக 37 விமானங்கள் தாமதமாகின.
-
Jan 04, 2025 08:46 ISTபாதியில் நிறுத்தப்பட்ட ரயில்
கொல்லம் எக்ஸ்பிரஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் காலதாமதம். இன்று அதிகாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பொருள் ரயில் சக்கரத்தில் சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Jan 04, 2025 08:44 ISTஜல்லிக்கட்டு விழா மேடையில் மோதல்!
புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மோதல் ஏற்பட்டது. அடையாள அட்டையின்றி சிலர் மேடையில் ஏறியதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Jan 04, 2025 08:20 ISTபொங்கல் பரிசு ரூ.750..!
புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பதிற்கு பதிலாக ரூ.750 ரொக்க பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 04, 2025 08:18 ISTகோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து - லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது
கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை நேற்று நள்ளிரவு போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Jan 04, 2025 07:47 ISTடெல்லியில் கடும் பனிமூட்டம்
சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் காலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.
-
Jan 04, 2025 07:39 ISTஜனவரி 10 தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனை
பள்ளிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் ஜனவரி 10 ம் தேதி திருச்சியில் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து அறிவுரை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
-
Jan 04, 2025 07:35 IST“ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்”
ரெய்டில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை கோதனை நிறைவடைந்த நிலையில் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
-
Jan 04, 2025 07:26 ISTதச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு
நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் இன்று தொடங்குகிறது. 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
Jan 04, 2025 07:24 ISTபள்ளி சிறுமி பலி - 3 பேர் கைது
விழுப்புரம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரொ, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.