Coimbatore, Madurai, Trichy News Updates: திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.51 கோடி

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruchendur crowd

முதலமைச்சர் இன்று நெல்லை வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு இன்று செல்கிறார். கங்கைகொண்டான் டாடா சோலார் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார். மாலையில் தி.மு.க நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

  • Feb 07, 2025 00:26 IST

    திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.51 கோடி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ2.51கோடி கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1040 கிராமும், வெள்ளி 20,800 கிராமும் , 1248 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்



  • Feb 06, 2025 19:50 IST

    புதுக்கோட்டையில், ஆர்.ஆர் கிரஷர் குவாரிக்கு சீல்

    புதுக்கோட்டை: துளையானூரில் உள்ள ஆர்.ஆர் கிரஷர் குவாரிக்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குவாரி உரிமையாளர்களான ராசு ராமையா ஆகிய இருவர் உள்ளிட்ட 5 பேர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது



  • Advertisment
  • Feb 06, 2025 19:49 IST

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீமூட்டி தங்கிய 3 பேருக்கு அபராதம்

    நீலகிரி மாவட்டம் குந்தா வனசகரகத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், அனுமதியின்றி, நுழைந்து பாலீத்தீனில் குடில் அமைத்து, தீ மூட்டி தங்கிய 3 பேருக்கு தலா ரூ10000 அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 



  • Feb 06, 2025 18:56 IST

    தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை பலி 

    கடலூர் மாவட்டம் வடலூரில் தண்ணீர் என நினைத்து வீட்டில் வைத்திருந்த டீசலை குடித்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு



  • Advertisment
    Advertisements
  • Feb 06, 2025 18:35 IST

    வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வு நடத்துக: ஐகோர்ட் உத்தரவு

    வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.



  • Feb 06, 2025 17:51 IST

    வேங்கைவயல் வழக்கு - விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோர்ட்  

    புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட வேங்கைவயல் வழக்கை, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது



  • Feb 06, 2025 17:41 IST

    ராமேஸ்வரத்தில் விபத்து - 10 பேர் காயம் 

    உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளம் அருகே மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற அரசு பேருந்தும் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் வந்த 10 பேர் காயத்துடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

     



  • Feb 06, 2025 17:20 IST

    ஈரோட்டில் வி.ஏ.ஓ. கைது

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே புங்கம்பாடி கிராமத்தில் பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ. 2500 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. ஜெயசுதா கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சத்தை பெற தனியாக ஒரு உதவியாளரை வைத்து பணம் வாங்கியுள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜெயசுதா மற்றும் அவரது உதவியாளர் பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Feb 06, 2025 16:36 IST

    ஜெகபர் அலி கொலை - 5 பேருக்கு நீதிமன்ற காவல்

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 06, 2025 15:41 IST

    பாலியல் புகார் - மணப்பாறையில் தலைமை ஆசிரியரிடம் விசாரணை 

    மணப்பாறை அருகே பாலியல் புகார் தொடர்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி  வருகிறார்கள். ஆசிரியரிடம் நடைபெறும் விசாரணைக்கு மாணவர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டு என புகார் அளித்துள்ளனர்.  



  • Feb 06, 2025 14:54 IST

    மணப்பாறை அருகே பாலியல் புகார்; தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

    மணப்பாறை அருகே பாலியல் புகார் தொடர்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரிடம் நடைபெறும் விசாரணைக்கு மாணவர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டு என புகார் கூறப்படுகிறது



  • Feb 06, 2025 13:45 IST

    சிறை கைதிகளுக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது - ஐகோர்ட்

    சிறை கைதிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.



  • Feb 06, 2025 13:19 IST

    நெல்லை வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கே.டி.சி. நகர் பகுதியில் நடந்து சென்று மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார்



  • Feb 06, 2025 12:18 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 



  • Feb 06, 2025 11:28 IST

    திருப்பரங்குன்றத்தில் தைப்பூசம் கொண்டாட்டம்

    திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெறும் வைரத்தேரோட்டம் 



  • Feb 06, 2025 11:13 IST

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து

    விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன் ராஜ் மற்றும் போர்மேன் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Feb 06, 2025 10:49 IST

    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை - பிப்.8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை ஒடுக்கத் தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் பிப்ரவரி 8 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  



  • Feb 06, 2025 10:46 IST

    திருப்பூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து

    திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • Feb 06, 2025 09:47 IST

    மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பூங்கா!

    மதுரை, திருச்சியில் வரும் 13 ஆம் தேதி புதிய டைடல் பூங்காவிற்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 



  • Feb 06, 2025 09:22 IST

    ஜெகபர் அலி வழக்கு - சிக்கியது முக்கிய ஆவணங்கள்

    புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை வழக்கில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெகபர் அலி கொலை வழக்கில் கைதான குவாரி உரிமையாளர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2 பேர் வீட்டில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  பல்வேறு நபர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளர்.  



  • Feb 06, 2025 09:17 IST

    இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

    கன்னியாகுமரியில் இளைஞர் மீது மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Feb 06, 2025 09:16 IST

    முதலமைச்சர் இன்று நெல்லை வருகை

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு இன்று செல்கிறார். கங்கைகொண்டான் டாடா சோலார் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார். மாலையில் தி.மு.க நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்துகிறார்.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: