/indian-express-tamil/media/media_files/2025/02/09/obuXzqcjl09hQaN5o3Ob.jpg)
தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்சிகிச்சை: வேலூர் அருகே ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலப் பிரச்சனையால் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
-
Feb 09, 2025 20:28 IST
கோயிலில் தட்டில் விழும் காணிக்கை அர்ச்சகர்க்கு இல்லை - அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை
“கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது. பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Feb 09, 2025 17:10 IST
திருச்சியில் பறவைகள் பூங்கா திறப்பு
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ. 18.64 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
-
Feb 09, 2025 16:49 IST
தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, நாளை உள்ளூர் (பிப் - 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
-
Feb 09, 2025 16:12 IST
தி.மு.க கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டணி கட்சியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி, மதவெறித் திட்டத்தை பா.ஜ.க, சங்பரிவார அமைப்புகள் அரங்கேற்றியுள்ளன. சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் செய்வது வழக்கம். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Feb 09, 2025 14:46 IST
கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
கோவை ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே பொதுத்துறை இணைச் செயலாளராக இருந்தார். தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Feb 09, 2025 13:11 IST
ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி; மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - ஸ்டாலின்
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Feb 09, 2025 11:46 IST
மாமியாருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மருமகள்
நாமக்கல் அருகே சொத்தை அபகரிக்க மாமியாருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Feb 09, 2025 10:58 IST
பூசாரி போக்சோவில் கைது
தருமபுரி: தொப்பூர் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Feb 09, 2025 10:36 IST
மறைந்தும் 8 பேரை வாழ வைத்த விவசாயி
விவசாயி பசுமை குமார் என்பவர், மரத்தில் இருந்து கீழே விழுந்து, மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இதயம், கல்லீரல் உள்ளிட்ட 8 உறுப்புகள் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
-
Feb 09, 2025 09:54 IST
14 மீனவர்கள் சிறைபிடிப்பு
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
Feb 09, 2025 09:36 IST
திருச்சி பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யாளம்மன் படித்துறை அருகே அமைந்துள்ள சரணாலயம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 18. 64 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Feb 09, 2025 09:22 IST
மறைந்தும் 8 பேரை வாழ வைத்த விவசாயி
விவசாயி பசுமை குமார் என்பவர், மரத்தில் இருந்து கீழே விழுந்து, மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இதயம், கல்லீரல் உள்ளிட்ட 8 உறுப்புகள் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
-
Feb 09, 2025 09:21 IST
தைப்பூச விழா- பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச விழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கூட்டத்தால் பழனியில் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி தைப்பூச விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3500 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 09, 2025 09:19 IST
தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உயர்சிகிச்சை
வேலூர் அருகே ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலப் பிரச்சனையால் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.