/indian-express-tamil/media/media_files/2025/02/10/hoJGd01lCa8AuI0AadvN.jpg)
கைதான ராமேஸ்வரம் மீனவர்கள்: ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் சிறைப்பிடித்ததை அடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
Feb 10, 2025 19:40 IST
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் குளிப்பதை செல்ஃபோனில் படம்பிடித்த மோகன் (29) மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழகுப்பதிவு செய்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு இக்குற்றத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக, கையும் களவுமாக மோகன்ராஜைப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாக அடித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
-
Feb 10, 2025 17:41 IST
உதகையில் படுகர் இன மக்களின் 300 ஆண்டுகள் பழமையான குல தெய்வ கோயில் கும்பாபிஷேகம்
உதகமண்டலத்தில் படுகர் இன மக்களின் 300 ஆண்டுகள் பழமையான குல தெய்வ கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. 86 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடி கொண்டாடினர். கோவை, சென்னை, பெங்களூரு என பல்வேறு வெளியூர்களில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்களும் சொந்த ஊர்களுக்கு வந்து உற்சாகமடைந்தனர்.
-
Feb 10, 2025 16:54 IST
ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Feb 10, 2025 15:25 IST
அரசு பேருந்தில் சீட் பிடிக்க வீச்சரிவாள் - பொள்ளாச்சியில் பரபரப்பு
பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்காக இருக்கையில் 2 வீச்சரிவாள்கள் வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Feb 10, 2025 15:23 IST
ஓட்டுநர் உரிமம் ரத்து - மீண்டு தரக்கோரி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
தனது ஓட்டுநர் உரிமத்தை தரக்கோரி தென்காசியில் போக்குவரத்து துறை அதிகாரியை கண்டித்து செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
Feb 10, 2025 14:31 IST
நாளை முதல் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் வரும் 11,12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.
-
Feb 10, 2025 13:54 IST
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (பிப் 11) மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாளை காலை 8:45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், காலை 11:30 மணிக்கு பழனி சென்றடையும். மேலும், பழனியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5:45 மணிக்கு மதுரை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Feb 10, 2025 13:50 IST
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரி மனு
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை, திருப்பரங்குன்றம் மலை நிலுவை வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், யாரிடமும் மத பாகுபாட்டை காட்ட விரும்பவில்லை எனவும், நல்லிணக்கத்தையே விரும்புவதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 10, 2025 12:47 IST
மருத்துவக் கழிவு விவகாரம் - ஒருவர் கைது
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி சந்திரசேகர் கைது. கடந்த வாரம் ரெட்டியார்பட்டி அருகே 375 கிலோ மருத்துவக் கழிவு கொட்டப்பட்டது; பெருமாள்புரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சந்திரசேகர் கைது; குப்பையில் மருத்துவ கழிவுகளோடு கிடந்த விசிட்டிங் கார்டால் சிக்கினார் சந்திரசேகர்.
-
Feb 10, 2025 12:08 IST
வடலூரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு, வடலூர் போலீசார் சம்மன். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிவரும் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், வரும் 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
-
Feb 10, 2025 12:01 IST
ஓசியில் இறைச்சி கிடைக்காததால் வெறிச் செயல்
தேனி: ஓசியில் இறைச்சி தர மறுத்ததால் | மயானத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டிக் கொண்டுவந்து இறைச்சிக் கடைக்கு முன்பு வீசிவிட்டு சென்ற நபர் கைது செய்யபட்டுள்ளார். அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு மக்கள் அலறியடித்து ஓட்டம். கைது செய்யப்பட்ட குமார் என்பவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மயானத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 10, 2025 11:54 IST
மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம்
மணப்பாறையில் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது தனியார் பள்ளிகள். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என பெற்றோர்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர், காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
-
Feb 10, 2025 11:19 IST
நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் - சீமான் அறிவிப்பு
பிரபாகரனே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். -
Feb 10, 2025 11:03 IST
நோட்டாவின் வாக்குகள் அதிகரிக்க காரணம் என்ன? - சீமான் கேள்வி
திருச்சி : "டெபாசிட்டை இழந்தாலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விலைபோகாத வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளது. நோட்டாவின் வாக்குகள் அதிகரிக்க காரணம் என்ன?" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியை எழுப்பியுள்ளார்.
-
Feb 10, 2025 10:53 IST
ரயிலில் பாலியல் தொல்லை- பெண் ஐ.சி.யூ.வில் அனுமதி
வேலூர் அருகே பாலியல் தொல்லைக்கு ஆளாகி ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் கரு கலைந்த நிலையில் வலது கால் முட்டி, முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
-
Feb 10, 2025 10:51 IST
சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு
ஈரோடு கிழக்கில் வென்ற சந்திரகுமார் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றார். எம்.எல்.ஏ சந்திரகுமாருக்கு சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
Feb 10, 2025 10:20 IST
மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்
வேலூரில், மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம். மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரை அடுத்து, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Feb 10, 2025 09:36 IST
கோயில் தட்டு காணிக்கை- சுற்றறிக்கை வாபஸ்
மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயில் அர்ச்சகர்கள் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. தட்டு காணிக்கை கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறை இருக்கிறது. அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்று அறநிலையத் துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
Feb 10, 2025 09:22 IST
ஸ்ரீரங்கம் கோயில் தை தேரோட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
-
Feb 10, 2025 09:21 IST
கிருஷ்ணகிரி அருகே தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தார். 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்லும்போது நாய் கடித்ததையடுத்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே மருத்துவமனை அழைத்துச் சென்றபோது தெரிவித்துள்ளனர்.
-
Feb 10, 2025 09:04 IST
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் சிறைப்பிடித்ததை அடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.