/indian-express-tamil/media/media_files/2025/01/01/VGszzQgmMlMxliwfXLxj.jpg)
தைப்பூசம் திருவிழா: தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. காலை முதலே பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
-
Feb 11, 2025 23:44 IST
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு: குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
Feb 11, 2025 17:33 IST
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு பதில்
பிரதமரின் ஸ்வஸ்த்ய சரக்ஷா திட்டடததின் கீழ் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை என்று மாநிலங்களைவையில் மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார்.
-
Feb 11, 2025 17:27 IST
அ.தி.மு.க-வில் எந்தவித பிரச்சனையும் இல்லை - செல்லூர் ராஜூ
இ.பி.எஸ் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.
-
Feb 11, 2025 17:03 IST
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகளும், 375 மாடுபிடி வீரர்களும் களம்கண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 35 வீரர்கள் காயமடைந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Feb 11, 2025 16:15 IST
தஞ்சை மாணவி குடும்பத்திற்கு நிதியுதவி
தஞ்சை மாவட்டம் பள்ளத்தூர் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி கவிபாலாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 11, 2025 14:32 IST
சட்டவிரோத கைத்துப்பாக்கி - காவலர் சஸ்பெண்ட்
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலர் தனுஷ்கோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். காவலரின் கூட்டாளியான சுரேஷிடம் இருந்து 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது காவலருடன் நட்பு ஏற்பட்டதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.
-
Feb 11, 2025 13:52 IST
பழனியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு
பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 11, 2025 12:53 IST
கள்ளவழி கருப்பனார் கோயிலில் களைகட்டிய சம்பந்தி விருந்து
நாமக்கல் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் களைகட்டிய சம்பந்தி விருந்து நடைபெற்று வருகிறது. 2,500 கிலோ இறைச்சியை சமைத்தனர் ஆண்கள். சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருந்தில் கலந்துக்கொண்டனர்.
-
Feb 11, 2025 11:50 IST
எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்
தென்காசி அடுத்த இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் இந்த சடலம் இருந்தது என்று தகவல். உடலுக்கு அருகில் இருந்த மது பாட்டில்கள், தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Feb 11, 2025 11:41 IST
பள்ளிப் பேருந்தில் கைகலப்பு - உயிரிழந்த மாணவன்
பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் பயிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்களிடையே முன்விரோதம் காராணமாக பள்ளிப் பேருந்தில் செல்லும் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
-
Feb 11, 2025 11:35 IST
காரைக்காலில் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Feb 11, 2025 11:07 IST
வடலூர் சத்திய ஞான சபையில் குவியும் பக்தர்கள்
தைப்பூச விழாவையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 7 திரைகளை நீக்கி காட்டப்படும் ஜோதி தரிசனத்தைக் கண்டு பக்தர்கள் வேண்டுதல் செய்து வருகின்றனர்.
-
Feb 11, 2025 10:33 IST
Maths ‘Sir’ கைது
திருப்பூரில் மாநகராட்சி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் சுந்தரவடிவேலு கைது செய்யப்பட்டுள்ளார். சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று பதுங்கி இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
-
Feb 11, 2025 10:25 IST
கரூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
-
Feb 11, 2025 10:23 IST
திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசம்
திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், விபூதிேன் கொண்டு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு தங்கவேல் தங்க கிரீடம், மாணிக்க கல், வைர ஆபரணத்துடன் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
-
Feb 11, 2025 09:23 IST
வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்
திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக இன்று திறந்திருக்கும். தைப்பூசத்தையொட்டி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 11, 2025 09:21 IST
அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.திமுக சார்பில் 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர் முர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 900 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்றனர். தங்ககாசு மற்றும் சைக்கிள்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 11, 2025 09:18 IST
வேலூர் - பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு அகற்றம்
வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. கருவில் இருந்த 4 மாத சிசுவின் இதய துடிப்பு நின்ற நிலையில் சிசு அகற்றப்பட்டது. பெண்ணின் கை, கால், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 11, 2025 09:17 IST
சேலத்தில் தைப்பூசம் கோலாகலம்
சேலம் அம்மாப்பேட்டையில் காவடியாம் காவடி ... கந்தன்காவடியாம் காவடி என தைப்பூசத்தையொட்டி காவடி ஏந்தி ஊர்வலமாக சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.