Coimbatore, Madurai, Trichy News Updates: கோயிலுக்குள்ள அரசியல் வைக்கக்கூடாது - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pavan Kalyan photo

ஆர்ச் இடிந்து விழுந்து ஒருவர் பலி: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்ச்சை இடிக்கும்போது பொக்லைன் இயந்திரம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில் ஒப்பந்ததாரர் காயம் அடைந்தார். சாலை நடுவே உள்ள ஆர்ச், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • Feb 13, 2025 18:30 IST

    கோயிலுக்குள்ள அரசியல் வைக்கக்கூடாது - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

    இது ஆன்மிக பயணம் மட்டுமே; யாத்திரை வரும்போது சொல்லிவிட்டு வருகிறேன்.. கோயிலுக்குள்ள அரசியல் வைக்கக்கூடாது என கும்பகோணத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்



  • Feb 13, 2025 17:25 IST

    பட்டியல் இன மாணவன் கை வெட்டப்பட்ட சம்பவம்; காவல்துறை விளக்கம்

    பட்டப்பெயர் வைத்து அழைத்ததாலையே பட்டியல் இன கல்லூரி மாணவன் கை வெட்டப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது என சிவகங்கை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது



  • Advertisment
  • Feb 13, 2025 17:06 IST

    விருதுநகர் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவன்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன்  தப்பி ஓடியுள்ளார். சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி தப்பி ஓடிய கணவன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

    நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியுடன் சண்டையிட்ட திருமலைகுமார். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ராஜலட்சுமியின் அலறல் குறித்து கணவனிடம்  அக்கம்பக்கத்தினர் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது, ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து  திருமலைகுமார் தப்பி ஓடியுள்ளார். 

    கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சிவகாசி போலீசார் சேகரித்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளி திருமலைகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள். 



  • Feb 13, 2025 17:02 IST

    விக்கிரவாண்டி விவகாரம் - உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 12 வாரங்களில் வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் சிறுமியின் தந்தையிடம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

    டி.எஸ்.பி. தலைமையில் இவ்வழக்கின் விசாரணை நடப்பதாக காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது



  • Advertisment
    Advertisements
  • Feb 13, 2025 16:02 IST

    மதுரை தோரணவாயில் இடிந்த விவகாரம் - 2 பேர் மீது வழக்கு 

    மதுரை மாட்டுத்தாவணியில் தோரணவாயில் இடிந்து விழுந்த விவகாரத்தில் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் புதூர் காவல்துறையினர் 

    பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி தோரணவாயில் இடிக்கும் பணியின் போது தூண் விழுந்து பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்தார். பொக்லைன் ஆப்ரேட்டர் நாகலிங்கம் உயிரிழந்த நிலையில், இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 



  • Feb 13, 2025 14:24 IST

    இராமநாதபுரத்தி ரூ.4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் 


    இராமநாதபுரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் கேணிக்கரையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  • Feb 13, 2025 12:38 IST

    பைக் ஓட்டிய தாழ்த்தப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்

    சிவகங்கை: மானாமதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பைக் ஓட்டியதால் கையை வெட்டியதாக புகார் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேரைக் கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. லப்பிடவூரில் பைக் ஓட்டிச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூக கல்லூரி மாணவர் மீது தாக்குதல் என புகார். எங்க முன்னாடி எப்படி பைக் ஓட்டலாம் என கூறி மாணவரின் இரு கைகளையும் வெட்டியதாக குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட மாணவரின் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். 



  • Feb 13, 2025 12:28 IST

    ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு

    சேலம்: தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. குருக்குபட்டியைச் சேர்ந்த தறித்தொழிலாளி தமிழ்மணி இரு மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றிருந்தார்; இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Feb 13, 2025 12:09 IST

    ஜெகபர் அலி வழக்கு - சம்மன் அனுப்ப திட்டம்

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி வழக்கில் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. திருமயம் காவல் ஆய்வாளராக இருந்த குணசேகரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு. தாசில்தார் புவியரசன், கனிமவளத்துறை துணை இயக்குனராக இருந்த லலிதாவுக்கு சம்மன் அனுப்ப திட்டம். குவாரி உரிமையாளர் ராமையா திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பேசியது சிடிஆர் மூலம் தெரியவந்துள்ளது. கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜெகபர் அலி படுகொலை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 



  • Feb 13, 2025 12:05 IST

    குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

    நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. நீதி கேட்டு குழந்தையின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். பாளையங்கோட்டை வட்டாச்சியரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவமனை தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.  



  • Feb 13, 2025 11:15 IST

    கோவையில் அமைகிறது டபுள் டக்கர் பாலம்!

    கோவையில் 3 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம். கோல்ட்வின்ஸ் முதல் லீ மெரிடியன் ஹோட்டல் வரை அமையவுள்ளது. மேல் தளத்தில் மெட்ரோ ரயிலும், கீழ் தளத்தில் வாகன போக்குவரத்தும் செல்ல ஏற்பாடு. இதன்மூலம் மெட்ரோவுக்கென தனியாக நிலத்தை கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. செலவையும் கட்டுப்படுத்த முடியும் என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தெரிவித்துள்ளார்.



  • Feb 13, 2025 10:51 IST

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.



  • Feb 13, 2025 10:22 IST

    மதுராந்தகம்அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் புனிதவேல் உயிரிழந்தார்.



  • Feb 13, 2025 09:42 IST

    கோவை கலெக்டரின் முதல் உறுதி

    கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவன் குமார் க.கிரியப்பனவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு. ``போதைப் பொருள், கனிம கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' - கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.



  • Feb 13, 2025 09:14 IST

    சாலை விபத்தில் உடல் கருகி உயிரிழந்த நபர்

    அரியலூர் ஆண்டிமடத்தில் சாலைடுப்புச் சுவரில் மோதியதால் காரில் பற்றிய தீ - கார் கதவைத் திறக்க முடியாமல் உள்ளே சிக்கிய  அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.



  • Feb 13, 2025 09:13 IST

    வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்!

    திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 



  • Feb 13, 2025 09:11 IST

    செய்யாறு பகுதியில் காலை முதலே பனிமூட்டம்

    செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.



  • Feb 13, 2025 09:09 IST

    மதுரையில் ஆர்ச் இடிந்து விழுந்து ஒருவர் பலி

    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்ச்சை இடிக்கும்போது பொக்லைன் இயந்திரம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில் ஒப்பந்ததாரர் காயம் அடைந்தார். சாலை நடுவே உள்ள ஆர்ச், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: