/indian-express-tamil/media/media_files/2hdiogCm7hYaPaZf18WK.jpg)
எலுமிச்சை பழம் ரூ.5.9 லட்சத்திற்கு ஏலம்: புதுக்கோட்டையில் தைப்பூசத்தன்று பழனி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒற்றை எலுமிச்சை பழத்தை ரூ.5.09 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 14, 2025 21:39 IST
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை - ஐகோர்ட் அதிருப்தி
கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ. 54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன் எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வாடகை பாக்கியை அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Feb 14, 2025 21:08 IST
தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகராட்சி பள்ளியில் "விர்ச்சுவல் ரியாலிட்டி ஆய்வகம்’
தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மாநகராட்சி பள்ளியில் "விரிச்சுவல் ரியாலிட்டி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் கலக்கி வருகிறது.
-
Feb 14, 2025 18:09 IST
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழிபாடு நடத்தினார். சுவாமிமலை, திருச்செந்தூர், பழனியை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் அவர் சாமி வழிபாட்டில் ஈடுபட்டார்.
-
Feb 14, 2025 17:50 IST
பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை
தஞ்சையில் 10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
-
Feb 14, 2025 17:08 IST
திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை
வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்தவும், மேல் நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய், காவல்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 8 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைத்து திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
Feb 14, 2025 16:57 IST
நாம் தமிழர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு
பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பழனியைச் சேர்ந்த நா.த.க. கட்சி நிர்வாகி திவான் மைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நெய்க்காரப்பட்டியில் அமைதியான முறையில் பிப்.22-ல் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.
-
Feb 14, 2025 16:18 IST
வங்கி தலைமை மேலாளருக்கு அபராதம்
வங்கிக் கடனை திருமப் செலுத்திய பிறகும் அடமானமாக வைத்த பத்திரத்தை திரும்பத் தர மறுப்பதாக உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு. கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மனுதாரரின் வீட்டுக்கேச் சென்று அடமானமாகப் பெற்ற அனைத்து ஆவணங்களையும் தலைமை மேலாளர் வரும் 17 ஆம் தேதி அன்று வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழு தொகையும் செலுத்திய பிறகும் கூடுதலாக ரூ. 5 லட்சம் செலுத்தினால்தான் அடமான பத்திரத்தை திரும்ப தருவோம் என வங்கி கூறியதாக தென்காசியைச் சேர்ந்த மாரித்துரை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
-
Feb 14, 2025 16:06 IST
தஞ்சை: சி.பி.எஸ்.இ மாணவர்கள் தேர்வெழுத இயலாது
தஞ்சையில் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லாமலேயே 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்து பொதுத்தேர்வு வரை தனியார் பள்ளி ஒன்று தயார் செய்துள்ளது. நாளை தேர்வு தொடங்கும் நிலையில் ஹால்டிக்கெட் வராததால் மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.
அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படித்ததால் 19 மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத முடியாதது உறுதியானதால் பெற்றோர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளியின் தாளாளர், பெற்றோர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், 19 மாணவர்களும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூல் என்ற திட்டத்தில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பித்து ஜூன் மாதம் தேர்வெழுத முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Feb 14, 2025 15:59 IST
போலி இணையதளம் மோசடி - திருநள்ளாறு கோயில் அர்ச்சகருக்கு சிறை
திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம் வடிவமைத்து அர்ச்சனை டிக்கெட் புக்கிங், பிரசாதம் விற்பனை ஆகியவற்றின் மூலம் பணமோசடி செய்தது தொடர்பாக கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகர், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கைதான அர்ச்சகர் வெங்கடேஸ்வரனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
Feb 14, 2025 15:25 IST
விருதுநகர் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் - புறக்கணிப்பு போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் கனிமவள திருட்டை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் 2வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் எடுப்பட்டுள்ளனர்.
-
Feb 14, 2025 14:34 IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 மாணவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டு இன்று சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனது. இவ்விவகாரத்தில் தகவல் தெரிந்தும் அதனை மறைத்ததாக பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 14, 2025 14:32 IST
மூதாட்டியை கீழே தள்ளிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்: கள்ளக்குறிச்சி எஸ்.பி. உத்தரவு
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கீழே தள்ளிய தலைமைக் காவலர் ஜெயச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரனான படையப்பா (25) என்பவருடன் மருத்துவமனைக்கு வந்த நிலையில், அங்குள்ள காவலர் அறையில் படையப்பாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 பெண்களை படையப்பா தாக்கியுள்ளார். இதனை அடுத்து தலைமைக் காவலர் ஜெயச்சந்திரன், படையப்பாவை இழுத்து தள்ளும் போது, பாட்டி சின்னப்பொண்ணுவையும் கீழே தள்ளியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Feb 14, 2025 11:31 IST
சுமைதூக்கும் தொழிலாளிக்கு திடீர் மாரடைப்பு
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது சுமைதூக்கும் தொழிலாளி திவாகர் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றும் ஒப்பந்தக்காரர், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என திவாகரின் தாய், திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
Feb 14, 2025 11:26 IST
புதுச்சேரியில் மூவர் கொலை
புதுச்சேரி ரெயின்போ நகரில் மூன்று பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றார். 3 பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தால் அச்சத்தில் உறைந்துள்ளது அந்த பகுதியின் மக்கள்.
-
Feb 14, 2025 11:24 IST
தண்ணீருக்காக நடந்த சண்டை - கோபத்தில் கொந்தளித்த மக்கள்
கள்ளக்குறிச்சி அருகே பள்ளம் தோண்டிய போது ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரத்தில் குடிநீருக்காக பள்ளம் தோண்டியபோது, வல்லரசு மற்றும் கோவிந்தன் ஆகியோரிடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தன் படுகாயமடைந்தார். இந்நிலையில், வல்லரசுவை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Feb 14, 2025 10:43 IST
ராமநாதபுரம் அருகே கார் விபத்தில் 3 பேர் மரணம்
ராமநாதபுரம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. ஓட்டுநர் தூக்கக் கலத்தில் இருந்த நிலையில் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
-
Feb 14, 2025 10:40 IST
திருநள்ளாறு: போலி இணையதளம் - அர்ச்சகர் கைது
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பெயரில் போலி இணயதளம் செயல்பட்ட விவகாரத்தில் கோயில் அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சனீஸ்வரர் கோயிலுக்கு வர முடியாதவர்களுக்காக கோயில் இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைப்பது வழக்கம். பணம் செலுத்திய பின்னரும் பிரசாதம் வந்து சேரவில்லை என புகார் வந்ததில் போலி இணையதளம் நடத்தி பிரசாதம் அனுப்பி வந்தது அம்பலம். பெண்ணுடன் சேர்ந்து அர்ச்சகரே போலி இணையதளம் நடத்தியது தெரியவந்துள்ளது.
-
Feb 14, 2025 09:37 IST
விடுதி உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருச்செந்தூர் மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியொன்றில் இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 14, 2025 09:22 IST
கணவனை முடித்த மனைவியின் கை பக்குவம்
கடலூril கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து தினமும் அடித்து துன்புறுத்தி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்து கட்ட அவருக்கு மிகவும் பிடித்த மீன் குழம்பில் விஷத்தை கலந்து கொடுத்து மனைவி கொலை செய்துள்ளார்.
-
Feb 14, 2025 09:21 IST
எலுமிச்சை பழம் ரூ.5.9 லட்சத்திற்கு ஏலம்
புதுக்கோட்டையில் தைப்பூசத்தன்று பழனி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒற்றை எலுமிச்சை பழத்தை ரூ.5.09 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழனியில் அன்னதானத்தின்போது செய்யப்பட்ட பூஜையில் வைக்கப்பட்ட பழங்கள் ரூ.16,000 முதல் ரூ.40,000 வரை ஏலம் விடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.